சோத்துப்பாறை:அரசாணை வராமல் திறக்கப்பட்ட பாசன நீர்; ரீல்ஸ் போட்டு அத்துமீறிய தவெக...
Aakasamlo Oka Tara: "சினிமாவுக்கு வரலன்னா கிரிக்கெட்டர் ஆகி இருப்பேன்"- ஜி.வி பிரகாஷ்
நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு திரைப்படம் 'ஆகாசம்லோ ஒக தாரா'.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தில் சாத்விகா வீரவல்லி, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று (நவ.17) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய ஜி.வி.பிரகாஷ், ‛‛இதுவரை பல மொழிகளில் 124 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்தது.
'யூத்', 'இருமுடி', 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்', 'மண்டாடி' என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இப்போது நல்ல கதை அம்சம் கொண்ட 'ஆகாசம்லோ ஒக தாரா' படத்துக்கு இசையமைத்து இருக்கிறேன்.
இந்தப் படத்தின் கதையை பார்த்து நானே தமிழகத்தில் படத்தை வினியோகம் செய்ய நினைத்தேன். அது நடக்கவில்லை.
நான் இசையை விரும்புவேன். சிலசமயம் அமைதியை விரும்புவேன். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும்போது பலர் இசை கேட்பார்கள், நான் அமைதியை தான் விரும்புவேன். காரில் உட்கார்ந்து இருக்கும்போது எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை விரும்பி கேட்பேன்.

நான் இசையமைத்த பாடல்களில் இன்றும் வெயிலோடு விளையாடி பாடல் மறக்க முடியாதது. அதுதான் நான் இசையமைத்த முதல் பாடல். எப்படி வருமோ என பயந்தேன். முத்துக்குமார் தனியாக வரிகளை எழுதி வைத்து இருந்தார். அதுவும், என் ட்யூனும் செட்டானது. சினிமாவுக்கு வராவிட்டால் கிரிக்கெட்டர் ஆகி இருப்பேன். அன்புடன் மகி படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

















