செய்திகள் :

Congress: "2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்!" - அமைச்சர் விஸ்வநாதன்

post image

2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக யார் முன்னிறுத்தப்படுவார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்குத் திருச்சியில் அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்திருக்கிறார்.

அமைச்சர் விஸ்வநாதன்
அமைச்சர் விஸ்வநாதன்

சட்டமன்றத் தேர்தலைப் போல, நாடாளுமன்றத் தேர்தலிலும் தவெக பெரிய வெற்றியைத் தமிழகத்தில் பதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியும், இப்போது தவெகவுடன் கூட்டணியில் இணைந்திருக்கிறது. மேலும், இந்தியா கூட்டணியிலும் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

பிரதமர் வேட்பாளர் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் விஸ்வநாதன், "2029-இல் பாராளுமன்றத்தினுடைய எதிர்க்கட்சித் தலைவரும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பிற்குரிய எங்கள் தலைவர் ராகுல் காந்தியே 2029-இல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்
உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன்

பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதோடு மட்டுமல்லாமல், மூன்று முறை, 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். மக்கள் ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

நரேந்திர மோடியினுடைய அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள். 2029-இல் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர். அவர் பிரதமர் ஆவதற்கு நாங்கள் ஒத்த குரலில், ஒற்றைக்கட்டையாக நிற்போம்" எனப் பேசியிருக்கிறார்.

`பரந்தூர் அருகே மதுரமங்கலத்தில் புதிய சிப்காட் தொழில் பூங்கா' - தமிழக அரசு எடுத்த முடிவு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவிருந்த சென்னையின் 2-வது புதிய பசுமை விமான நிலையத் திட்டத்திற்கு அப்பகுதி விவசாயிகளும் ஏகனாபுரம் மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர... மேலும் பார்க்க

``இன்றுமுதல் 4 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது" - ஐக்கிய வங்கிகள் சங்க கூட்டமைப்பு அறிவிப்பு!

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாததைக் கண்டித்து, நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் இன்று... மேலும் பார்க்க

தமிழகம் பின்னோக்கிச் சென்றுவிடக் கூடாது... கவனத்தில்கொள்வாரா முதல்வர்?

வேகமாக வளரும் மாநிலம் என பெயரெடுத்த தமிழ்நாடு 2024-25-ல் 15.98% ஜி.எஸ்.டி.பி (Gross State Domestic Product) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஆனால், இந்த வளர்ச்சி அதே வேகத்தில் அரசின் கஜானாவிலும் பிரதிப... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: 'வெளியூர் வேட்பாளர்களைக் களமிறக்கிய கழகங்கள்...' - பின்னணி என்ன?

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்த வேகத்தில், வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றன த.வெ.க, தி.மு.க, அ.தி.மு.க. மதுராந்தகம் தொகுதிக்கு மூன்று த... மேலும் பார்க்க

நாதக: 'இடைத்தேர்தலில் கண்டிப்பா போட்டியிடணுமா?' - தயக்கத்தில் தம்பிகள்.. சீமான் முடிவென்ன?

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் 'நாம் கண்டிப்பாக போட்டியிட வேண்டுமா..' என்ற கேள்விகள் நா.த.க சீனியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. நிர்வாகிகளின் விருப்பத்துக்கு மாறாக 'கண்டிப்பாக போட்டியிட வேண்டும்... மேலும் பார்க்க

`பட்டினப்பாக்கத்தில் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம்' - வெளியானது அரசாணை!

தமிழகத்தின் புதிய ஒருங்கிணைந்த தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற வளாகம் கட்டப்படும் என முதல்வர் விஜய் கடந்த செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டமன்றத்தில் 110-வது விதியின் கீழ் அறிவித்திருந்தார். ரூ.1,200 கோடி ம... மேலும் பார்க்க