செய்திகள் :

BB Tamil 9: "இவரை நம்பாதீங்க சாண்ட்ரா" - பிரஜினைச் சாடிய விஜய் சேதுபதி

post image

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 7 வாரங்களைக் கடந்திருக்கிறது. 20 பேருடன் தொடங்கிய இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது வரை 9 பேர் வெளியேறி இருக்கின்றனர்.

இந்த வாரம் போட்டியாளர்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸிடம் பேச வைத்திருந்தார்.

BB Tamil 9
BB Tamil 9

இதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ஸ்கூல் டாஸ்க் நடைபெற்றது.

வியானா - அமித் சண்டை, சபரி - அரோரா வாக்குவாதம், பார்வதி அழுகை என வழக்கம் போல இந்த டாஸ்க்கிலும் பிக் பாஸ் வீடு கலவரமானது.

வார இறுதி எபிசோடிற்காக நேற்று (நவ.29) என்ட்ரி கொடுத்த விஜய் சேதுபதி, வீட்டில் நடந்த சண்டைகள் குறித்தும், வீட்டு தலையாகச் சரியாகச் செயல்படாத FJ குறித்தும் விசாரித்தார்.

BB Tamil 9
BB Tamil 9

இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் இரண்டாவது புரொமோவில், "'நீட்டிப்பு', 'துண்டிப்பு' இந்த வீட்டில் யாருடன் உங்கள் உறவை நீட்டிக்க வேண்டும் அல்லது உறவைத் துண்டிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்" என விஜய் சேதுபதி கேட்கிறார்.

அதற்கு விக்கல்ஸ் விக்ரம் பார்வதியுடனான உறவை நீட்டிக்க வேண்டும் என்று சொல்கிறார். "தப்பித்தவறி கூட நாங்க நெருங்கிய நண்பர்களாகி விடக்கூடாது. இப்போ எப்படி நாங்க ஒரு டிஸ்டன்ஸ் ஓட இருக்கமோ அப்படியே இந்த உறவு நீடிக்கணும்னு சொல்றேன்" என விக்ரம் விளக்கம் கொடுத்தார்.

BB Tamil 9
BB Tamil 9

இதனைத் தொடர்ந்து, "எதுவாக இருந்தாலும் தன்னிடம் இருந்துதான் வாய்ஸ் வர வேண்டும் என்று FJ நினைக்கிறார். அதனால் அவரைத் துண்டிக்கிறேன்" என விஜே பார்வதி கூறுகிறார்.

தவிர பிரஜின், "நான் சாண்ட்ராவைத் துண்டிக்கிறேன்" எனச் சொல்ல, "பிரஜினை நம்பாதீங்க" என விஜய்சேதுபதி கூறுகிறார். "மனைவியாக இல்ல சாண்ட்ராவுடனான கேம்மைத்தான் துண்டிக்கிறேன்" என்று பிரஜின் விளக்கம் அளிக்கிறார்.

AVM Saravanan: ``ஷூட்டிங் ஸ்பாட்டுல ஆர்ட்டிஸ்ட்டுகளை பாராட்ட மாட்டார் ஏன்னா..." - நடிகை ராணி

சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களையும் தயாரித்திருக்கிறது ஏவிஎம் நிறுவ்னம். 'சொர்க்கம்', 'ஆசை' உள்ளிட்ட ஏவிஎம் தயாரித்த பல தொடர்களில் நடித்த நடிகை ராணியிடம் பேசினோம்.''டிவி நடிகர் நடிகைகளுக்கு வேலை தரணு... மேலும் பார்க்க

BB Tamil 9: Day 59: `இதை நான் எந்த சீசன்லயும் சொன்னதில்ல’ உக்கிரமான பிக் பாஸ்; எல்லை மீறிய கம்ருதீன்

சினிமா கேரக்டர்களைத் தந்து ‘இதையாவது ஒழுங்கா பண்ணுங்க’ என்றால் அதிலும் ஒரே சண்டை போட்டு நாறடிக்கிறார்கள்.அரோரா கூட இருக்கும் வரைக்கும் கொஞ்சம் திருந்தி வாழ்ந்த கம்ருதீன், பாருவுடன் முழுதாக இணைந்த பிறக... மேலும் பார்க்க

BB Tamil 9: ``நீ யார் என்னைப் பத்தி பேசுறதுக்கு'' - FJ பார்வதி மோதல்; கலவரமான பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 59 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

BB Tamil 9: `என் கிட்ட பேசாத' - பார்வதியின் காலில் விழுந்து அழுத ரம்யா

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 58 நாட்களைக் கடந்திருக்கிறது. மொத்தம் 20 பேர் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் 9 பேர் வெளியாகி இருக்கும் நிலையில் கடந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை. மேலும் ஹவுஸ்மேட்ஸ... மேலும் பார்க்க

Vikatan Digital Award: ``அப்பா கமல் ரசிகர்; அவரோட திருமணத்திற்கு கூட'' - தமிழ் டெக் தமிழ்ச்செல்வன்

சமூக ஊடக நட்சத்திரங்களை அங்கீகரிக்கும் வகையில் 'விகடன் டிஜிட்டல் விருதுகள் - 2025'கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இதில் சிறந்த தமிழ் டெக் சேனலுக்கான விருதை தமிழ்ச்செல்வன் வென்றிருந்தார். தமிழ்ச்செல்வன்... மேலும் பார்க்க