Doctor Vikatan: சிக்கன் சூப், சிக்கன் பிரியாணி சாப்பிட்டால், இருமல், சளி சரியாகு...
50 ஆண்டுகால சகாப்தம்; எளிமை தான் இவர் அடையாளம் – காலமானார் ஏவிஎம் சரவணன்
தமிழ் சினிமாவில் முக்கியமான தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த ஏவிஎம் சரவணன் வயது மூப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 86.
நேற்று தான் இவருடைய பிறந்த நாளை குடும்பத்தினர் கொண்டாடிய சூழலில் இன்று காலமானார்.
தமிழ்த் திரையுலகில் பல வெற்றிப் படங்களை ஏ.வி. எம் நிறுவனம் வழங்கியதில் சரவணனின் பங்கு அளப்பரியது.
தந்தையின் காலத்துக்குப் பிறகு தயாரிப்பு நிறுவனத்தை அதே பாரம்பரியத்துடன் இவர் நடத்தியதை தமிழ் சினிமாவில் பலரும் இப்போது நினைவு கூர்கிறார்கள்.

அமைதியாகப் பேசுபவர். வெள்ளை பேன் ட் வெள்ளை சர்ட் இவரது அடையாளம். பெரிய பின்புலம் இருந்த போதும் கைகட்டி இருக்கும் அவரது எளிமை, தன் நிறுவனத்தைப் பற்றி ஏதாவது செய்தி வந்தால் தன் கைப்பட நன்றிக் கடிதம் அனுப்பும் வழக்கம் என இவர் குறித்துப் பேச எவ்வளவோ தகவல்கள் இருக்கின்றன.
சினிமா போலவே சீரியல்களும் தயாரித்தார். விகடன் குழுமத்திலிருந்து வழங்கப்படும் உயரிய சினிமா விருதான எஸ் .எஸ் வாசன் விருது கடந்தாண்டுக்கு முந்தைய ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.
சினிமா பிரபலங்கல் பலரும் சரவணனுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்,
மறைந்த சரவணனின் உடலடக்கம் இன்று மாலை ஏவிஎம் ஸ்டூடியோ வளாகத்தில் நடைபெறுகிறது.


















