செய்திகள் :

MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ

post image

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதிக்கான மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று (செப்.5) நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய தொகுதி எம்.பி.யும் நடிகையுமான கங்கனா ரனாவத், தொகுதி மேம்பாட்டு நிதி சரியாகப் பயன்படுத்தப்படாதது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்கூட்டத்தில் பேசிய கங்கனா ரனாவத், "எனது தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் 90 சதவீத நிதியைச் செலவிட்டுவிட்டதாக அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். ஆனால், கள நிலவரப்படி வெறும் ரூ.50 லட்சம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கணக்கு அறிக்கைகளுக்கும் உண்மையான செலவினங்களுக்கும் பெரிய அளவில் முரண்பாடு உள்ளது.

இதற்கு துறை சார்ந்த அதிகாரிகள் முறையான விளக்கம் அளித்தாக வேண்டும். மேலும், இந்த நிதியில் 30 முதல் 40 சதவீதம் வரை முறைகேடு செய்த நபர்களுக்குச் சென்றடைந்துள்ளதாகச் சில புலனாய்வு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

அந்தப் பணத்தைக் கூட அதிகாரிகளால் மீட்க முடியவில்லை. மண்டி தொகுதியில் வளர்ச்சிப் பணிகள் முடங்கிக் கிடப்பது குறித்து தேசிய ஊடகங்கள் என்னை விமர்சித்து வருகின்றன.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்

நிறைவேற்றப்படாத திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தினமும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு கேள்வி கேட்கின்றனர்.

இனிமேலும் தாமதிக்காமல் நிலுவையில் உள்ள அனைத்துத் திட்டப் பணிகளையும் விரைந்து முடிப்பதுடன், மக்கள் பணத்தை நேர்மையாகப் பயன்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று எச்சரித்திருக்கிறார்.

``தவெக-வுக்கு காங்கிரஸால் எந்த நேரத்திலும் ஆபத்துதான்" - எச்சரிக்கும் ராஜேந்திர பாலாஜி

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, விருதுநகரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ``உலகத் தலைவர்கள் அனைவரும் போற்றும் வகையில் ஒரு மிகச் சிறந்த பிரதமராக மோடி திகழ்கிறார். அ... மேலும் பார்க்க

```திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" - என்ன சொல்கிறார் பிரதமர் மோடி?

டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" - ஸ்டாலின்

நடப்பு சட்டமன்றத் தொடரில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தீர்மானத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்க... மேலும் பார்க்க

"தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?" - செக்கோவ்வின் வரிகளை நினைவூட்டிய சிந்தனைச் செல்வன்

2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விசிக, தேர்தலுக்குப் பின்னர் தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்து தற்போது அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் விசிகவின் பொதுச்செயலாளர் சிந்தனைச் ... மேலும் பார்க்க

"குற்றவாளிகள் எல்லாம் தஞ்சமாகும் குப்பைத் தொட்டியாக..." - தவெக மீது உதயநிதி விமர்சனம்

சென்னையில் தவெகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்து பதிவ... மேலும் பார்க்க

``அதிமுக ஆட்சி முறைகேடுகள் மீதும் வழக்கு தொடரப்படும்" - அமைச்சர் நிர்மல் குமார்

கே.பி மூக்கையா தேவரின் நினைவு தினமான இன்று உசிலம்பட்டியில் இருக்கும் அவரின் நினைவிடத்துக்கு அமைச்சர் நிர்மல் குமார் சென்று அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``மேகமலை... மேலும் பார்க்க