செய்திகள் :

Ajith: `ரேஸ் முடிந்ததும் படப்பிடிப்பு' - பான் இந்தியா படமாக உருவாகிறதா AK 64?

post image

நடிகர் அஜித்தின் AK 64 என்று ரசிகர்களால் குறிப்பிடப்பட்ட படத்துக்கு 'டேர் டெவில்' என்று பெயர் சூட்டப்பட்டு, ஆடிப்பெருக்கு விசேஷ நாளில் அறிவிக்கப்பட்டது. இப்படத்தை தயாரிக்க நிறைய தயாரிப்பாளர்கள் முன்வந்த நிலையில், அது குறித்து நீண்ட பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் அஜித்தின் விருப்பப்படி அந்த பேச்சுவார்த்தைகள் முடியாத காரணத்தால், சொந்த தயாரிப்பு வேண்டாம் என்ற தன் நீண்ட நாள் கொள்கையை மாற்றி, இறுதியில் தன் மனைவி ஷாலினி பெயரில் படத்தை சொந்த தயாரிப்பில் தயாரிக்க முடிவு செய்தார்.

நடிகர் உன்னி முகுந்தன்

படத்தின் பெயர், தயாரிப்பாளர் இசையமைப்பாளர் அனிருத்தின் பெயர்கள் மட்டும் கொண்டு ஆகஸ்ட் 3 அன்று அதிகாரப்பூர்வமாக படத்தின் அறிவிப்பு வெளியானது. படப்பிடிப்பு முன்பு நவம்பர் 2-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கார் ரேஸிங் பந்தயங்களில் தீவிரமாக கலந்து கொண்டு சென்னைக்கு வராமல் வெளிநாடுகளில் இருந்தார் அஜித். இந்த நிலையில், தற்போது இப்படத்தை பெரிய அளவில் பான் இந்தியா படமாக தயாரிக்க மிகவும் கவனமாக திட்டமிட்டு கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்கு பிடித்த மாதிரி ஆதிக்கின் கதையும் சரியாக அமைந்து விட்டதால், படு தீவிரமாக இப்போது படப்பிடிப்பு தொடங்கும் வேலையில் இறங்கி விட்டார்கள். முதலில் மோகன்லாலை அணுகியிருக்கிறார்கள். அவரது மேனேஜர் கேட்ட தொகை படத்தின் தயாரிப்பு செலவின் திட்டமிடலுக்கு சரி வராமல் போக, இப்போது மலையாளத்தில் புகழ்பெற்று வரும் உன்னி முகுந்தனை ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் சொல்லப்படுகிறது.

உபேந்திரா
உபேந்திரா

கன்னடத்தில் கிச்சா சுதீப்பிடம் முதலில் பேச்சுவார்த்தை நடக்க, அவரால் தேதிகள் தர முடியாமல் உபேந்திராவிடம் இப்போது பேசுகிறார்கள். தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க அனேகமாக முடிவாகிவிட்டது என்கிறார்கள். அடுத்து இப்போது அஜித் கார் பந்தயம் எல்லாம் முடித்து அடுத்த மாத கடைசியில் சென்னையில் கால் வைத்த அடுத்த பத்து நாட்களில் 'டேர்டெவில்' படப்பிடிப்பு தொடங்கிவிடும் என்பதுதான் இப்போது நிச்சயமான செய்தி.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

டோரதி: 'படத்திற்கு எதிர்ப்பு வந்தாலும் நான் கண்டுகொள்ளவில்லை, ஏனென்றால்..!'- கார்த்திக் சுப்புராஜ்

மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற 'டோரதி' படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று (அக.7) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், "நான் நம்பும் இரண்டு விஷயங்களை இந்தப் படம் ... மேலும் பார்க்க

Dorothy: "கார்த்திக் சுப்புராஜோட போன படம் மொக்கையாகத்தான் இருந்துச்சு!" - மிஷ்கின் ஓபன் டாக்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'டோரதி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோர் நடித்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சக... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "I'm Not Self-Made, I'm People-Made; மக்களால் உருவாக்கப்பட்டவன் நான்" - எஸ்.கே

சிவகார்த்திகேயன், தற்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் 'சேயோன்' படத்திலும், 'பார்க்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவகார்த்திகேயன் நற்ப... மேலும் பார்க்க

முதல் குழந்தை முதல் குழந்தைதான்; 10 வருஷம் கழிச்சு அதுக்கு பார்ட் 2னு பெயர் வைப்போமா?- ராமராஜன் கலகல

கிராமத்து நாயகன் ராமராஜனின் பிறந்த நாள் நாளை (அக்டோபர் 8-ம் தேதி) வருகிறது. தமிழ் சினிமாவின் கதாநாயகன்களில் 'வெள்ளிவிழா' நாயகனாக இப்போதும் பேசப்படுகிறார். கடந்த 2024ல் 'சாமானியன்' படத்தின் மூலம் தனது ... மேலும் பார்க்க

'பெரும் மனநிறைவை கொடுத்த படம்' - 'டோரதி' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

Jailer 2: 'மிஸ் டெல்லி... கதக் நடனம்...' - 'ஜெயிலர் 2' டிரெய்லரில் கவனம் ஈர்த்த Apeksha Porwal யார்?

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஜெயிலர் 2' படத்தின் டிரெய்லர் நேற்றைய தினம் வெளியானது. படத்தைப் பற்றிய பல்வேறு தகவல்களையும், படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் பற்றியும் ... மேலும் பார்க்க