விஜய் ஆண்டனி ஏன் செருப்பு அணிவதில்லை?- எமோஷனலாக விளக்கம் அளித்த மனைவி
"விஜய் அரசியலுக்குப் போயிட்டு நடிக்க மாட்டேங்கிறார்; அதனால நீங்க..."- தனுஷுக்கு சாய் பல்லவி கோரிக்கை
'அமரன்' பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஓம்'. இப்படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். செம்மரக் கடத்தல் பின்னணியில் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள இப்படம் நவம்பர் 20ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இப்படத்தின் ட்ரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய சாய் பல்லவி, “10 வருஷம் முன்னாடி ரவுடி பேபி பாட்டு எல்லாரும் பார்த்திருப்பீங்க. இப்ப வரைக்கும் நான் வட இந்தியா போனா, குழந்தைங்க இருக்கிற அம்மா அப்பா பார்த்தா இவங்க தான் ரவுடி பேபி அக்கான்னு சொல்லுவாங்க. அவங்களுக்கு என் பேர்லாம் தெரியாது.
அந்தப் படத்துக்கு அப்புறம் சரியான கதை அமையும் போது தனுஷ் சாரோட நடிக்கணும்னு நினைச்சேன். அது இந்தப் படத்துல அமைஞ்சது ரொம்ப மகிழ்ச்சி” என்றிருக்கிறார்.
தொடர்ந்து தனுஷைப் பார்த்து பேசிய அவர், “ஒரு ஆளுமையா, உங்களுடைய வளர்ச்சியைப் பார்க்கிறப்போ வேறு விதமா இருக்கு சார். வருகிற வழியில கொடியெல்லாம் பார்த்தபோது இது என்ன அரசியல் கூட்டம் மாதிரி இருக்குன்னு யோசிச்சேன்.

நீங்க என்ன பண்ணாலும் அதுல நீங்க நல்லா வரணும்னு நான் நினைப்பேன். ஆனா ஒரு நடிகையா நீங்க தொடர்ந்து நடிக்கணும்னு நான் ஆசைப்படுறேன். ஏன்னா விஜய் சார் அரசியலுக்குப் போயிட்டு நடிக்க மாட்டேங்கிறார். அதனால நீங்க எந்த முடிவு எடுத்தாலும் தயவு செஞ்சு நடிப்பதை விட்டுறாதீங்க. உங்கள நாங்க மிஸ் பண்ணுவோம்” என்று பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

















