செய்திகள் :

நீளிரா: "ஈழம் தொடர்பான கதைகளைச் சொல்லணுங்கிறது என்னுடைய கனவு" - இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்

post image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் 'நீளிரா' திரைப்படம் வருகிற ஏப்ரல் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

நீளிரா படத்தில்...
நீளிரா படத்தில்...

ஈழப் போரை மையப்படுத்திய இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, சோமிதரன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், "படம் டைரக்ட் பண்ணனும்ங்கிற கனவுலதான் இங்க வந்தேன். அதன் பிறகு ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமா படங்களைத் தயாரிக்கணும்னு ஆசைப்பட்டேன்.

எங்களுடைய தயாரிப்புல வர்ற படங்கள்ல, கார்த்திக் சுப்புராஜ் வழங்கும்ங்கிற கார்டு போட்டிருப்போம். தயாரிப்பாளர்ல கார்த்திகேயன் சந்தனாம் பெயர் இருக்கும். ஆனா, இந்தப் படத்துல தயாரிப்பாளர்ல என்னுடைய பெயரையும் போடுங்கனு நான் கேட்டேன். என்னுடைய கனவு இது.

எனக்கு ஈழம் பற்றிய விஷயங்கள்ல ஒரு நெருக்கம் இருக்கு. 'காட்சிப்பிழை' என்கிற குறும்படம் மூலமாகத்தான் நான் 'நாளைய இயக்குநர்' நிகழ்ச்சியில செலக்ட் ஆனேன். அந்தக் குறும்படம் ஈழப் போர் பற்றியதுதான்.

Karthik Subbaraj
Karthik Subbaraj

போர் எப்படியான மனநிலையை உருவாக்கும்ங்கிறதை எனக்கு கடத்திய படம் 'தி பியானிஸ்ட்'. அதுபோல ஒரு படம் பண்ணனும்னு எனக்கு ஆசை இருந்தது.

கலை என்பது வெறும் கருவி மட்டும் கிடையாது, நாம் பார்த்திடாத கதைகளைச் சொல்வதற்கான களம் அது.

ஈழ இயக்குநரின், ஈழம் தொடர்பான படத்தை மெயின்ஸ்ட்ரீம் சினிமாவில சொல்லணும்ங்கிறது என்னுடைய கனவு. இப்போ இருக்கிற போர்ச் சூழலிலும் இந்த 'நீளிரா' படத்தைப் பொருத்திப் பார்க்கலாம்" என்றார்.

தேன் சுடரே: ''அந்த வார்த்தைக்குப் பெரிய பஞ்சாயத்தாச்சு" - பாடலாசிரியர் மோகன் ராஜன் | வரித்துணையே 11

முன்னணி பாடலாசிரியர்கள் எழுதிய ஹிட் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களிடமே அந்தப் பாடல்கள் உருவான விதம் குறித்தும், அந்த வரிகளின் உண்மைக் கதைகள் குறித்தும் அவர்களின் வாய்மொழியாகவே கேட்டுப் பகிரும் தொடர... மேலும் பார்க்க

Kalidas 2: "இதை நான் சிம்பதிக்குச் சொல்லல; இதுதான் ரியாலிட்டி" - பரத் வருத்தம்

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். Kalidas 2இயக்குநர் ஶ்ரீ செந்தில... மேலும் பார்க்க

Kalidas 2: "இத்தனை வருடங்கள் நடிக்காமல் இருந்தது ஏன்?'' - பதில் தந்த 'பூவே உனக்காக' சங்கீதா

பரத் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான 'காளிதாஸ்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அப்படத்தைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்திருக்கிறார்கள். Kalidas 2இயக்குநர் ஶ்ரீ செந்தில... மேலும் பார்க்க

மணிரத்னம்: `அன்று சொன்னதை, இன்று செய்தார்!' - விஜய் சேதுபதி, சாய் பல்லவி இணையும் படத்தின் அப்டேட்ஸ்

மணிரத்னம் இயக்கியிருந்த 'தக் லைஃப்' திரைப்படம் கடந்தாண்டு திரைக்கு வந்திருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் இயக்கவிருக்கும் திரைப்படம் குறித்தான பேச்சு கடந்த சில மாதங்களாக சினிமா வட்டாரத்தில் கிசு கிச... மேலும் பார்க்க