அதிமுக மீதான அதிருப்தி; திமுக கூட்டணியில் ராமதாஸா? - சூரியக் கட்சிக்கு ப்ளஸா... ...
Bigg Boss Tamil 9 : டைட்டில் வெல்வாரா அரோரா? - ஒர்க்அவுட் ஆகுமா `எழுத்து' ஜோதிடம்?
நிறைவுப் பகுதியை எட்டி விட்டது பிக்பாஸ் சீசன் 9.
இதற்கு முந்தைய சீசன்களில் கடைசி வார எவிக்ஷனின் போது ஆறு போட்டியாளர்கள் உள்ளே இருப்பார்கள். அவர்களில் யாராவது ஒருவர் 'மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறுவார்கள். ஐந்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றுக்கு வருவார்கள். அவர்களில் ஐந்தாவது, நான்காவது என வரிசையாக வெளியேறி கடைசியில் வின்னர் அறிவிக்கப்படுவார்.
ஆனால் இந்த சீசனில் வித்தியாசமாக கடைசி வாரத்துக்கு சபரி விக்ரம், திவ்யா கணேஷ், அரோரா ஆகிய நான்கு பேர்தான் வந்துள்ளனர். முன்னதாக கடைசி வார எவிக்ஷனில் சாண்ட்ரா வெளியேறினார்.
சரி, இந்த நான்கு பேரில் யார் டைட்டில் வெல்வார்கள்?
'முந்தைய சீசன்களை ஒப்பிடுகிறப்ப எல்லா ஃபைனலிஸ்டுமே வீக்தான்' என மொத்தமாக குத்துகிறார்கள் சிலர்.
'வினோத் இருந்தா டைட்டில் நிச்சயம் அவருக்குதான் கிடைச்சிருக்கும், ஆனா அவர் அவசரப்பட்டுப் பணத்தை எடுத்துட்டுக் கிளம்பிட்டார்' என்கிறது வினோத்துக்க்கு நெருக்கமான நட்பு வட்டம்.
பார்வதி அல்லது கம்ருதீன் வாங்கியிருப்பாங்க, ரெண்டு பேரையுமே அனுப்பிட்டாங்களே' என உச் கொட்டுகிறார்கள் இன்னும் சிலர்.
இதெல்லாம் விட, இன்னொரு குரூப் பந்தயம் கட்டாத குறையாக எடுத்து விடுவதுதான் ஹைலைட்.
முந்தைய சீசன்களின் போதே இவர்கள் பேசினார்கள்தான். அது காக்காய் உட்கார பணம் பழம் விழுந்த கதையா தெரியவில்லை, சில சமயங்களில் நடந்து விட இதோ இந்த சீசனிலும் கிளம்பி விட்டார்கள்.
'அதாவது முதல் சீசனிலிருந்து கடந்த சீசன் வரை ஏ, ஆர், எம் ஆகிய இந்த மூன்று ஆங்கில எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்களே டைட்டில் வாங்கியிருக்கிறார்கள்.

அந்த வரிசைப்படி பார்த்தால் இந்த சீசனில் டாப் நான்கு பேரில் அரோரா மட்டுமே ஏ எழுத்தைக் கொண்டவர். நிகழ்ச்சியிலும் பாசிடிவிடியைத்தான் சம்பாதித்திருக்கிறார். எனவே அவர் நிச்சயம் டைட்டில் வெல்வார்' என்பதே இவர்களது வாதமாக இருக்கிறது.
ஆரவ், ரித்விகா, முகேன், ஆரி, ராஜு, முகமது அசீம், அர்ச்சனா, முத்துக்குமரன் என முந்தைய போட்டியாளர்களின் பெயர்களை பார்க்கும் போது, அட ஆமால்ல என்கிறீர்களா...
இந்த எழுத்து ஜோதிடம் ஒர்க் அவுட் ஆகிறதா எனத் தெரிந்து கொள்ள ஒரு வாரம் பொறுத்திருப்போம்.!

















