செய்திகள் :

BCCI: 'பெருமையாக இருக்கிறது; சிறுவனாக 15 வயதில் என்.!' - வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற டிராவிட்

post image

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) 2026-ம் ஆண்டிற்கான நமன் விருது விழா நேற்று( மார்ச்.15) நடைபெற்றிருக்கிறது.

இதில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டிற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டிருக்கிறது.

விருதை வாங்கியப் பிறகு மேடையில் பேசியிருக்கும் ராகுல் டிராவிட் , " இந்த விருதைப் பெறுவது மிகவும் பெருமையாக இருக்கிறது.

 ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

நான் இதற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய காலம் முதல் இன்று வரையிலானத் தனது நீண்ட பயணத்தை இது பிரதிபலிக்கிறது.

ஒரு சிறுவனாக, முதன்முதலில் 15 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடத் தொடங்கினேன்.

அன்று முதல் இன்று வரை எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

தன்னுடைய சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு நான் செய்திருக்கிறேன். விளையாட்டில் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு காலம் இருக்கிறது, அதில் நாம் நம் பங்கைச் சிறப்பாக செய்ய வேண்டும்.

அசாதாரண திறமையாளர்களையும், சிறந்த நிர்வாகிகளையும், பயிற்சியாளர்களையும் கொண்டது தான் இந்திய அணி.

ராகுல் டிராவிட்
ராகுல் டிராவிட்

உள்நாட்டு கிரிக்கெட்டும், ஜூனியர் கிரிக்கெட்டும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதால், திறமை வாய்ந்த வீரர்கள் வருகின்றனர். இதனால் தான் இந்திய அணி வெல்கிறது" என்று டிராவிட் பேசியிருக்கிறார்.

Shivam Dube: `கோப்பை வென்ற கையோடு ரயிலில் பயணம்: `அது அந்த கிரிக்கெட் வீரரா?' - TTR கேட்ட கேள்வி

சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), 10-ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா சாம்பியனாகியிருக்கிறது. கோப்பையைத் தக்கவைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணியில், வீரா்கள... மேலும் பார்க்க

Gambhir: "வீரர்களைக் கையாண்ட விதத்தில் கம்பீர் தவறு செய்திருக்கிறார்" - சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்திருந்தாலும், அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சித்திருக்கிறார். குறிப்பாக சஞ்சு சாம்சன் கையாளப்பட்ட வித... மேலும் பார்க்க

T20 WC: `இந்திய அணி ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டது' பாகிஸ்தான் முன்னாள் வீரர் விமர்சனம்

டி20 உலகக்கோப்பையை 3-வது முறையாக வென்றிருக்கும் இந்திய அணியை பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் விமர்சித்து பேசியிருக்கிறார். விளையாட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சோயப் அக்தர், "இது தெரு ஒன்றி... மேலும் பார்க்க

T20 WorldCup: "ஜிம்​பாப்வே போட்​டிக்கு முன்​பாக கம்​பீர் என்னிடம் அதைச் சொன்னபோது..."- சஞ்சு சாம்சன்

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் ரன்களைக் குவித்து அ... மேலும் பார்க்க

T20 World Cup: `மீண்டும் டீ கப் புகைப்படம்' - வருண் சக்ரவர்த்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்!

2026 T20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு, வருண் சக்ரவர்த்தி மீண்டும் நகைச்சுவையாக ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.T20 உலகக் கோப்பையை இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 96 ரன்கள் வித... மேலும் பார்க்க