TVK Vijay: "அனைவரும் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள்.!"- தவெக தலைவர் விஜய் வேண்ட...
”50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் விசிட்டிங் கார்டு கூட அடிச்சது கிடையாது” - வைத்திலிங்கம்
ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வைத்திலிங்கம். இவர் புகைப்படத்துடன் கூடிய ஆயிரக்கணக்கான விசிட்டிங் கார்டுகள் மற்றும் மாடல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆகியவற்றை சென்னையில் தேர்தல் அலுவலர்கள் பறிமுதல் செய்ததாக சொல்லப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து தஞ்சாவூரில் வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அவர் கூறியதாவது, ``நான் பொது வாழ்க்கைக்கு வந்து 50 வருடங்களுக்கும் மேல் ஆகுது.

இதுவரைக்கும் நான் விசிட்டிங் கார்டு கூட அடிச்சது கிடையாது. எனது அரசியல் வாழ்க்கைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தில் யாரோ என் புகைப்படத்துடன் விசிட்டிங் கார்டு அடித்து உள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் எனக்கு அவதூறு பரப்பும் வகையில் குறிப்பிட்ட ஒரு தனியார் தொலைக்காட்சியில் மட்டும் செய்தி ஒளிபரப்பப்பட்டது. இது குறித்து நான் அந்த தொலைக்காட்சி நிருபரிடம் பேசி உள்ளேன். இது ஒரு தவறான செய்தி.
இதற்கு மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டும் என்றுள்ளேன். மறுப்பு அறிக்கை வெளியிடவில்லை என்றால் காவல்துறையிடம் புகார் கொடுக்க முடிவு செய்துள்ளேன். சசிகலா காலில் விழுந்து தான் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனார். இது குறித்து அவர் பெரியவர் காலில் விழுவது தவறு இல்லை என்று சொல்கிறார். பின்னர் ஏன் சசிகலாவை எடப்பாடி பழனிசாமி கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லை" என்றார்.















