இறந்த குழந்தைகளும்; எரிந்த Bag-குகளும்: பாகிஸ்தானிற்கு காலிபாஃபுடன் கிளம்பிய 'இற...
Career Guidance: +2-க்கு பிறகு என்ன படிப்பது? குழப்பத்துக்கு தீர்வு தரும் வழிகாட்டல் நிகழ்ச்சி!
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்கhttps://forms.gle/mkX53JaTLuszofAt8
+2 தேர்வுகள் முடிந்துவிட்டன. அடுத்து என்ன படிப்பது? எங்கே படிப்பது? என்ற பதற்றமும் பரிதவிப்பும் மாணவர்களையும் பெற்றோரையும் துரத்துகிறது. தமிழகத்தில் 1500-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. தவிர, மத்திய அரசு நடத்தும் IIT, NIT, IIITs போன்ற உயராய்வு மையங்களில் ஏராளமான இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இவற்றில் எந்தத்துறையில் எந்தப் படிப்பைத் தேர்வு செய்வது?, எந்தப் படிப்புக்கு நல்ல எதிர்காலம்? என்பது மிகப்பெரிய கேள்வி. இந்தக் காலக்கட்டத்தில் பக்கத்து வீட்டுக்காரர், எதிர் வீட்டுக்காரரெல்லாம், "இந்த காலேஜ் போ", "அந்தப்படிப்பைப் படி" என்று அட்வைஸ் செய்வார்கள். வெளியூரிலிருக்கிற உறவுக்காரர், அவரது அனுபவத்திலிருந்து ஒரு அறிவுரையை வழங்குவார். உடன் படித்த மாணவர்கள், அவர்களின் பெற்றோர் என எல்லோரும் ஆளுக்கொரு விஷயத்தைச் சொல்லிக் குழப்புவார்கள்.
போதாக்குறைக்கு பிளஸ்டூ மாணவர்களின் பெற்றோருக்கு தினமும் 10 அழைப்பாவது அலைபேசியில் வந்துவிடுகிறது, "எங்கள் கல்லூரிக்கு வாருங்கள்" என்று. இன்னும் இரண்டாம் நிலை நகரங்களில் போலி கல்வியாளர்கள் தலையெடுத்து அட்வைஸ் செய்து ஒன்றுக்கும் ஆகாத கல்லூரிகளில் மாணவர்களைக் கொண்டு போய் சிக்க வைத்து விடுகிறார்கள்.
இவ்வளவு இன்னல்களுக்கு மத்தியில்தான் பெற்றோரும் மாணவர்களும் அடுத்த கட்டத்துக்கான படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்யவேண்டும். இந்தச்சூழலில் எவ்விதக் குழப்பமும் இல்லாமல் உங்களுக்குப் பொருத்தமான படிப்பையும் கல்லூரியையும் தேர்வு செய்ய உதவும் வகையில், கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து வரும் 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக்குப் பிறகு என்ன படித்தால் எதிர்காலம்' என்ற வழிகாட்டுதல் நிகழ்ச்சியை நடத்தவுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்கhttps://forms.gle/mkX53JaTLuszofAt8
சென்னை, ராயப்பேட்டை திரு.வி.க நெடுஞ்சாலையில், அஜந்தா ஹோட்டல் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கவுள்ள இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பெற்றோரும் மாணவர்களும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம், முன்பதிவு முக்கியம்!
இந்த வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதன்மையான கல்வியாளர்கள் நான்கு பேர் கலந்து கொண்டு உங்களுக்கு வழிகாட்ட இருக்கிறார்கள்.
25 ஆண்டுகளுக்கும் மேலாகப் பல ஆயிரக்கணக்கான மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டியுள்ள அனுபமிக்க கல்வியாளர் தா.நெடுஞ்செழியன், 'உலகளாவிய கல்வி வாய்ப்புகள்' குறித்து உரையாட உள்ளார். தா.நெடுஞ்செழியன், கல்வி தொடர்பாக ஏராளமான தொலைக்காட்சி, வானொலி, சமூக வலைதள நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளில் பங்கேற்றவர்.
அரசின் பல்வேறு கல்விக் குழுக்களில் உறுப்பினராக அங்கம் வகித்துள்ளார். ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை சார்ந்து 5 நூல்களை எழுதியுள்ளார். தமிழகத்தின் எளிய குடும்பங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்களை ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற மத்திய அரசின் பல உயராய்வு மையங்களுக்கு அனுப்பியவர். நிகழ்வில் மாணவர்கள், பெற்றோரின் கேள்விகளுக்கும் இவர் பதில் அளிக்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்கhttps://forms.gle/mkX53JaTLuszofAt8
25 ஆண்டுகளுக்கும் மேலாக, பல ஆயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கிவரும் கல்வியாளர் ரமேஷ் பிரபா, 'பொருத்தமான படிப்பைத் தேர்வு செய்வது எப்படி?' என்ற தலைப்பில் வழிகாட்டுதல் வழங்கவிருக்கிறார்.
