செய்திகள் :

``48 மணி நேரத்தில் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்..."- முதல்வர் விஜய்யை சாடும் நயினார் நாகேந்திரன்

post image

தமிழ்நாட்டில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளதாக, பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``கடந்த மாதம் 10-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் புதிய அரசு பதவியேற்றது. முதல்வர் விஜய் ஆட்சியை வெற்றிகரமாக நடத்துவார் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில், தற்போது நிலைமை முற்றிலும் தலைகீழாக மாறியுள்ளது. கடந்த கால தி.மு.க ஆட்சியில் பாலியல் குற்றங்கள் 125 சதவீதம் அதிகரித்திருந்த நிலையில், தற்போதைய தவெக ஆட்சியில் அது ஏற்கனவே 100 சதவீதத்தைத் தாண்டி மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

முதலமைச்சர் விஜய்
முதலமைச்சர் விஜய்

கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 20 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் 15 வழக்குகள் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தவிர, இதே குறுகிய காலத்திற்குள் 20-க்கும் மேற்பட்ட படுகொலைகளும், மொத்தம் 207 குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களின் புழக்கம் தடையின்றி அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மேடைகளில் நரம்பு புடைக்கப் பேசும் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களே, பாதிக்கப்பட்ட அந்த மூன்று வயதுக் குழந்தைக்கும், கரம்பூரில் பாதிக்கப்பட்ட ஏழு வயது பள்ளி மாணவிக்கும் யார் பதில் சொல்லப் போகிறார்கள்? ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-க்களே நேரடியாக வந்து மிரட்டல் விடுக்கும் அளவிற்குத் தான் சட்டம்-ஒழுங்கு இருக்கிறதா?

மக்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் நிர்வாகம் செய்யும் த.வெ.க அரசு, இன்னும் எத்தனை நாட்களுக்குத் தாங்கப் போகிறது? மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிய இந்த ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டிய ஆட்சி. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட முதல்வர் விஜய் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை?" - சீமான் காட்டம்!

கும்மிடிப்பூண்டியில் 3-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிற... மேலும் பார்க்க

TMC : ஒரு எம்.பி கூட இல்லாத, அதிகம் அறியப்படாத கட்சியுடன் 20 திரிணாமூல் MP-கள் இணைந்த பின்னணி!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவில் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறாத ஒரு புதிய கட்சியுடன் தாங்கள் இணைந்து விட்டதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிட... மேலும் பார்க்க

``ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவர்தான்; ஆனால்..." - ல.ஜ.க-விலிருந்து விலகியது குறித்து தாடி பாலாஜி

தேர்தலுக்கு முன் லட்சிய ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த நடிகர் தாடி பாலாஜி, தற்போது அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.ஆரம்பத்தில் திமுக அனுதாபி எனச் சொன்னார்கள். விஜய் கட்சி தொடங்கிய போது அவரது ப... மேலும் பார்க்க

'காலி சேர்கள்... பாதியில் கலைந்த கூட்டம்.!' - தவெகவின் மதுராந்தக இணைப்பு விழா சொதப்பியதா?

மதுராந்தகத்தில் நேற்று மாற்றுக்கட்சியினரின் மாபெரும் இணைப்பு விழாவை நடத்தியிருந்தது தவெக. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல் தலைமையில் நடந்த ... மேலும் பார்க்க

`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' - அண்ணாமலை

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்ததிலிருந்து தொடர்ந்து சட்ட ஒழுங்கு சிக்கல்கள் நீடிப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆரவலர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர். முதல்வர் விஜய் தலைமையின் கீழ் இயங்கும் காவல்துறை அ... மேலும் பார்க்க

'ட்ரம்பின் ஒப்பந்தம் எங்களைக் கட்டுப்படுத்தாது' - ஈரான் அமைதி ஒப்பந்தத்தில் முரண்படும் இஸ்ரேல்

வருகிற 19-ம் தேதி ஈரான் அமைதி ஒப்பந்தம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இந்த நேரத்தில் ஈரான் போரின் முக்கிய தரப்புகளில் ஒன்றான இஸ்ரேல் தனது கர... மேலும் பார்க்க