செய்திகள் :

Abishan Jeevinth: 'செல்லமே மகளே'; பெண் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை பகிர்ந்த அபிஷன் ஜீவிந்த்!

post image

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் மூலம் பெரியளவில் கவனிக்கப்பட்டவர் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்.

சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடித்திருந்த அந்தப் படத்திற்கு வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்லதொரு வரவேற்பு கிடைத்திருந்தது. இந்தப் படத்திலேயே ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், அடுத்ததாகக் கதாநாயகனாகக் களமிறங்கினார்.

Abishan Jeevinth - Shiva Rajkumar Movie
Abishan Jeevinth - Shiva Rajkumar Movie

அவர் ஹீரோவாக நடித்திருந்த 'வித் லவ்' திரைப்படம் இந்தாண்டு வெளியாகி நல்லதொரு வரவேற்பையும் பெற்றிருந்தது.

அனஸ்வரா ராஜா கதாநாயகியாக நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்கியிருந்தார். தற்போது அபிஷன், சிவராஜ்குமாருடன் 'பிக்காஸோ' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

அபிஷன் ஜீவிந்துக்கும் இவருடைய நீண்ட நாள் காதலியான அகிலா என்பவருக்கும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற்றிருந்தது.

'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தின் புரோமோஷன் நிகழ்வில், அபிஷன், அகிலாவுக்கு ப்ரொபோஸ் செய்திருந்த வீடியோ வைரலானது பலருக்கும் நினைவிருக்கலாம்.

இந்தத் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இத்தகவலை அபிஷன் ஜீவிந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் பகிர்ந்திருக்கிறார்.

திரைத்துறையினர் பலரும் அபிஷன் ஜீவிந்துக்கு தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Scene: "அப்போது என்னுடைய குரல் முழுவதுமாக போய்விட்டது; ஆனால் லிப் சிங்க் செய்யாமல்..." - விஜய் நரேன்

'ஏய் சுழலி', 'போறேன் நான் போறேன்' என நமக்கு ஃபேவரிட்டான பல பாடல்களைப் பாடியவர் பின்னணிப் பாடகர் விஜய் நரேன். சமீபத்தில் இவரின் 'கேரளநாடு' பாடலும் இணையத்தில் வைரலானது. இவர் 'சீன்' படத்திலும் ஒரு பாடலைப... மேலும் பார்க்க

`இதனை மற்ற பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம்.!' - கர்ப்பகால பயணத்தை பகிரும் சமந்தா!

நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார். தனது கர்ப்ப காலப் பயணத்தை உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முறைகள் மற்றும் கணவர் ராஜ் நிதிமோருவுடனான பேபிமூன் சுற்றுலா வரை, இன்ஸ்டாகிராம் மூலம் ... மேலும் பார்க்க

Scene: ``நஸ்லெனை நான் ரொமான்டிக்கா பார்க்கல; அதனாலதான் அவர் வில்லன்..." - இயக்குநர் ஜித்து மாதவன்

சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குநர் ஜித்து மாதவன், ``ஆன்லைன்ல இந்த படம் இப்படி அப்படி. கதை அது, இ... மேலும் பார்க்க

Scene: ``ஷூட்டிங்குக்கு அப்புறம் மனநிலை ஜாம்பி நிலைக்குப் போயிடும்" - நடிகர் நஸ்லன்

சூர்யா நடிப்பில் நவம்பர் 6-ம் தேதி வெளியாக காத்திருக்கும் சீன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் நஸ்லென், ``இதுக்கு முன்னாடி வரைக்கும் எந்த தமிழ் படமும் நடிக்கல.... மேலும் பார்க்க

Scene Audio Launch: "12 வருடங்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்கு வர காரணம் அவர்தான்..!" - நஸ்ரியா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க

Scene Audio Launch: "அதை பார்த்துட்டு எனக்கு விழுந்த அடியை வெளியே சொல்ல முடியாது!" - கார்த்தி கலகல

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வருகிறது. மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திரு... மேலும் பார்க்க