செய்திகள் :

ANI:``இதை ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல" - விக்கிபீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம்!

post image

விக்கிபீடியாவில் கடந்த ஆண்டு ANI செய்தி நிறுவனம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியானது. அந்தக் கட்டுரையில், ANI செய்தி நிறுவனத்தை 'அரசின் ஒரு பிரசாரகர்' என்பதுபோல சித்தரிக்கப்பட்டிருந்தது. இதற்கு ANI நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், அதில் இருக்கும் அந்தக் குறிப்பிட்ட கட்டுரையை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியது. அதற்கு விக்கிபீடியா மறுப்பு தெரிவித்த நிலையில், ANI நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், விக்கிபீடியாவுக்கு 'ANI பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரையை அதன் பக்கத்திலிருந்து நீக்க வேண்டும்' என உத்தரவிட்டது. 

டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து விக்கிபீடியா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.எஸ். ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ``நீதித்துறை மற்றும் ஊடகங்கள் இரண்டும் ஜனநாயகத்தின் அடித்தளத் தூண்கள். இதுதான் அரசியலமைப்பின் அடிப்படை அம்சம். ஒரு ஜனநாயகம் செழிக்க, இரண்டும் நிறைவாக தங்கள் பணிகளைச் செய்ய வேண்டும்.

இரண்டும் திறந்த நிறுவனமாக எப்போதும் பொதுக் கண்காணிப்பு, விவாதம், விமர்சனம் போன்றவற்றுக்கு திறந்திருக்க வேண்டும். உண்மையில், நீதிமன்றங்கள் விவாதங்களையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் வரவேற்க வேண்டும்.

நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்றம் உத்தரவு

விவாதப் பிரச்னை நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு உட்பட்டதாக இருந்தாலும், ஒவ்வொரு முக்கியமான பிரச்னையும் மக்களாலும், பத்திரிகைகளாலும் விவாதிக்கப்பட வேண்டும்.

அதே நேரம் அந்த விமர்சனங்களுக்கு நீதிபதிகள் பதிலளிக்க முடியாது என்பதையும் விமர்சிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு செய்தி நீதிமன்றத்தையோ அல்லது நீதிபதிகளையோ அவமதித்தால், அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டால், நிச்சயமாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.

ஆனால் இதை நீக்கு, அதை அகற்று என ஊடகங்களுக்குச் சொல்வது நீதிமன்றத்தின் கடமையல்ல... நீதித்துறை உட்பட, எந்தவொரு அமைப்பின் முன்னேற்றத்திற்கும், சுயபரிசோதனை முக்கியமானது. பிரச்னைகள் குறித்து வலுவான விவாதம் நடந்தால் மட்டுமே சுயபரிசோதனை நடக்கும். எனவே, டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்படுகிறது." என்றனர்.

`இப்போ டெல்லியில் தானே இருக்கீங்க?’ - தமிழ்நாட்டில் NEP-ஐ அமல்படுத்த தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

பாஜக-வை சேர்ந்த வழக்கறிஞரான ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், `முன்மொழிக் கொள்கை உட்பட பல்வேறு முக்கிய அம்சங்களை கொண்டு புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு உருவாக்கிய... மேலும் பார்க்க

'செங்கோட்டையை மட்டும் ஏன் கேக்குறீங்க, கூடவே...' - சொந்தம் கொண்டாடிய பெண்; காட்டமான உச்ச நீதிமன்றம்!

உச்ச நீதிமன்றத்தில் சுல்தானா பேகம் என்ற பெண் வித்தியாசமான மனுவை தாக்கல் செய்திருந்தார்.அதில் முகலாயர்களின் கடைசி மன்னனான பகதூர் ஷாவின் பேரன்வழி பேரனின் மனைவி தான் என்றும் கணவனை இழந்தவர் என்றும் கூறியி... மேலும் பார்க்க

கரூர்: `எச்சில் இலையில் உருளும் நெரூர் மட சடங்குக்குத் தடை...' - உச்ச நீதிமன்றம் உத்தரவு

கரூர் மாவட்டம், நெரூர் கிராமத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் என்ற சாமியாரின் சமாதியில், அவரது நினைவு நாளில் பக்தர்கள் எச்சில் இலையில் உருளும் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.மனித நேயத்திற்கு எதிரானது ம... மேலும் பார்க்க

விவாகரத்து: பெண்ணுக்கு 'தங்க நகைகள்' திருப்பிக்கொடுக்கப்பட வேண்டுமா? - நீதிமன்ற உத்தரவு என்ன?

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்குக் கொடுக்கப்படும் நகைகளும் பணமும் (சீதனம்) பெண்ணின் தனிப்பட்ட சொத்து என உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது கேரள உயர் நீதிமன்றம்.எர்ணாகுளம் மாவட்டம், கலமசேரியைச் சேர்ந்த பெ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி பாலியல் வழக்கு மே13-ம் தேதி தீர்ப்பு... நீதிபதி மாற்றமும், விளக்கமும்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாலியல் வழக்கு நாட்டையே அதிரவைத்தது. பொள்ளாச்சிபாலியல்வன்கொடுமை விவகாரம் அம்பலமாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன. “அண்ணா பெல்ட்டால அடிக்காதீங்க” எனக் ... மேலும் பார்க்க

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு : குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்!

கடலூர் மாவட்டம் குப்பநத்தம் புது காலனி பகுதியைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தை சேர்ந்த சாமி கண்ணு எனும் நபருடைய மகனான முருகேசன் இளங்கலைப் படிப்பு படித்து வந்துள்ளார்.உச்ச நீதிமன்றம் அதே பகுதியில் உள்ள இடை... மேலும் பார்க்க