செய்திகள் :

மேற்கு வங்க விநோதம்: மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் பணியாற்றும் 19 ஆயிரம் ஆசிரியர்கள்?

post image

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளின் நிலை குறித்த விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில் எத்தனை பள்ளிகளில் மாணவர்களே இல்லை என்ற விபரமும் இடம் பெற்று இருக்கிறது.

நாடு முழுவதும் மாணவர்கள் இல்லாத பள்ளிகள் 5,663 உள்ளன. அவற்றில் 4,133 பள்ளிகள் (சுமார் 73 சதவீதம்) மேற்கு வங்கத்தில் அமைந்துள்ளன. இதில் உத்தரப் பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இங்கு 313 பள்ளிகளில் மாணவர்களே கிடையாது. ஆனால் இப்பள்ளிகளில் 177 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதே போன்று மேற்கு வங்கத்தில் மாணவர்களே இல்லாத 4133 பள்ளிகளில் 19,502 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இது தவிர 6769 பள்ளிகளில் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகிறார். மேலும் 520 பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை. 29 சதவீத தொடக்கப்பள்ளிகளிலும், 30 சதவீதம் உயர் தொடக்கப்பள்ளியிலும் முறையே 31,684 மற்றும் 2,058 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் நிர்ணயிக்கப்பட்ட மாணவர்-ஆசிரியர் விகிதம் சரியாக அமையவில்லை.

இது குறித்து மேற்கு வங்க கல்வி அமைச்சர் தீபக் பர்மன் கூறுகையில்,''தனியார் பள்ளிகள் தரவுகளைச் சரியாகப் பதிவேற்றவில்லை. இப்பள்ளிகளில் சில, ஆசிரியர்களின் விவரங்களைப் புதுப்பித்திருந்தாலும் மாணவர்களின் விவரங்களைப் பதிவேற்றவில்லை.

இதனால், அப்பள்ளிகளில் ஆசிரியர்கள் இருந்தும் மாணவர்களின் எண்ணிக்கை பூஜ்ஜியம் எனக் காட்டப்படுகிறது. இத்தகைய சிக்கல்களைச் சரிசெய்ய நாங்கள் ஒரு வழிமுறையை உருவாக்கி வருகிறோம்.

அதேவேளையில், கடந்த பதினைந்து ஆண்டுகளில் நிலவிய பெரும் ஊழல் காரணமாக ஆசிரியர்கள் எவரும் கிட்டத்தட்ட நியமிக்கப்படவில்லை. நாங்கள் அனைத்து நடைமுறைகளையும் சீர்செய்து வருகிறோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் இத்தகைய சிக்கல்களைக் களைந்துவிட முடியும் என்று நம்புகிறோம்,” என்று அவர் கூறினார். மேற்கு வங்கத்தில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலை நிலவுகிறது. இதில் ஜார்க்கண்ட் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. இங்கு 36 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார்.

மம்தா பானர்ஜி ஆட்சியின் போது, ​​ஆசிரியர் பணி நியமனத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. மத்திய புலனாய்வு மற்றும் அமலாக்க இயக்குனரகம், அப்போதைய கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் பல திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை இதுபோன்ற ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்தது. இவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளனர். ஊழல் தொடர்பாக 25,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களை உச்ச நீதிமன்றம் பின்னர் ரத்து செய்தது.

பால் கொள்முதல் விலை... பஞ்சாப்பில் ரூ.65, தமிழ்நாட்டிலோ ரூ.34!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!நாட்டின் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையைத் தமிழக அரசு உயர்த்தினால்தான், தங்களுக்குச் சிறிதளவாவது லாபம் கிடைக்கும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த... மேலும் பார்க்க

தமிழ்நாடு கனிம வளத்துறையில் அடுத்தடுத்து எழும் புகார்கள்: TAMIN இருக்கும்போது புதிய நிறுவனம் ஏன்?

தமிழ்நாடு அரசுக்கு முக்கியமான வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் கனிம வளத்துறையில், நிர்வாக நடைமுறைகள், குவாரி கண்காணிப்பு, அதிகாரிகள் இடமாற்றம் மற்றும் டெண்டர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அடுத்த... மேலும் பார்க்க

மதுரை: மனைவியின் சடலத்துடன் அலைக்கழிக்கப்பட்ட முதியவர்... அரசு மருத்துவமனை அலட்சியத்தால் மன வேதனை!

மதுரை மாநகர் மேல பொன்னகரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் மதுரை மாநகராட்சியில்உதவி ஆணையாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற நிலையில், இவர் மனைவி மணியம்மை மதுரை மாவட்டக் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவல... மேலும் பார்க்க

'கண்ணின் இமை போல என்னைக் காத்து' - 41வது திருமண நாளில் மனைவியை நினைவுகூர்ந்த ஜேடிசி பிரபாகர்

ஆயிரம் விளக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான ஜே.சி.டி. பிரபாகரின் மனைவி கிரேஸ் ஜெயந்தி கடந்த 2023-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். இவர்களுக்கு இன்று 41-வது திருமண நாள்.... மேலும் பார்க்க

"இப்போ அவர் ரீல்ஸ் பண்றாரு; இந்த நோயை முதல்ல இறக்கி வைப்போம்!" - சென்னையில் பிரகாஷ் ராஜ்

சென்னையில் நடைபெற்ற அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு மாநாட்டில், பாஜக அரசை விமர்சித்தும், ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்தும் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசியிருக்கிறார்.Prakash Rajஅந்த மாநாட்டில் பிரகாஷ் ராஜ் பேச... மேலும் பார்க்க

"இனியும் தாமதிக்காமல் ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இயற்ற வேண்டும்" - நீலம் பண்பாட்டு மையம்

கேளம்பாக்கம் தையூரில் 22 வயதான பிரவீன் என்பவர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியைக் கைதுசெய்ய இளைஞர்கள் பலர் ஓ.எம்.ஆர் பகுதியி... மேலும் பார்க்க