செய்திகள் :

BB 10: "எனக்கு பயம் இல்ல, பெரிய நடிகராக இருந்தால் கூட.!"- காமன்மேன் முனியம்மாள் ஷேரிங் |Exclusive

post image

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது.

இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசனில் ̀பிக்பாஸ் காமன்மேன்' நிகழ்ச்சியில் வென்ற போட்டியாளர்கள் பிரபலங்களுடன் இணைந்துப் போட்டியிட இருக்கிறார்கள்.

முனியம்மாள்
முனியம்மாள்

அந்தவகையில் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன் எக்ஸ்க்ளூசிவாகப் பேசிய முனியாம்மாள் (காமன்மேன் போட்டியில் வென்றவர்), " நான் கிராமத்தில் இருந்து வருகிறேன். பிக் பாஸிற்கு வருபவர்கள் பெரிய நடிகராக இருந்தால் கூட அவர்கள் எனக்கு சாதாரண மனிதர்களாகத் தான் தெரிவார்கள். அதனால் எனக்கு பயம் எதுவும் இல்லை.

இதில் கலந்துக்கொள்ளும் பிரபலங்களுக்கு கூட நாம் பேசுவது தவறாகிவிடுமோ என்ற பயம் இருக்கும். ஆனால் ஒரு காமன்மேனாக இருக்கும் எனக்கு எந்த ஒரு பயமும் இருக்காது,

என் மனதில் என்ன தோன்றுகிறதோ அதை பேசுவேன். எனக்கு வரும் குறைந்த வருமானத்தை வைத்து வாழ்க்கையில் நான் முன்னேறி காட்டினேன். என்னுடைய சேனலில் பேசியது போன்று இன்னும் நிறைய விஷயங்களை பிக் பாஸில் பேசுவேன்.

சாதரண வாழ்க்கையை வாழ்பவர்கள் கூட தங்களது அனுபவங்களைச் சொல்லலாம். அந்தவகையில் நான் ஒரு அனுபவசாலி. நான் மிகவும் ஜாலியான நபர். கோபமும் படுவேன் அதேசமயம் ஜாலியாகவும் இருப்பேன்.

கடந்த சீசனில் பார்வதி அவர்களுக்கு தோன்றியதை செய்தார். ஆனால் ஒரு கட்டுப்பாடு இல்லாமல் இருந்தார். நமக்கு ஆறறிவு கொடுத்திருப்பதே யோசிக்கத்தான். அவர் நிகழ்ச்சி என்பதைத் தாண்டி சில விஷயங்களை செய்தார். அது பார்ப்பதற்கு நன்றாக இல்லை.

பார்வதி
பார்வதி

என்ன இப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று தோன்றியது. அதனால் எப்படியாவது நமக்கு முகம் தெரிய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. நல்ல கருத்துக்களைப் பேசி நல்ல முறையில் நான் வெளியில் தெரிய வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.

Bigg Boss Tamil Season 10: முதல் முறையாக மேடையிலேயே வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்; அதிரடி தொடக்கம்!

பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 10-வது சீசன் இன்று (செப்.6)தொடங்கி இருக்கிறது. இந்த முறையும் விஜய் சேதுபதியே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். இந்நிலையில் பிக் பா... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 10: "என்னோட அந்தப் பக்கத்தை மக்கள் பெருசா பார்த்ததில்ல" - குமரன் பேட்டி | Exclusive

விஜய் டிவியில் ̀பிக்பாஸ் தமிழ் சீசன் 10' கோலாகலமாகத் தொடங்கியுள்ளது. போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்து பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பும் பொறுப்பை முதன்முறையாக பார்வையாளர்களிடம் கொடுத்துள்ளனர். என்ட்ரியாகு... மேலும் பார்க்க

Bigg Boss Tamil 10: "சண்டைன்னு வந்தா போல்டா இருப்பேன்!" - நடிகை சாந்தினி தமிழரசன் பேட்டி | Exclusive

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 இன்று ஆரம்பமாகியுள்ளது. முதன்முதலாக காமன்மேன் என்கிற பிரிவில் போட்டியாளர்கள் சிலர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறார்கள். ̀பிக்பாஸ் காமன்மேன்' நிகழ்ச்சியில் வென்ற போட்டியா... மேலும் பார்க்க

Biggboss Tamil 10: "அந்தக் குணம்தான் என் Positive & Negative!" - நடிகை லட்சுமி பிரியா | Exclusive

`மகாநதி' தொடரின் மூலம் பிரபலமானவர் லட்சுமிபிரியா. 'காவேரி' என்கிற இவருடைய கதாபாத்திரத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. தற்போது அந்தத் தொடர் முடிவடைந்த நிலையில் அவருடைய ரசிகர்கள் பலரும்... மேலும் பார்க்க

Bigg Boss 10: சீன் கட் ஆவதாக வருந்திய நடிகைக்கு அடித்தது 'பிக் பாஸ்' ஜாக்பாட்!

விஜய் டிவியின் ஃபேவரைட் ஷோ பிக்பாஸின் பத்தாவது சீசன் வரும் ஞாயிற்றுக் கிழமை (செப்டம்பர் 6-ம் தேதி) தொடங்கவிருக்கிறது பிக்பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை முன்பெல்லாம் தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னட பிக்... மேலும் பார்க்க