செய்திகள் :

திருப்பத்தூர்: பலூன் ஊதும்போது தொண்டையில் சிக்கி விபரீதம்; 6 வயது சிறுவன் பலியான துயரம்!

post image

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகேயுள்ள பச்சூர் கிராமத்தில் வசிக்கும் ஜவுளி வியாபாரம் செய்யும் தம்பதி குமார் - சத்யா. இவர்களுக்கு 6 வயதில் சோம்நாத், சேஸ்நாத் என்று இரட்டையர் உட்பட மூன்று மகன்களும், இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். நேற்றைய தினம், பெற்றோர் வழக்கம்போல துணி வியாபாரத்துக்காக பர்கூர் சென்றிருக்கின்றனர்.

வீட்டில் இருந்த குழந்தைகள் பலூன் ஊதி விளையாடியிருக்கிறார்கள். அப்போது, இரட்டையரில் ஒருவரான சோம்நாத் ஊதிய பலூன் வெடித்து, சோம்நாத்தின் தொண்டையில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு துடித்த சிறுவன் சிறிதுநேரத்திலேயே மூச்சுப் பேச்சின்றி மயக்கமடைந்திருக்கிறான்.

அக்கம், பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் சிறுவனை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கின்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் சோம்நாத் உயிரிழந்துவிட்டதாகக் கூறியிருக்கின்றனர். இதையடுத்து, சிறுவனின் தொண்டையில் சிக்கியிருந்த பலூனை மருத்துவர்கள் அகற்றியிருக்கின்றனர்.

பலியான சிறுவன்

மருத்துவமனையில் தங்களது மகனை பிணமாக பார்த்த பெற்றோர் அதிர்ச்சிக்குள்ளாகி கதறி அழுதனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த நாட்றம்பள்ளி போலீஸார், சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். மேலும், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

`குழந்தைகள் விளையாடும் பொருள்களில், மூச்சுத் திணறலால் ஏற்படும் மரணங்களுக்கு பலூன்களே முதன்மைக் காரணம். தொண்டையில் பலூன் அல்லது அதன் உடைந்த துண்டுகள் சிக்கினால், அது மிகவும் ஆபத்தான, அவசர மருத்துவச் சூழலை ஏற்படுத்தும். எனவே, குழந்தைகளுக்குப் பலூன்களை வாயில் வைத்து ஊதக் கற்றுத் தரக்கூடாது’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆவடி: திருமணம் மீறிய நட்பு; பூட்டிய வீட்டுக்குள் பெண் கொலை - முதியவர் சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள கர்லபாக்கம், யாதவர் தெருவைச் சேர்ந்தவர் லதா (45). இவர் கர்லபாக்கம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் இவர் சில நாள்களாக வேலைக்குச் செல... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: சிசிடிவி-யில் ஸ்பிரே பெயின்ட்; ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்கில் பணம் கொள்ளை

காஞ்சிபுரம் மாவட்டம், சோமங்கலம் அருகே உள்ள புதுப்பேர் பகுதியில் தனியார் ஏ.டி.எம் மையம் உள்ளது. இங்கு அதிகாலை நேரத்தில் நுழைந்த ஒரு கும்பல், கேஸ் வெல்டிங் மூலம் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து லட்சக்கணக்க... மேலும் பார்க்க

திருவள்ளூர்: ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொலை - பட்டப்பகலில் நடந்த கொடூரம்!

திருவள்ளூர் அருகே சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரி என்கிற ரூபன் (33). இவர், குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி சிறைக்குச் சென்றவர். தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். அதனால் வெங்கல் காவல் நில... மேலும் பார்க்க

நெல்லை: சொகுசு காரில் கஞ்சா கடத்தி வந்த தூத்துக்குடி சிறை வார்டன்; சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் தமிழரசன். நெல்லை சிறையில் வார்டனாகப் பணிபுரிந்தார். கஞ்சா வழக்குகளில் சிக்கிய கைதிகளுடன் அவர் நெருக்கமாகப் பழகி அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்... மேலும் பார்க்க

`போலீஸாக ஆசைப்பட்ட எனக்கு யூனிபார்ம் வேல்யூ தெரியும்; ஒருவித கோபத்தில்.!'- அன்று போலீஸை அடித்த ஆகாஷ்

தஞ்சாவூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட ஃப்ளக்ஸ் மாநகராட்சி சார்பில் அகற்றப்பட்டது. இதில் விசிக-வினர் வைத்த ஃப்ளக்ஸ் அகற்றப்பட்டதால் அக்கட்சியினர் மாநகராட்சி அலுவலகம் எதிரே திடீர் சாலை மறியல் போராட்டம் ந... மேலும் பார்க்க

கடலூர்: `அண்ணிக்கு என்னைத்தான் பிடிக்கும்!’ - அண்ணனை `ஸ்கெட்ச்’ போட்டு முடித்த உடன்பிறவா தம்பி

கடலூர் மாவட்டம், ஒரங்கூர் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா கட்டுமானப் பணிகள் செய்யும் கூலித் தொழிலாளி. இவரும், பட்டாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த அஸ்வினிதா என்பவரும் ஒருவரையொருவர் காதலித்து, கடந்த 2016-ம... மேலும் பார்க்க