செய்திகள் :

Black Pandi: "என்னை உணவிற்கே வழியில்லாதவன் போலச் சித்தரிக்காதீர்கள்" - பிளாக் பாண்டி விளக்கம்

post image

'கனா காணும் காலங்கள்', 'அங்காடித் தெரு' போன்ற தொலைக்காட்சி மற்றும் சினிமா படைப்புகள் மூலமாகப் பிரபலமானவர் நடிகர் பிளாக் பாண்டி.

இந்த ஆண்டு பிக் பாஸ் சீசனிலும் அவர் கலந்துகொண்டிருந்தார். ஆனால், பிறகு உடல்நலக் குறைவு காரணமாக அவர் வெளியேறினார்.

பிளாக் பாண்டி
பிளாக் பாண்டி

பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தொடர்பாகப் பேசியது எதிர்மறையாகப் பரவிவிட்டது எனவும், தற்போது மீண்டும் அதனைத் தவறாகச் சித்தரித்து பதிவிட்டு வருவதாகவும் விளக்கமளித்து காணொளி ஒன்றை அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தக் காணொளியில் அவர், "எட்டு வருடங்களுக்கு முன்பாக ஒரு நேர்காணலில், என்னிடம் ஒவ்வொரு கலைஞர்களைப் பற்றியும் கேட்டபோது சிவகார்த்திகேயனைப் பற்றியும் கேட்டார்கள்.

அப்போது எங்களுக்குள் நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டிருந்தேன். அக்காலகட்டத்தில் எனக்குப் பணப்பற்றாக்குறையும் சில சிரமங்களும் இருந்தன. அதுபற்றி அறிந்த சிவகார்த்திகேயன், ஒரு நல்ல நண்பனாக எனக்கு உதவும் எண்ணத்தில் தனது மேனேஜர் மூலமாகப் பணமனுப்பி வைத்திருந்தார்.

ஆனால், என் கை, கால்கள் நன்றாக இருக்கும் பொழுது அந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள என் மனது ஒப்பவில்லை.

பிளாக் பாண்டி
பிளாக் பாண்டி

'எனக்குப் பணம் தேவையில்லை, வாய்ப்புகள் இருந்தால் கொடுங்கள்' என்று கூறி, அவர் கொடுத்தனுப்பிய பணத்தில் இருந்து 20 ரூபாய்யை மட்டும் அடையாளத்திற்காக வாங்கி சாமி படத்திற்கு முன் வைத்துவிட்டு, மீதிப் பணத்தைத் திருப்பி அனுப்பிவிட்டோம்.

இதை நான் நேர்காணலில் இயல்பாகச் சொன்னது, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு எதிர்மறையாகப் பரவத் தொடங்கிவிட்டது. உடனடியாக நான் அந்தக் குழுவிடம் பேசி, யாரையும் காயப்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்பதால் நேர்காணலிலிருந்து அந்தப் பகுதியை நீக்கச் சொன்னேன். அவர்களும் நீக்கிவிட்டார்கள்.

அதன் பிறகு, நான் சிவகார்த்திகேயனை நேரில் சந்தித்து, 'நண்பா, உன்னிடம் பணம் வாங்கி உன்னை ஏமாற்ற எனக்கு விருப்பமில்லை. எனக்கு உழைத்துச் சாப்பிடும் தெம்பு இருக்கிறது. ஒருவேளை நான் படுத்த படுக்கையாக இருந்தால் நீ செய்யும் உதவி பெரிது. அதனால்தான் வாங்கவில்லை' என்று விளக்கினேன்.

சிவகார்த்திகேயனும் அதை மிகவும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டு, 'அதெல்லாம் ஒன்றும் இல்லை நண்பா, மேற்கொண்டு வாய்ப்புகள் வரும்போது பார்க்கலாம்' என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஆனால், இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் சமூக வலைத்தளங்களில், 'வாய்ப்பு கேட்கப்போனால் பணத்தைக் கொடுத்து அசிங்கப்படுத்தினார், சிவகார்த்திகேயனால் உடைந்த பிளாக் பாண்டி' என்று தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். திரையுலகில் ஒவ்வொருவரும் கஷ்டப்பட்டுதான் ஓர் இடத்திற்கு வருகிறார்கள்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

யூடியூப் மற்றும் ஊடக நண்பர்கள் தயவுசெய்து இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பி சிவகார்த்திகேயனின் பெயருக்குக் களங்கம் விளைவிக்காதீர்கள். என்னையும் உணவிற்கே வழியில்லாதவன் போலச் சித்தரிக்காதீர்கள்.

மீண்டும் இந்த விஷயத்தால் சிவகார்த்திகேயனுக்குச் சங்கடம் ஏற்பட்டிருந்தால், அவருக்கு என் வருத்தத்தையும் 'மன்னித்துவிடு நண்பா' என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். பொதுமக்கள் மற்றும் நேயர்கள் சமூக வலைத்தளங்களில் வரும் அனைத்துச் செய்திகளையும் உடனே நம்பாமல், பின்னணியில் இருக்கும் உண்மையை உணர்ந்து நம்புமாறு கேட்டுக்கொள்கிறேன்" எனப் பேசியிருக்கிறார்.

Scene: "அந்த இரண்டு போலீஸ் படங்களோடு இதை ஒப்பிட வேண்டாம்" - துபாயில் சூர்யா

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. Suriya - Scene Title Teaserமலையாள சினிமா இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் மு... மேலும் பார்க்க

"சின்னப் படங்கள் வரக்கூடாதா?"- ஜெயிலர்-2 ரிலீஸ்; கலங்கிய 'டிரோன்ஸ்' தயாரிப்பாளர்

சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'டிரோன்ஸ்'. இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில... மேலும் பார்க்க

"தனுஷ் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்கள்.!"- பேரரசு கூறியதென்ன?

இயக்குநர் பேரரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " மன்சூர் அலிகான் கட்சி ஆரம்பித்தார். தற்போத... மேலும் பார்க்க

Jailer 2: "அனிருத் திருமணம்; ரஜினி சாரின் தத்துவம்!" - பியார்ன் சுர்ராவோ ஷேரிங்ஸ்

'ஜெயிலர் 2' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் அள்ளி வருகிறது. ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்தப் படத்தை நெல்சன் இயக்கியிருக்கிறார். Jailer 2 - Rajinikanthஇப்படத்திற்கு அனிருத் இசையம... மேலும் பார்க்க

Haiku Review: இரண்டு காதல்கள் கற்றுத்தரும் பாடம் - தலைப்பைப் போலவே வசீகரிக்கிறதா இந்தக் காதல் கதை?

சென்னையில் ஆட்டோமொபைல் வரைகலை நிறுவனம் ஒன்றில் பணியிலிருக்கிறார் மனோகர் (ஏகன்). அங்கே பயிற்சிக்காக இணையும் நிவேதாவுடன் (ஃபெனிமா ஜார்ஜ்) நட்பு ஏற்படுகிறது. இதனிடையே மனோகரின் கல்லூரிக்கால வாழ்க்கையும் ந... மேலும் பார்க்க

'வியந்து பார்த்த ஹீரோவுடன், இப்போது இணைந்து நடிப்பதென்பது..!' - ஹிருத்திக் ரோஷன் குறித்து மிர்னா

'ஜெயிலர் -1' படத்தில் ரஜினிகாந்தின் மருமகளாக 'சுவேதா' என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பெரும் கவனத்தைப் பெற்றவர் மிர்னா. கடந்த வாரம் வெளியான 'ஜெயிலர் -2'-விலும் நடித்திருக்கிறார். இந்நிலையி... மேலும் பார்க்க