செய்திகள் :

BKU: "அந்த சிக்கலான சூழலில் இதை செய்தோம்; இது என் பர்சனல் வெற்றி!" - இயக்குநர் கிரிஷ் ஏ.டி

post image

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மல்லுவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியிருக்கிறது.

இப்படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் கிரிஷ் ஏ.டி 'பிரேமலு 2'-வுக்கு ஒரு வருடம் நேரம் செலவழித்து வீணாக்கிவிட்டோம் எனப் பேசியிருக்கிறார்.

Bethlehem Kudumba Unit
Bethlehem Kudumba Unit

நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு இணைந்து நடித்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அவர் பேசுகையில், "நாங்கள் 'பிரேமலு' முடித்து ஒரு வருடம் கழித்துதான் இந்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' படத்தைத் தொடங்கினோம். அதுவரை எங்கள் முழு நேரமும் 'பிரேமலு 2' பணிகளில்தான் கழிந்தது.

ஆனால், எதிர்பாராத விதமாக அந்தப் படத்தைக் கைவிட வேண்டிய சூழல் உருவானது. அது எங்களை மிகக் கடுமையாகப் பாதித்தது. எங்களது ஒரு முழு வருட உழைப்பும் நேரமும் வீணாகப்போனது.

உண்மையில் அவ்வளவு நேரத்தை இழக்க வேண்டிய அவசியமே இல்லை. அந்தச் சிக்கலான காலகட்டத்தில்தான் 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' படத்தைச் செய்யலாம் என்ற யோசனை வந்தது.

Girish AD - Nivin Pauly - Mamitha Baiju
Girish AD - Nivin Pauly - Mamitha Baiju

உண்மையில் 'பிரேமலு 2' திட்டத்திற்கு முன்பே இந்தப் படத்தைச் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. ஆனால் 'பிரேமலு' ஹிட் அடித்ததால், அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் யோசனை வந்து அதன் பின்னால் போனோம். 'பிரேமலு 2' கைவிடப்பட்ட அந்தச் சமயத்தில் தயாரிப்பு நிறுவனமான பாவனா ஸ்டுடியோஸ் உறுதுணையாக நின்றார்கள்.

அவர்களின் ஆதரவால்தான் 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' படத்தின் திரைக்கதையை மிக விரைவாக எழுதி முடிக்க முடிந்தது. ஒருவேளை 'பிரேமலு 2' நடந்திருந்தால் கடந்த விஷு பண்டிகைக்கு வெளியாகியிருக்கும்.

ஆனால் அதிலிருந்து 3-4 மாதங்கள் கழித்துதான் 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' வெளியானது. இந்தப் படம் இவ்வளவு பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இதை என் பர்சனல் வெற்றியாகப் பார்க்கிறேன்!" எனப் பேசியிருக்கிறார்.

BKU: "எனக்கே நம்பிக்கை இல்லாத சூழலில், அவர் என் மீது வைத்த நம்பிக்கை!" - மமிதா பைஜூ

திரையரங்குகளில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மல்லுவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாகியிருக்கிறது. இப்படத்தின் வெற்றி விழா நேற்றைய தினம் கேரளாவில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்... மேலும் பார்க்க

Jailer 2: "மோகன்லால் சாரின் காட்சிகளை சுருக்குவது தேவையற்றது!" - மோகன்லாலின் ஆடை வடிவமைப்பாளர்

ரஜினிகாந்தின் 'ஜெயிலர் 2' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெரஃப் உள்ளிட்ட சிலர் கேமியோ ரோலில் வருகிறார... மேலும் பார்க்க

'பெத்லஹேம் குடும்ப யூனிட்' மூலம் டிரெண்டான பாடல் - மீண்டும் உயிர்பெற்ற 30 வருட பழைய சினிமா!

சமீபத்தில் கிரீஷ் ஏ.டி இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகி வசூலைக் குவித்தது 'பெத்லஹேம் குடும்ப யூனிட்' திரைப்படம். இப்படத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட 'அன்னா' என்கிற ஒரு... மேலும் பார்க்க

Dileep: "என் தரப்பு உண்மையை எடுத்துச் சொல்லக்கூட முடியாத ஒரு சூழ்நிலையில்..." - திலீப் ஓபன் டாக்

மலையாள நடிகர் திலீப், கத்தாரில் நடைபெற்ற 'திலீப் ஃபேன்ஸ் அசோசியேஷன்' அமைப்பின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். Dileep's Neekam Filmகடந்த 10 ஆண்டுகளாகத் தான் அனுபவித்த விஷயங்கள் குறித்துப் பேசியி... மேலும் பார்க்க

பெத்லகேம் குடும்ப யூனிட்: ``ரூ300 கோடி வசூல்... அதில் பாதிகூட எங்களுக்கு கிடைக்காது" - பஹத் பாசில்

இயக்குநர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி - மமிதா பைஜூ ஆகியோரின் நடிப்பில் உருவான `பெத்லகேம் குடும்ப யூனிட்' படம், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. நடிகர் பஹத் பாசில், ... மேலும் பார்க்க

பெத்லகேம் குடும்ப யூனிட்: "புதுமையானக் கதையை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள்.!"- பகத் பாசில்

'பிரேமலு' பட இயக்குநர் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியானப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்'.நிவின் பாலி, மமிதா பைஜூ நடித்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளிய... மேலும் பார்க்க