செய்திகள் :

"9.1 கோடி ஈரான் மக்கள் பாதிக்கப்படுவதை விரும்பவில்லை; ஆனால், போருக்குக் காரணம்..." - ட்ரம்ப்

post image

ஈரானில் வருகிற ஜூலை 9-ம் தேதி வரை உச்சத் தலைவர் அயோதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

இந்த நேரத்தில் போர் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேசும் போது, "கச்சா எண்ணெய் விலையானது நாம் இந்தப் போரைத் தொடங்குவதற்கு முன்பு ஒரு பேரலுக்கு என்ன விலை இருந்ததோ, அதைவிடக் குறைவான நிலைக்கு இப்போது வந்துவிட்டது என்றுதான் நான் நினைக்கிறேன்.

ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்
ஈரான் Vs அமெரிக்கா, இஸ்ரேல் போர்

ஈரானில் அணு ஆயுதத்திற்கு இடமில்லை. 'அணு உறைதுகள்' (Nuclear dust) என்று அழைக்கும் அந்தச் செறிவூட்டப்பட்டப் பொருட்களை நாம் கைப்பற்றப் போகிறோம்.

நான் இதில் இவ்வளவு தீவிரமாக இறங்கியதற்கு ஒரே ஒரு வலுவான காரணம்தான் இருக்கிறது. அது, ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்கக் கூடாது என்பதுதான்.

நான் அங்கு ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. ஆனால் உண்மையில் அங்கு ஆட்சி மாற்றம் நடந்துவிட்டது. முதல் ஆட்சி போய்விட்டது, இரண்டாவது ஆட்சியும் போய்விட்டது.

இப்போது இருக்கும் மூன்றாவது ஆட்சி கொஞ்சம் பகுத்தறிவுடன் நடக்கும் என்று நினைக்கிறேன். பொறுத்திருந்து பார்ப்போம்.

நாம் எப்படியும் ஒரு வழியில் வெற்றி பெறத்தான் போகிறோம். ஒன்று, நாம் ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்வோம் அல்லது இந்தப் போரை முழுமையாக முடிப்போம், அவ்வளவுதான்.

இந்தப் போரை முடிப்பது ஒன்றும் நமக்குக் கடினமான காரியம் அல்ல. ஆனால், அங்கிருக்கும் 91 மில்லியன் (9.1 கோடி) மக்களைப் பாதிக்க நான் விரும்பவில்லை என்பதால், ஒரு உடன்படிக்கையைச் செய்துகொள்ளவே நான் விரும்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

த.வெ.க-வில் இணைந்தார் மூத்த வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்!

சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் ந.ராஜா செந்தூர் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க.) இணைந்துள்ளார். தமிழக மின்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் முன்னிலையில் அவர் கட்ச... மேலும் பார்க்க

மாணவர்கள் போராட்டம்: `ஆணி லத்தி... கற்கள் நிரம்பிய லாரி' - டெல்லி நீதிமன்றத்தில் பரபரத்த வாதம்!

காக்ரோச் ஜனதா கட்சி முன்னெடுத்த போராட்டம் தற்போது மாணவர்கள் போராட்டமாக மாறியிருக்கிறது. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும், நீர் தேர்வால் தற்கொலை செய்துகொண்டவர்களுக்கு... மேலும் பார்க்க

``முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயர் மாற்றம்" - அரசாணை வெளியிட்ட தமிழ்நாடு அரசு!

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் பெயரை 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என தவெக அரசு பெயர் மாற்றம் செய்துள்ளது. இது தொடர்... மேலும் பார்க்க

`பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறேன்; ஆனால்...' - அண்ணாமலை கருத்து!

நீர் தேர்வு வினாத் தாள் கசிவு, அரசுத் தேர்வு குளறுபடி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்தைக் கலைக்க பா.ஜ.க அரசு மாணவர்கள்... மேலும் பார்க்க

Exclusive | “அண்ணா ஹசாரே போராட்டத்தை அரசியலாக்கியது ஆம் ஆத்மிதான்" – மாணிக்கம் தாகூர் எம்.பி பதிலடி

தலைநகர் டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் மாணவர்கள் – இளைஞர்களின் போராட்டம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவைத் தாண்டி, தேசிய அளவிலான கல்விக் கொள்கை விவாதமாக மாறி வருகிறது. மத்திய கல்வி அமைச்சர் ... மேலும் பார்க்க