செய்திகள் :

600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி

post image

தொழிலதிபர் முகேஷ் அம்பானி இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பணக்காரராக திகழ்கிறார். அவரது வீடு மும்பையின் தென்பகுதியில் இருக்கிறது. அண்டிலியா என்ற அந்த வீடு மும்பையில் அனைவராலும் பார்க்க விரும்பும் ஒரு இடமாக இருக்கிறது. 27 மாடிகள் கொண்ட இந்த அண்டிலியா கட்டிடம் ரூ.15,000 கோடி மதிப்புடையது. இந்த கட்டிடத்தை பராமரிக்கவும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும் முகேஷ் அம்பானி ஒவ்வொரு ஆண்டும் பல கோடி செலவு செய்து வருகிறார் . அதோடு ஒவ்வொரு மாதமும் 70 லட்சம் மின் கட்டணமாக செலுத்தப்படுகிறது. இந்த கட்டிடத்தில் சமையல்காரர்கள், துப்புரவு தொழிலாளர்கள் என மொத்தம் 600 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் அதிகமானோர் அங்கேயே தங்கிக்கொள்ள இடவசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

அம்பானி குடும்பம்

அம்பானி குடும்பத்தினர் மிகவும் எளிய உணவையே விரும்பினாலும், அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் மிகவும் சத்தான உணவு வழங்கப்படுகிறது. அம்பானி குடும்பத்தினர் கேழ்வரகில் தயாரிக்கப்படும் உணவு, சிறுதானியத்தில் தயாரிக்கப்பட்ட பிரெட், குஜராத்தி முறை உணவு மற்றும் சலாட்களையே அதிகமாக விரும்பி சாப்பிடுகின்றனர். இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக தினமும் 4000 சம்பாத்தி தயாரிக்கப்படுகிறது.

இந்த சப்பாத்திகளை தயாரிக்க தானியங்கி சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் சமையல் அறையில் நிறுவப்பட்டு இருக்கிறது. அதனை சமையல் கலைநிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் தலைமை சமையல்காரர் ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி போன்று செயல்படுகிறார். இங்கு ரொட்டி தயாரிக்கும் ஒரு சமையல்காரருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.2 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஆண்டிலியாவில் 3 மாடியில் தொங்கும் கார்டன் அமைக்கப்பட்டுள்ளது. 160க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்த ஆறு அடுக்கு கார் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர்களை தரையிறக்கும் தளம் போன்ற வசதியும் இருக்கிறது.

அச்சுறுத்தும் Claude Mythos: சைபர் பாதுகாப்பை உறுதிசெய்ய நிர்மலா சீதாராமன் ஆலோசனை

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. தொழில் நுட்பம் மிகப்பெரிய அளவில் தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வந்த பிறகு மனிதர்கள் செய்யவேண்டிய வேலையின் அளவு... மேலும் பார்க்க

தயாராகும் 11,000 வீடுகள்: மும்பை தாராவி கட்டடங்களில் வசிப்பவர்களுக்கு 754 சதுர அடி வீடு

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவியில் உள்ள குடிசைகள் அனைத்தையும் அகற்றிவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பொறுப்பு அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த... மேலும் பார்க்க

"தான் உயிரியல் தந்தை இல்லை என்றால் குழந்தைக்கு பராமரிப்புத் தொகை கொடுக்கவேண்டாம்" - சுப்ரீம் கோர்ட்

கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் போது ஆண்கள் தங்களது மாஜி மனைவி மற்றும் குழந்தைகளுக்குப் பராமரிப்புத் தொகை கொடுக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று கூறி ஆ... மேலும் பார்க்க

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கு: "யாரும் குற்றவாளிகள் இல்லை" - கடைசியாக இருந்த 4 பேரும் விடுதலை

மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் கடந்த 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி நடந்த நான்கு குண்டு வெடிப்பில் 31 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். மசூதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இக்க... மேலும் பார்க்க

தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாகப் பேரணி; பாஜக அமைச்சரை நடுரோட்டில் வறுத்தெடுத்த இளம் பெண்

சமீபத்தில் மக்களவையில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இதையடுத்து எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பா.ஜ.கவினர் மும்பையில் போராட்டம் நடத்தினர். மும்பையில் பா.ஜ.க அமைச்சர் கிரீஷ் மகாஜன்... மேலும் பார்க்க

பெங்களூரு: `வெயில் தாங்க முடியலை' - ஹோட்டலில் ஏ.சி அறை வாடகைக்கு எடுத்து வெப்பத்தை தணித்த பெண்

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. காலை 10 மணிக்கு மேல் மக்களால் வெளியில் வர முடியாத அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவ மழையும் குறைவாகவே இருக்கும்... மேலும் பார்க்க