ஊடகத் துறையில் மூத்த ஆளுமையான ரமேஷ் பிரபா, சமூக ஊடகங்களில் தொடர்ந்து மாணவர்களுக்கு உயர்கல்வி சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பிரபல இதழ்களில் பல தொடர்களையும், ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார்.
கலை, அறிவியல், பொறியியல், வணிகவியல், மருத்துவம் உள்பட அனைத்துத் துறைகள் குறித்தும் நிபுணத்துவம் கொண்ட ரமேஷ் பிரபாவிடம் மாணவர்கள் இந்த நிகழ்வில் தெளிவு பெறலாம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்கhttps://forms.gle/mkX53JaTLuszofAt8
கவனமே பெறாத, சிறப்பான எதிர்காலம்மிக்க பல படிப்புகளையும் கல்வி நிறுவனங்களையும் தமிழக மாணவர்களுக்கு அறிமுகம் செய்து பெற்றுத்தந்து வரும் இளம் கல்வியாளர் கலைமணி, இந்த நிகழ்வில் 'பொறியியலில் எந்தப் படிப்புக்கு எதிர்காலம்?' என்ற தலைப்பில் கருத்துப் பகிர்வு செய்யவிருக்கிறார்.
மரைன் இன்ஜினியரிங் முடித்து Merchant Navy Officer-ஆகப் பணியாற்றிய கலைமணி, கடந்த 6 ஆண்டுகளாக முழுநேர கல்வி வழிகாட்டுநராக பணியாற்றுகிறார். அதிகப் பொருள்செலவின்றி படிக்க வாய்ப்புள்ள சிறந்த எதிர்காலமுள்ள கல்வி நிறுவனங்களைத் தொடர்ந்து மாணவர்களுக்கு அறிமுகம் செய்து வருபவர்.
பல ஆயிரம் மாணவர்களுக்கு வழிகாட்டிய கலைமணியோடு இந்த நிகழ்வில் மாணவர்களும் பெற்றோரும் உரையாடலாம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்கhttps://forms.gle/mkX53JaTLuszofAt8
எப்போதும் எளிய குடும்பத்து மாணவர்களுக்கு IIT, NIT போன்ற கல்வி நிறுவனங்கள் மீது ஏக்கப்பார்வை உண்டு. ஆனால் சற்று மெனக்கிட்டால் அந்தக் கல்வி நிறுவனங்களில் இடம்பெறுவது எளிது. பொறியியலிலும் தொழில்நுட்பத்திலும் இளநிலை, முதுநிலை படிப்புகள் மட்டுமின்றி, ஆசிரியர் படிப்புகளைக்கூட இந்த நிறுவனங்களில் படிக்க முடியும்.
இந்த நிகழ்வில் பங்கேற்று அதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வருகிறார், பேராசிரியர் விக்னேஷ் முத்துவிஜயன். ஐ.ஐ.டி மெட்ராஸ் வெளித்தொடர்பு மற்றும் டிஜிட்டல் கல்வி மையத்தின் இணைத் தலைவராக உள்ள விக்னேஷ் முத்து விஜயன், ஏராளமான மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி IIT, NIT, IIIT போன்ற மத்திய அரசு நிறுவனங்களில் சேர வழிகாட்டியவர். இந்த நிகழ்விலும் அதுகுறித்து விரிவாக உரையாற்ற இருக்கிறார்.
இந்த நிகழ்வில் மாணவர்களும் பெற்றோரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம். ஆனால் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம். பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/mkX53JaTLuszofAt8 என்ற லிங்கை கிளிக் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்யவேண்டும்.
அல்லது, 044 66802980 / 044 66802907 ஆகிய எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு மிஸ்டு கால் செய்யலாம். அல்லது கீழேயிருக்கும் க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து உங்களைப் பற்றிய விவரங்களைத் தரலாம்.

தமிழகத்தின் முக்கியக் கல்வியாளர்கள் உங்களை நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை வழங்கவுள்ளார்கள். இந்த வாய்ப்பைத் தவற விடாதீர்கள்..!
















