செய்திகள் :

DC: "ஹீரோ லோகேஷ் கனகராஜ்தான் தூணாக நிற்கின்றனர்" - 'டிசி' படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் பாராட்டு

post image

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘டிசி’.

கடந்த 7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படத்தில் வாமிகா கேபி நாயகியாக நடித்திருக்க, சஞ்சனா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

DC | டிசி
DC | டிசி

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இவரது இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. இந்நிலையில் 'டிசி' படக்குழுவை நடிகர் அல்லு அர்ஜுன் பாராட்டியிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பக்கத்தில்,"'டிசி' தமிழ் திரையுலகின் கிளாசிக். சினிமா ரசிகர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படம். படக்குழுவுக்கு என் வாழ்த்துகள்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு சல்யூட். அனிருத் மாஸ்டர் பூஸ்டர். எல்லா கலைஞர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக வாமிகா கேபி மற்றும் ஹீரோ லோகேஷ் கனகராஜ்தான் மிகப்பெரிய தூணாக நிற்கின்றனர்" என்று பாராட்டி பதிவிட்டிருக்கிறார்.

"நான் 'கொடுக்காப்புளி'னு யாருக்கும் தெரியல; அந்த குழந்தை நட்சத்திரமும் நான்தான்!" - நடிகர் வசந்த்

'வதந்தி' சீரிஸின் முதல் சீசனுக்குக் கிடைத்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசன் சமீபத்தில் வெளியானது. இந்த சீரிஸில் பிரபா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நடிகர் வசந்த். நடிகர் வச... மேலும் பார்க்க

DC: `வேற லெவல் ஸ்டைலா இருக்கு' - படக்குழுவினரைப் பாராட்டிய நடிகர் மகேஷ் பாபு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள படம் 'டிசி'. நடிகை வாமிகா கபி, நடிகர் சஞ்சீவ் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்துக... மேலும் பார்க்க

Vishwanath & Sons: "ஒரு படத்தின் வெற்றி என்பது, டிக்கெட் மற்றும் வசூல் கணக்கில் இல்லை!" - சூர்யா

சூர்யாவின் 'விஸ்வநாத் & சன்ஸ்' படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் ராதிகா சரத்குமார், மமிதா பைஜூ, ரவீனா டாண்டன் ஆகியோர் நடித்திருக்கிறார்... மேலும் பார்க்க

Magudam Review: இரட்டை வேட ஆக்ஷன் ட்ராமா... இயக்குநராக விஷால் சாதிக்கிறாரா, சோதிக்கிறாரா?

மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்துக்கொண்டு, மனைவி ஜமுனா (துஷாரா விஜயன்) மற்றும் இரண்டு குழந்தைகளுடன் எளிய நடுத்தர வாழ்க்கை வாழ்கிறார் கிருபாகரன் (விஷால்). இன்னொரு புறம், கப்பல்களையே விலைக்கு வாங்கும் அளவ... மேலும் பார்க்க

"நான்தான் உண்மையான கருப்பு; கஷ்டப்பட்டு 'கருப்பு' படத்தில் ஆடினேன்; ஆனா..."- மன்சூர் அலிகான் ஆதங்கம்

மைதீன் இயக்கத்தில் துஷி, ஜனனி குணசீலன், ஜெயபிரகாஷ், செந்திகுமாரி, சுப்ரமணிய சிவா உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ‘ஆல் பாஸ்’. இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் ... மேலும் பார்க்க

"'உன் வேலையை நேசி, கற்​றுக்​கொண்டே இரு' என்று ரஜினி சார் சொன்னார்" - ஸ்ரேயா சரண் ஷேரிங்

‘சி​வாஜி’ திரைப்​படத்​தில் ரஜினி​காந்​துடன் பணி​யாற்​றிய அனுபவம் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் 'Pinkvilla' ஊடகத்திற்குப் பேட்​டி​ அளித்​திருக்கிறார். அந்தப் பேட்டியில் பேசியிருக்கும் அவர், "ரஜினி சாரை நே... மேலும் பார்க்க