Shriram Finance-ல் Japan நிறுவன முதலீடு, ஏன்? | Silver Gold | IPS Finance - 392
Career: வெளிநாட்டில் 'ஆசிரியர்' பணி; ரூ.1.25 லட்சம் சம்பளம் - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாட்டின் கலை பண்பாட்டுத்துறை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
என்ன பணி?
வெளிநாட்டில் கிராமிய நடன ஆசிரியர்கள், பரதநாட்டிய ஆசிரியர்களுக்கான பணி. இது ஓராண்டு ஒப்பந்த பணி ஆகும்
எந்தெந்த நாடுகள்?
மியான்மர், ரீயூனியன், இந்தோனேசியா, சீஷெல்ஸ், கம்போடியா, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு, மலாவி, மொரிஷீயஸ், உகண்டா.
வயது: 25 வயது நிரம்பியிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,25,000

என்ன தகுதி வேண்டும்?
ஆங்கிலம் நன்கு எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும். பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனங்களில் பல்கலைக்கழக பாடத்திட்டத்தின் படி, சிறந்த முறையில் வகுப்புகள் மேற்கொள்ளும் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
என்னென்ன வசதிகள் செய்து தரப்படும்?
குறிப்பிட்ட நாட்டிற்கு ஒரு முறை சென்று திரும்புவதற்கான போக்குவரத்து செலவுகள், விசா செலவுகள், தங்குமிட செலவுகள் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை வழங்கும்.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, "பதிவாளர், தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகம், இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028" என்ற முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும்.
தபால் எப்போது அனுப்பப்பட வேண்டும்?
டிசம்பர் 31, 2025 மாலை 5.00 மணிக்குள்.
இந்தப் பணி குறித்து இன்னும் விவரமாக இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!



















