செய்திகள் :

CSK vs LSG: "நம்மால் மீண்டும் போட்டிக்குள் வர முடியும் என அவர்தான் உத்வேகம் கொடுத்தார்" - ருதுராஜ்

post image

ஐபிஎல் தொடரில் இன்று (மே 10) நடைபெற்ற சென்னை vs லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டி, ஒரு த்ரில்லர் போட்டி என்றே சொல்ல வேண்டும்.

அவ்வளவு நெருக்கமாக விளையாடி ஒரு அபார வெற்றியைப் பெற்றுள்ளது சென்னை அணி. இந்த வெற்றியின் மூலம் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்துள்ளது.

CSK vs lag match
CSK vs lag match

வெற்றிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ருதுராஜ், ​"ஆட்டம் சற்று நெருக்கமாகத்தான் சென்றது. ஆனால் 200 ரன்களைத் துரத்தும்போது, ஆட்டம் எப்போதும் கடைசி ஓவர்கள் வரை செல்லும் என்பது எங்களுக்குத் தெரியும்.

லக்னோ அணியின் ஜோஷ் ஆடிய விதம் வியக்கத்தக்கது. அவரது அதிரடி ஷாட்களுக்கு எங்களிடம் பதில் இல்லை. அவருக்கு எதிராகத் திட்டம் தீட்டுவதோ அல்லது ஃபீல்டிங் அமைப்பதோ சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது.

ருதுராஜ் கெய்க்வாட்
ருதுராஜ் கெய்க்வாட்

ஆனால் 6 முதல் 10 ஓவர்களில் நூர் மற்றும் ஜேமி சிறப்பாகப் பந்துவீசி ஆட்டத்தை மீட்டெடுத்தனர்.

​அவர்கள் விளையாடிய விதத்தைப் பார்த்தபோது 240 அல்லது 250 ரன்கள் வரும் என்று தோன்றியது. ஆனால், பந்துவீச்சாளர்களின் முயற்சியால் அவர்களை 200-க்குள் சுருட்டியது பாராட்டுக்குரியது." என்றார்.

DC vs KKR: "அவர்களை போன்ற வீரர்கள் அணியில் இருப்பது எனக்கு அதிர்ஷ்டம்" - கேப்டன் ரஹானே

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே-8)நடைபெற்ற டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் 143 என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா அணி. இத... மேலும் பார்க்க

நடப்பு சாம்பியன் RCB-க்கு மறுக்கப்பட்ட உரிமை; அகமதாபாத்துக்கு மாறும் ஃபைனல்! - பினன்ணி என்ன?

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் (RCB) சொந்த மைதானத்தில் நடைபெறுவதற்குப் பதிலாக அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அரசிடமிருந்து அதிக அளவிலா... மேலும் பார்க்க

`டெஸ்ட் கிரிக்கெட்டே பிரதானம்!' நாட்டுக்காக விளையாட கம்மின்ஸுக்கு சுமார் 100 கோடியை கொட்டும் ஆஸி.,

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டி20 லீக் போட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்கள் நாட்டு நட்சத்திர வீரர்களை தக்கவைத்துக் கொள்ள கிரிக்கெட் வாரியங்கள் புதிய உத்திகளை கையாண்டு வருகின்றன. இதன் ... மேலும் பார்க்க

DC vs CSK: "இப்போது எங்கள் அணியின் முதுகெலும்பு சஞ்சு சாம்சன்தான்" - கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று (மே.6) நடைபெற்ற சென்னை vs டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டியில் டெல்லி அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து பிளே ஆஃப் ரேசில் நீடிக்கிறது சென... மேலும் பார்க்க

`சஞ்சு சாம்சன் தன்னை சஞ்சு `சாம்பியன்' என நிரூபிக்க... டெல்லியிலும் `விசில்' போட்டிருக்கிறது சிஎஸ்கே

ஏப்ரலில் சென்னையில் வைத்து டெல்லியை வீழ்த்தியது சிஎஸ்கே. அந்தப் போட்டியில் சதம் அடித்து அதற்கான முக்கிய காரணமாக சஞ்சு சாம்சன் இருந்தார். இந்தப் போட்டியிலும் சாம்சனின் அற்புதமான இன்னிங்க்ஸ்தான் வெற்றிக... மேலும் பார்க்க

`கை மாறுகிறது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி' - ரூ.15,660 கோடிக்கு வாங்கிய லட்சுமி மித்தல், பூனாவாலா!

சமீபத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிர்லா நிறுவனத்திற்கு ரூ.16,660 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதனை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியையும் விற்பனை செய்ய அதன் உரிமையாளர் முடி... மேலும் பார்க்க