செய்திகள் :

'8 பெண்களின் பகிரமுடியா அந்தரங்க வீடியோக்கள், வாட்ஸ்அப் சாட்கள்' - மதூர் சத்யா சிக்கியது எப்படி?

post image

சிபிஐ கட்சியைச் சேர்ந்தவரும் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்துகொண்டு பிரபலமானவருமான மதூர் சத்யாவின் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகாரில் நேற்று முன்தினம் காவல்துறையினர் அவரைக் கைது செய்திருந்தனர். மதூர் சத்யா எப்படி சிக்கினார்?

மதூர் சத்யா
மதூர் சத்யா

பெண்களை ஏமாற்றி அவர்களுடன் அந்தரங்க வீடியோக்களை எடுத்து வெளியில் பரப்பியதாக மதூர் சத்யா மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. அவர் மீதான புகாரைப் பாதிக்கப்பட்ட பெண்கள் முதலில் சி.பி.ஐ கட்சிக்கே எடுத்து சென்றிருக்கின்றனர்.

சி.பி.ஐ யின் முக்கிய நிர்வாகிகள் கூடிப் பேசி புகார் மற்றும் ஆதாரங்களின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, அதன்பிறகே அவரை கட்சியை விட்டு நீக்கியதோடு, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களின் புகார் பற்றி அறிய இந்த விவகாரத்தைக் கையாண்ட சி.பி.ஐ-யைச் சேர்ந்த பாரதி மற்றும் ரஞ்சனி கண்ணம்மாவிடம் பேசினோம்.

"அந்த நபர் மீது புகார் வந்தவுடன் எங்களுக்கே முதலில் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் தத்துவம்.

மதூர் சத்யா
மதூர் சத்யா

அதன்படி பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரை அவர்களின் தனியுரிமையை மதித்து விசாரித்தோம். மார்ச் 13 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், எங்கள் அமைப்பின் தோழர் ஒருவரை அலைபேசி மூலம் தொடர்புகொண்டு மனம் நொந்துப் பேசி புகார் கூறியிருக்கிறார்.

அன்று மாலையே முக்கிய நிர்வாகிகளெல்லாம் ஆன்லைன் வழியாகக் கூடி புகாரின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, முகாந்திரம் இருப்பின் மதூர் சத்யாவை கட்சியை விட்டு நீக்க வேண்டுமென முடிவெடுத்து விட்டோம். புகார் கூறிய பெண் பெரும் மன உளைச்சலிலும் பதற்றத்திலும் இருந்தார்.

அவரைத் தேற்றி தைரியமூட்டி, அவரின் அடையாளம் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்வோம் என உத்தரவாதம் கொடுத்தோம். அதன்பிறகுதான் அந்தப் பெண் கொஞ்சம் நம்பிக்கையாக தன்னிடம் இருந்த வீடியோக்களை எங்களிடம் ஒப்படைத்தார்.

வெளியேவே பகிரமுடியாத அந்தரங்க வீடியோக்கள் அவை. பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலம் அவரின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, நட்பாகப் பழகும் பெண்களிடம் நம்பிக்கை கொடுத்து உறவில் இருந்திருக்கிறார். அவர்களுடன் தனிமையில் அந்தரங்கமாக இருக்கும் போது அவற்றை வீடியோவாகவும் எடுத்திருக்கிறார்.

எடுத்த வீடியோவை வெளியில் மற்ற பெண்களுக்கும் பகிர்ந்து, வேறு சில பெண்களையும் ஏமாற்ற முயன்றிருக்கிறார். தங்களின் வீடியோ அவரின் மூலம் வெளியில் பரவுவது தெரிந்த பிறகுதான் பாதிக்கப்பட்ட பெண்கள் மன அழுத்தத்துக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியிருக்கின்றனர்.

மதூர் சத்யா
மதூர் சத்யா

இது எல்லாமே அமைப்புக்கு வெளியே இருக்கும் பெண்கள். அமைப்புக்குள் இருக்கும் பெண்கள் ஒரு சிலருக்கும் தவறான எண்ணத்தில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்திருக்கிறார். அதன் ஸ்க்ரீன் ஷாட்களும் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. இப்போது வரைக்கும் 8 பாதிக்கப்பட்ட பெண்கள் கமிட்டியில் புகாரளித்திருக்கின்றனர்.

2 பெண்கள் காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கின்றனர். மதூர் சத்யா அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதாலும் பிரபலமானவர் என்பதாலும் அவர் மீது புகார் கொடுக்க பெண்கள் தயங்கினர். அவர்களைத் தேற்றி புகாரளிக்க செய்து, அவர்களுக்கான சட்ட உதவிகளையும் பார்த்துக் கொள்ள சி.பி.ஐ தயாராக இருக்கிறது" என்றனர்.

தேர்தல் விதியை மீறி பரிசுப்பொருள்: வேலூர் மேயருக்கு போலீஸ் சம்மன்; திமுக எம்எல்ஏ-வும் சிக்குகிறாரா?

வேலூர் சத்துவாச்சாரியில், கடந்த 19-ம் தேதி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பரிசுப்பொருள் வழங்கியதாக, வேலூர் மாநகராட்சி தி.மு.க மேயர் சுஜாதா உள்ளிட்ட மூன்று பேர் மீது `பி.என்.எஸ் 173 - தேர்தல்கள் தொடர்பான... மேலும் பார்க்க

புதுச்சேரி: முதல்வர் ரங்கசாமிக்கு ரூ.35 லட்சம் கடன்; சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

வேட்பு மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அதன்படி முதல்வர் ரங்கசாமிக்குத் தற்போதைய கையிருப்புத் தொகை ரூ.33,339/-.... மேலும் பார்க்க

"நான் கும்பிட்டா முகத்தைத் திருப்பிடுவாங்க மம்தா பானர்ஜி" - கொல்கத்தா ஐஏஎஸ் அதிகாரி முருகன் பேட்டி

கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மத்திய அரசின் தேயிலை வாரியத்தில் டெபுடி சேர் பெர்சனாகப் பணிபுரிந்து வருபவர் சி.முருகன் ஐ.ஏ.எஸ்.சட்டசபைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மேற்கு வங்கத்தில் அரசி... மேலும் பார்க்க

கேரளம்: "பாஜக - சிபிஎம் இடையே பரஸ்பர உடன்பாடு" - குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்

கேரள மாநிலத்தில் ஏப்ரல் 9-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்கும் நிலையில் தாமதமாக வேட்பாளர்களை அறிவித்திருந்தது காங்கிரஸ். இன்றும், திங்கள் கிழமையும் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய காங்கிரஸ் வேட்பாளர்களுக்... மேலும் பார்க்க

"CSK-விற்கு ஏன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் விளையாடவில்லை?" - ஸ்டாலினைப் போராடச் சொல்லும் TTV

கிட்டத்தட்ட ஒரு மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது அங்கங்கே பயணம், பிரசாரம் என அரசியல் களப் பரபரப்பிற்குச் சொல்லவே வேண்டாம். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டெல்லி பயணம் ... மேலும் பார்க்க

”கூட்டணிக்காக விஜய் வீட்டு வாசலைத் தட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி” - ஓ.பன்னீர்செல்வம் தாக்கு

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்நடைபெற்றது. அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், முன்னாள் முதல்வர்ஓ.பன்னீர்செ... மேலும் பார்க்க