Modi: "திமுக அரசின் நியாயமற்ற தன்மையினாலேயே இது நடந்திருக்கிறது!" - மதுரையில் மோ...
Bala: "அவர்தான் என்னை தாயும் தகப்பனுமாய் பார்த்துக் கொள்கிறார்" - இயக்குநர் பாலா நெகிழ்ச்சி
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’ திரைப்படம் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது.
புதுமுக நடிகர்களை வைத்து இப்படத்தை எடுத்திருக்கிறார் அவர். இவர்களோடு படத்தில் மலையாள நடிகர் அர்ஜுன் அசோகனும் முக்கியமானதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அப்போது இயக்குநர் பாலா பேசுகையில், “விஜய் என்னை குரு என்று சொன்னார். விஜய்தான் எனக்கு குரு. எவ்வளவு கடுமையாக உழைக்கணும்னு எனக்குக் கத்துக் கொடுத்த குரு ஏ.எல். விஜய்தான்.
அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது, கெட்டதுக்கு பங்கெடுத்து தாயும் தகப்பனுமாய் என்னை அவர் பார்த்துக்கிறார்.

தூங்காமலேயே ஏ.எல். விஜய் வேலை பார்த்துட்டு இருக்கார்” என்றவர், “‘மதயானைக் கூட்டம்’ திரைப்படத்தில் விஜி சந்திரசேகர் அவ்வளவு அற்புதமாக நடிச்சிருப்பாரு.
அந்தப் படத்தோட கடைசிக் காட்சியில் இவர் ரத்தத்தைத் துடைச்சிட்டு இருப்பாரு. அந்தக் காட்சியில் கண்களால் அற்புதமாக நடிச்சிருப்பாங்க.
எனக்குப் பிடித்த நடிகை ராதிகா மேடம்தான். அவங்களுக்குப் பிறகு எனக்குப் பிடிச்ச நடிகை விஜி சந்திரசேகர்” என்றார்.















