செய்திகள் :

Chennai Rain: அப்டேட் கேட்கும் முதல்வர்; மழை இரவில் ஆப்சென்ட் ஆன பொறுப்பு அமைச்சர்கள்- பின்னணி என்ன?

post image

நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை சென்னையில் அதிகனமழை கொட்டித் தீர்த்திருக்கிறது. உச்சக்கட்டமாக பாரிஸில் 36 செ.மீக்கும் மேல் மழை பெய்திருக்கிறது. பல இடங்களிலும் தேங்கி நிற்கும் மழை வெள்ள நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால், களத்துக்கு வர வேண்டிய முக்கிய அமைச்சர்கள் பலரும் நேற்றைய மழை இரவில் ஆப்சென்ட் ஆகியிருந்தனர்.

களத்தில் அதிகாரிகள்
களத்தில் அதிகாரிகள்

நேற்று மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு வரைக்கும் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை பொழிந்திருந்தது. மாநகராட்சி ஆணையர் சமீரன் தலைமையில் அதிகாரிகளும் ஊழியர்களும் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து பணிகளை முடுக்கிவிட்டிருந்தனர். ஆனால், அதிகாரிகளோடு களத்தில் நிற்க வேண்டிய அமைச்சர்கள் பலரும் நேற்றிரவு ஆப்சென்ட் ஆகியிருந்தனர்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கையாக சென்னையின் 15 மண்டலங்களுக்கு 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களின் விவரம்:

- திருவொற்றியூர், மணலி – ரமேஷ்

- மாதவரம், தண்டையார்ப்பேட்டை – லோகேஷ்

- ராயபுரம், திரு.வி.க. நகர் – அருண்ராஜ்

- அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை – விஜய் பாலாஜி

- கோடம்பாக்கம், வளசரவாக்கம் – பிரபு

- ஆலந்தூர், அடையாறு – தமிழன் பார்த்திபன்

- பெருங்குடி, சோழிங்கநல்லூர் – விக்னேஷ்

இந்த அமைச்சர்கள் யாருமே நேற்றைய மழை இரவில் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளுக்கு வரவில்லை. தவெக சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மட்டுமே நள்ளிரவில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்திருந்தார்.

செங்கோட்டையன்
செங்கோட்டையன்

வானிலை மையம் அக்டோபர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை சென்னையில் கனமழை இருக்குமென அறிவித்திருந்தது. மேலும், கடந்த அக்டோபர் 14-ம் தேதி சென்னை ரிப்பன் பில்டிங்கில் மழை முன்னெச்சரிக்கைக் கூட்டமும் நடத்தப்பட்டிருந்தது. அதில் இந்தப் பொறுப்பு அமைச்சர்கள் அத்தனை பேரும் கலந்து கொண்டிருந்தனர்.

கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டும் முதல்வர் நியமித்த பொறுப்பு அமைச்சர்கள் பலரும் தங்களின் தொகுதிகளுக்கும் வெளிமாவட்ட நிகழ்ச்சிகளுக்கும் தேதி கொடுத்து சென்றிருக்கின்றனர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையை கையில் வைத்திருக்கும் மூத்த அமைச்சரான செங்கோட்டையனும் இக்கட்டான சூழலில் சென்னையில் இல்லை. அவரும் தன்னுடைய சொந்த ஊரில்தான் இருந்தார்.

முதல்வர் விஜய்

கேபினட்டில் முதல்வருக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்தும் வெளியில் தலைகாட்டவில்லை. மாநகராட்சி மற்றும் பேரிடர் மீட்புத்துறை அதிகாரிகளே கட்டுப்பாட்டு அறைக்கும் களத்துக்கும் மாறி மாறிப் போய் வேலை செய்திருக்கின்றனர். முதல்வர் விஜய் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை மழை அப்டேட் கேட்பதாக அதிகாரிகள் தகவல் சொல்கின்றனர். ஆனால், களத்திலிருந்து பணிகளை ஒருங்கிணைத்து முதல்வருக்கு அப்டேட் கொடுக்க வேண்டிய அமைச்சர்கள் களத்துக்கே வரவில்லை.

இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே பொறுப்பு அமைச்சர்களை நியமித்தும், அவர்கள் கொட்டித் தீர்த்த மழை இரவில் ஸ்பாட்டில் இல்லாதது மக்களுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது. முதல்வரின் உத்தரவின் பேரில் பொறுப்பு அமைச்சர்கள் இன்றிரவுக்குள் சென்னையை அடைவர் என தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறுகின்றனர்.

72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தேவா உடல் நல்லடக்கம்; சொந்த ஊர் மக்கள் திரண்டு வந்து அஞ்சலி!

`தேனிசைத் தென்றல்’ என்று கொண்டாடப்பட்ட இசையமைப்பாளர் தேவாவின் திடீர் மரணம் திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் நேற்று தேவாவின் உடலுக்கு முதலமைச்சர... மேலும் பார்க்க

Chennai Rain: 95% வெள்ள நீரை அகற்றிவிட்டோம்;நேரில் வந்த முதல்வர் விஜய் -அப்டேட் கொடுத்த அதிகாரிகள்!

நேற்று சென்னையில் பொழிந்த அதி கனமழையை தொடர்ந்து இன்று ரிப்பன் பில்டிங்கின் மழைநேர அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் விஜய் ஆய்வு செய்திருந்தார். CM Vijayசென்னையில் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை... மேலும் பார்க்க

``மேகவெடிப்பு அதிகரிக்கலாம்... திருப்புகழ் குழுவை அமைக்க வேண்டும்" - அன்புமணி சொல்வது என்ன?

சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்கலாம் எனத் திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட்டு வெள்ளத்தடுப்பு பணிகளை மேம்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிர... மேலும் பார்க்க

'சபரிமலையில் திருப்பதி மாடல் வசதிகள்' - முதல்வர் வி.டி.சதீசனின் திட்டம் என்ன?

சபரிமலையில் மண்டல - மகரவிளக்கு கால பூஜைகளுக்கான ஆயத்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கேரள முதல்வர் வி.டி.சதீசன் தலைமையில் பம்பை மற்றும் நிலக்கல்லில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தேவஸ... மேலும் பார்க்க

``இந்து அறநிலையத்துறை அலுவலகத்துக்குள் மழைநீர்; ஆவணங்கள் பாதுகாப்பு என்ன ஆவது?" - சேகர் பாபு கேள்வி

நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள ... மேலும் பார்க்க

ஹைதராபாத் விபரீதம்: தாண்டியா ஆடிய மாணவர்கள் மீது சரிந்த லைட்டிங் - கல்லூரி விழாவில் மாணவி உயிரிழப்பு

ஹைதராபாத் நாதர்குலில் உள்ள எம்.வி.எஸ்.ஆர் (MVSR) பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தாண்டியா நிகழ்ச்சியின்போது, விளக்குகளைத் தாங்கும் உலோகக் கட்டமைப்பு சரிந்து விழுந்த விபத்தில் முதலாம் ஆண்டு மாணவி உயிரிழ... மேலும் பார்க்க