செய்திகள் :

"90% பேர் விமர்சிக்குறாங்க, அன்னைக்கு 10% பேர் கூட.!"- தேசிய விருது விமர்சனத்துக்கு தனுஷ் பதிலடி

post image

2024-ம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான 72- வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தன. அதில் தனுஷ் இயக்கி நடித்த 'ராயன்' படத்திற்கு சிறந்த தமிழ் படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த வருடத்தில் நிறைய நல்ல படங்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் 'ராயன்' படத்திற்கு தேசிய விருதா? என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

ராயன்
ராயன்

இந்நிலையில் நேற்று (ஜூலை.26) தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தனுஷ் 'ராயன்' படத்திற்கு தேசிய விருது கிடைத்தது குறித்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், " 'ராயன்' படத்துக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. அந்த வருடத்தில் ராயனை விட நல்ல படங்கள் வெளியாகியிருந்தது. அந்தப் படங்களின் ரசிகர்கள் ஆதங்கத்தில் இருக்கிறார்கள், அதை மதிக்கிறேன்.

'அது ஒரு கனா காலம்' நடித்த போது சின்னப் பையனாக இருந்தேன். தேசிய விருது கட்டாயம் கிடைக்கும் என்றார்கள். நானும் ஆசையோடு இருந்தேன். ஆனால், விருது கிடைக்கவில்லை. ‘புதுப்பேட்டை’க்கு விருது கிடைக்கும் என்று எல்லாரும் சொன்னார்கள். அப்போதும் கிடைக்கவில்லை.

'மயக்கம் என்ன', '3', 'மரியான்', 'ராஞ்சனா', 'வடசென்னை', ‘கர்ணன்' என பல படங்களுக்கும் விருது கிடைக்கவில்லை. அப்போதெல்லாம் யாரும் பேசவில்லை.

தனுஷ்
தனுஷ்

இன்றைக்கு 90% பேர் விமர்சிக்கின்றனர். அன்றைக்கு 10% பேர் கூட எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. தட்டி விடாதீர்கள்...தட்டிக் கொடுங்கள். அஜித் சார் சொன்ன மாதிரி தான் 'நீயா தோத்துட்டன்னு ஒத்துக்குற வரைக்கும் உன்னைய யாராலையும் தோற்கடிக்க முடியாது" என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் தனுஷ்.

Jana Nayagan: "கொசுக்கடி இல்லாம தூங்கணும்னு நினைச்சவர், இப்போ முதல்வர்கூட..." - இரா.சரவணன் பேட்டி

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியாகியிருக்கிறது. எச். வினோத் இயக்கியிருக்கும் இந்தப் படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த 'பகவந்த கேசர... மேலும் பார்க்க

Rashmika Mandanna: "அவர்கள் திட்டதோடு இருந்தது எனக்கு பயத்தைத் தந்தது!' - ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறார். முக்கியமாக, பாலிவுட்டிலும் முக்கிய நாயகியாக உருவெடுத்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனாபாலிவுட்டில் இத்தகைய வெற்றி கிடைத்ததற்காக க... மேலும் பார்க்க

"தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்; என் பிள்ளைகள் 'இவர்களைப்' போல வளர வேண்டும்" - ஜோதிகா பதிவு

வினாத்தாள் கசிவிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர‌ பிரதான் பதவி விலக வேண்டும் என்கிற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.இந்தக் கருத்தை முன்வைத்து நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக... மேலும் பார்க்க

Vimal: ''அதை பற்றி எனக்கு தெரியாதுங்க!'' - செக் மோசடி வழக்கு பற்றிய கேள்விக்கு விமலின் பதில்

செக் மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நேற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 'மன்னர் வகையறா' திரைப்படத்தைத் தயாரிக்கப் ஃபைனான்சியர் கோபியிடம் விமல் கடன் வாங்கி... மேலும் பார்க்க

Jana Nayagan: `இன்னும் சினிமா பண்ணலையாங்கிற கேள்வி அவ்ளோ வலி தரும்; இப்ப.!' - நடிகர் அருண்

`ஜனநாயகனைக் கொண்டாடி வருகிறார்கள்' தமிழக முதல்வர் விஜய்யின் ரசிகர்கள். சில அமைச்சர்கள் 'இனி திரையில் அவரைப் பார்க்க முடியாதே' எனக் கண் கலங்கி அழுத வீடியோக்கள், விமர்சனங்களையும் ட்ரோல்களையும் ஒருசேர சந... மேலும் பார்க்க

Jana Nayagan: "என் காட்சிகள் நீக்கப்பட்டது வேதனையா இருக்கு; அதிர்ஷ்டமில்லாதவளாக..." - நடிகை ஆனந்தி

நடிகை ஆனந்தி கண்கலங்கியவாறு அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். ரத்னகுமாரின் '29', சூர்யாவின் 'கருப்பு', விஜய்யின் 'ஜனநாயகன்' என அடுத்தடுத்து அவர் நடித்த திரைப்படங்களில், அவ... மேலும் பார்க்க