செய்திகள் :

Arya: பா.ரஞ்சித்துடன் இரண்டு படங்கள்; மீண்டும் ஒரு காதல் படம்! - ஆர்யா லைன் அப் அப்டேட்ஸ்!

post image

ஆர்யா நடித்திருக்கும் 'மிஸ்டர் எக்ஸ்' திரைப்படம் ஏப்ரல் 17-ம் தேதி திரைக்கு வருகிறது.

ஸ்பை த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இத்திரைப்படத்தை 'எஃப்.ஐ.ஆர்' படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கியிருக்கிறார்.

ஆர்யா
ஆர்யா

கெளதம் ராம் கார்த்தி, மஞ்சு வாரியர் என எக்கச்சக்க நட்சத்திரப் பட்டாளங்களையும் கொண்டிருக்கிறது இப்படம்.

இப்படத்தைத் தொடர்ந்து, 'வேட்டுவம்', 'சார்பட்டா 2' என அதிரடியான லைன் அப்களையும் கைவசம் வைத்திருக்கிறார் ஆர்யா. அவை என்னென்ன என்பதைப் பார்ப்போமா...

'மிஸ்டர் எக்ஸ்' படத்தின் ரிலீஸைத் தொடர்ந்து ஆர்யாவின் அடுத்த ரிலீஸாக 'ஆனந்தன்காடு' படத்தைத் கொண்டு வர திட்டமிடப்படுகிறது.

ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில், தமிழ் - மலையாளம் பைலிங்குவல் படமாகவும் இது உருவாகி வருகிறது. இதன் பிறகு, ஆர்யாவின் 40-வது படத்தை மலையாளத்தில் வெளிவந்த 'ப்ரணயவிலாசம்' படத்தை இயக்கிய நிகில் முரளி இயக்குகிறார்.

இந்த ராம் - காம் படத்தில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு, இப்படத்தின் மூலம் காதல் கதை பக்கம் வருகிறார் ஆர்யா.

சமகால இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் இந்த படம் எழுதப்பட்டிருக்கிறதாம். 'மதராசபட்டினம்', 'ராஜா ராணி', 'காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம்' படங்களைத் தொடர்ந்து ஆர்யாவின் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஆர்யா
ஆர்யா

இதனைத் தொடர்ந்து, தற்போது பா.ரஞ்சித் இயக்கி வரும் 'வேட்டுவம்' படத்தில் நடித்து வருகிறார், ஆர்யா. இயக்குநர் ரஞ்சித், புதியதொரு கதைக்களத்தை இந்தப் படத்தில் உருவாக்கியிருக்கிறாராம்.

இதுவும் 'மள்ளர்கம்பம்' பற்றிய ஒரு ஸ்போர்ட்ஸ் திரைப்படம் தானாம். அத்தோடு சில பிக்ஷனல் விஷயங்களைச் ரஞ்சித் சேர்த்திருக்கிறாராம். இதனையடுத்து, ஜூன் மாதத்திலிருந்து, ரஞ்சித் ஆர்யா வைத்து இயக்கும் 'சார்பட்டா 2' படத்தின் வேலைகளும் தொடங்கவிருக்கின்றன.

எதற்கு நீங்கள் ஆவலுடன் வெயிட்டிங்!?

What To Watch: யூத் முதல் மிஸ்டர் எக்ஸ் வரை; இந்த வாரம் என்ன பார்க்கலாம்?

மிஸ்டர் எக்ஸ் (Mr.X) - தமிழ்:மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக், மஞ்சு வாரியர், சரத்குமார், ரைசா, அதுல்யா ரவி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் இன்று (ஏ... மேலும் பார்க்க

Chiyaan 63: மீண்டும் 'இருமுகன்' பட இயக்குநருடன் இணையும் விக்ரம் - டேக் ஆப் ஆகும் சீயான் 63

நடிகர் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவருடைய 63-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். கடந்தாண்டு மார்ச் மாதம் விக்ரமின் 'வீர தீர சூரன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. ... மேலும் பார்க்க

Mr. X Review: ஜி20 மாநாடு, அணு ஆயுதத் தாக்குதல், ஸ்பை த்ரில்லர் - புதிய களம் படமாக வலுப்பெறுகிறதா?

ரா அமைப்பில் உளவாளிகளாக இருக்கும் கௌதம் (ஆர்யா) & டீம் சென்னையில் ஹவாலா குற்றங்களைப் பிடித்துவருகிறார்கள். நீண்ட வருடங்களுக்கு முன்பு சோதனைக்காக நந்தா தேவி மலைக்குக் கொண்டு செல்லப்படும் அணு சாதனம்... மேலும் பார்க்க

Hansika Motwani: "தவறான ரயிலில் பயணிக்க முடியுமா?" - விவாகரத்து குறித்து மனம் திறந்த ஹன்சிகா

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இவருக்கும் சோஹேல் கதுரியா என்பவருக்கும் 2022-ம் ஆண்டு ஜெய்பூர் அரண்மனையில் கோலாகலமாக திருமண... மேலும் பார்க்க