செய்திகள் :

4 வயதில் நோய்; முடியாது என்ற வார்த்தையை தாண்டி… US Open சாம்பியன்! - அம்மாவுக்கு நன்றி சொன்ன Zverev

post image

“உன்னால் முடியாது” என்ற வார்த்தைகள் ஒரு குழந்தையின் கனவை முடக்கிவிடலாம். ஆனால், அந்த வார்த்தைகளையே தாண்டி இன்று உலக டென்னிஸின் உச்சத்தைத் தொட்டிருக்கிறார் ஜெர்மனி வீரர் Alexander Zverev.

2026 US Open ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் Ben Shelton-ஐ 6-3, 7-6(2), 5-7, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் Zverev. இது அவருடைய முதல் US Open பட்டமும், இரண்டாவது Grand Slam பட்டமும் ஆகும்.

4 வயதில் வந்த Type 1 Diabetes!

Zverev-க்கு வெறும் 4 வயதிலேயே Type 1 diabetes இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது அவரது எதிர்காலம், குறிப்பாக விளையாட்டு வாழ்க்கை குறித்து பல சவால்கள் இருந்தன. ஆனால், அவரது தாய் Irina Zverev, முன்னாள் professional tennis வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது , பின்னாளில் தன் மகனின் கனவுகளுக்கு துணையாக நின்றார்.

நோய் தனது மகனின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடாது என்பதில் Irina உறுதியாக இருந்ததாக Zverev தெரிவித்துள்ளார்.

“என் அம்மாதான்….”

US Open வெற்றிக்குப் பிறகு பேசிய Zverev, தனது வெற்றிப் பயணத்தில் அம்மாவின் பங்கு குறித்து உணர்ச்சிபூர்வமாகப் பேசினார். அவரைத் தன்னுடைய வாழ்க்கையின் மிக முக்கியமான, வலிமையான மனிதர்களில் ஒருவராகக் குறிப்பிட்டார்.

அம்மாவின் நம்பிக்கையுடன் சேர்ந்து, தந்தை Alexander Zverev Sr மற்றும் சகோதரர் Mischa உள்ளிட்ட தனது அணியினருக்கும் Zverev நன்றி தெரிவித்தார்.

தோல்வியிலிருந்து சாம்பியன் வரை!

இதற்கு முன்பு 2020 US Open இறுதிப்போட்டியில் வெற்றிக்கு மிக அருகில் சென்று தோல்வியடைந்த Zverev, ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அதே போட்டியில் சாம்பியனாகியிருக்கிறார்.

இந்த ஆண்டு French Open பட்டத்தையும் வென்றிருந்த Zverev-க்கு, US Open வெற்றி 2026-ஐ மறக்க முடியாத ஆண்டாக மாற்றியுள்ளது.

4 வயதில் வந்த நோய் அவரை நிறுத்தவில்லை… “முடியாது” என்ற வார்த்தைகளும் அவரைத் தடுக்கவில்லை. தன் தாய் தந்த தன்னம்பிக்கையை உந்துகோலாக இன்று US Open கோப்பையுடன் நிற்கிறார்  Alexander Zverev.

தேசிய கீதத்துக்கு முன் வந்தே மாதரம் - இந்தியா, ஆப்கன் போட்டியில் நடந்த மாற்றம்!

இந்தியா–விளையாடும் போட்டி என்றாலே கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் ஆட்டத்தின் மீதுதான் இருக்கும். ஆனால், டெல்லியில் நேற்று நடைபெற்ற முதல் டி20 போட்டி தொடங்குவதற்கு முன்பே, மைதானத்தில் நடந்த ஒரு நிகழ்வு அன... மேலும் பார்க்க

'48 லேப்ஸ்; 282.8 கி.மீ கவரேஜ்!' - ரேஸில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்? - உண்மை என்ன?

லண்டனின் சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் நடந்த 'Michelin Le Mans Cup' கார் ரேஸ் பந்தயத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்டிருந்தார். சிறப்பு விருந்தினராக இந்த ரேஸூக்கு வந்த முதல்வர் விஜய், ரேஸை கொடியசைத்து தொட... மேலும் பார்க்க

தங்கம் வென்ற மதுரா; வைரலாகும் கியா பானர்ஜி: நிறத்தின் அடிப்படையில் பாராட்டு? எதை நோக்கி செல்கிறோம்?

சமூக வலைதளங்களில் ஒரு தடகள வீரர் அல்லது வீராங்கனை சாதனைகளைப் படைக்கும்போது, அந்த வெற்றிகள் எந்த அளவிற்கு கொண்டாடப்படுகின்றன என்பது பல நேரங்களில் அவர்களின் திறமையை மையப்படுத்தியதாக மட்டும் இருப்பதில்லை... மேலும் பார்க்க

“ஒரு கேட்ச்... ஒரு பொய்!” ஹர்மன்ப்ரீத் பெயரில் வைரலான AI வீடியோ சொல்லும் எச்சரிக்கை!

கிரிக்கெட் போட்டியில் இப்படியொரு கேட்ச்சை பார்த்தால், ஒரு நிமிடம் நம்மாலேயே நம்ப முடியாது. ஓடிவரும் வீராங்கனை… திடீரென தலைகீழாகச் அந்தர்பல்டி (backflip ) அடித்து கேட்ச் பிடிக்கிறார். இந்தக் காட்சி சமூ... மேலும் பார்க்க

`நடிகர் அஜித் குமார் கலந்துகொள்ளும் கார் ரேஸ்' - முதல்வர் விஜய் எப்போது தொடங்கி வைக்கிறார்?

தமிழ்நாட்டுக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் விஜய் செப்டம்பர் 10-ம் தேதி அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, முதல்வர் விஜய் ஆலோசகர் விஷ்ணு ரெட்டி உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகளுடன் பிரிட்டன... மேலும் பார்க்க

சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்... “முறியடிக்க நல்ல வாய்ப்பு இருக்கு” – விவ் ரிச்சர்ட்ஸ்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் சச்சின் டெண்டுல்கர். இவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 15,921 ரன்கள் அடித்துள்ளார். இந்த சாதனையை முறியடிக்கவே முடியா... மேலும் பார்க்க