செய்திகள் :

CJP: ``இது கோழைத்தனத்தின் அடையாளம்" - தாக்குதலுக்குப் பின் அபீஜித் திப்கே பதிவு!

post image

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள ஷஹீத் ஸ்மாரக் பகுதியில், இன்று மதியம் 3 மணியளவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த காக்ரோச் ஜனதா கட்சி (CJP) அழைப்பு விடுத்திருந்தது. இந்த தர்ணா போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக அக்கட்சியின் நிறுவனர் அபீஜித் திப்கே வந்துகொண்டிருந்தார். அப்போது, அவரது ஆதரவாளர்கள் அவரைத் தங்களது தோள்களில் சுமந்து முழக்கமிட்டபடி மேடையை நோக்கி அழைத்துச் சென்றனர்.

அப்போது கூட்டத்தில் புகுந்த சில மர்ம நபர்கள், திடீரென அபீஜித் திப்கேவின் கழுத்தில் இருந்த துண்டைப் பிடித்து இழுத்து, அவரை அடுத்தடுத்து பலமுறை கன்னத்தில் அறைந்து கீழே தள்ள முயன்றனர். கூட்ட நெரிசலில் அவர் மீதான தாக்குதல் தொடர்ந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை மீட்டனர். இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலும் விவரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு தழுவிய போராட்டம்:

ஒரு நையாண்டி அரசியல் இயக்கமாகத் தொடங்கப்பட்ட 'காக்ரோச் ஜனதா கட்சி', சமீபத்தில் டெல்லியில் உள்ள மாணவர்களைத் திரட்டித் தங்களது நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அமிர்தசரஸ், புனே, பெங்களூரு, ஹைதராபாத், லக்னோ ஆகிய நகரங்களிலும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகள் குளறுபடிகள் உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அபீஜித் திப்கே வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அவர் பதவி விலகாவிட்டால் டெல்லியில் மீண்டும் மிகப்பெரிய அளவில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றும், இந்த இயக்கம் இந்தியாவின் ஒட்டுமொத்த இளைஞர்களின் குரலாக உருவெடுத்து நாடு முழுவதும் விரிவடையும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

அபீஜித் திப்கேவின் எக்ஸ் (ட்விட்டர்) பதிவு:

தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அபீஜித் திப்கே, ``உடல் ரீதியான தாக்குதல்கள் என்பவை பயம் மற்றும் கோழைத்தனத்தின் அறிகுறியாகும். நாங்கள் எங்களது குரலைத் தொடர்ந்து அமைதியான வழியிலேயே பதிவு செய்வோம். நான் மகாத்மா காந்தி மற்றும் அண்ணல் அம்பேத்கரின் வழியைப் பின்பற்றுபவன். இந்த யுத்தத்தை அன்புடனும் அமைதியுடனும் நான் தொடர்ந்து எதிர்கொள்வேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

TASMAC: ``இது வெறும் 'எண்' துடைப்பு" - டாஸ்மாக் விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

தமிழ்நாட்டில் 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மாதம் ரூ.4,000 கோடியும், கடந்த நிதியாண்டில் ரூ.48,344 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. எனினும், குடும்பங்கள் சீரழிவதைத் தடுக்க பூரண மதுவிலக்கு கோரிக்கை தொடர்ந்... மேலும் பார்க்க

`மனம் பதறுகிறது; மூன்று வயது குழந்தை... சமூகம் பேரழிவை நோக்கி...' - பா.ரஞ்சித் ஆதங்கம்!

கும்மிடிப்பூண்டியில் 3-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தமிழ்நாடு அரசுக்கு சில ஆலோசனைகளுடன், கண்டனத்தையும் பதிவு... மேலும் பார்க்க

TASMAC : 'காலிபாட்டில் வாங்குறதுக்கு ஒரு மெஷினாய்யா...' - கொந்தளிக்கும் மதுபிரியர்கள்!

டாஸ்மாக் கடைகளில் காலிபாட்டில்களை திரும்பப்பெற வேண்டுமென நீதிமன்றம் கடுமையாக உத்தரவிட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் காலிபாட்டில்களை சேகரிக்க நவீன மெஷின் ஒன்... மேலும் பார்க்க

``தமிழ்நாடு முழுவதும் மாறுவேடத்தில் செல்லும் முதல்வர் தடுத்த குற்றங்கள் எத்தனை?" - சீமான் காட்டம்!

கும்மிடிப்பூண்டியில் 3-வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருக்கிற... மேலும் பார்க்க

TMC : ஒரு எம்.பி கூட இல்லாத, அதிகம் அறியப்படாத கட்சியுடன் 20 திரிணாமூல் MP-கள் இணைந்த பின்னணி!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 20 அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவில் எந்தவொரு தொகுதியிலும் வெற்றி பெறாத ஒரு புதிய கட்சியுடன் தாங்கள் இணைந்து விட்டதாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிட... மேலும் பார்க்க

``ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நல்லவர்தான்; ஆனால்..." - ல.ஜ.க-விலிருந்து விலகியது குறித்து தாடி பாலாஜி

தேர்தலுக்கு முன் லட்சிய ஜனநாயகக் கட்சியில் சேர்ந்த நடிகர் தாடி பாலாஜி, தற்போது அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி இருக்கிறார்.ஆரம்பத்தில் திமுக அனுதாபி எனச் சொன்னார்கள். விஜய் கட்சி தொடங்கிய போது அவரது ப... மேலும் பார்க்க