மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு...
Devi Sri Prasad: "ஒரு புதிய பயணம் தொடங்குகிறது" - நடிகராக அறிமுகமாகும் தேவி ஶ்ரீ பிரசாத்!
தமிழ், தெலுங்கு என இத்தனை வருடங்களாக இசையில் பெரும் ஹிட்களை அடுக்கியவர் இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத்.
மியூசிக் என்பதைத் தாண்டி சில படங்களில் கேமியோ செய்து நடிகர்களுடன் நடனமும் அவர் ஆடியிருக்கிறார். தற்போது முழுமையாக நடிப்பின் பக்கம் அவர் இறங்கியிருக்கிறார்.

கதாநாயகனாக அவர் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகியிருக்கிறது.
தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில், டோலிவுட் இயக்குநர் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகும் 'எல்லம்மா (Yellamma)' படத்தில்தான் கதாநாயகனாக நடிப்பதற்கு அவர் கமிட்டாகியிருக்கிறார். அப்படத்தின் முன்னோட்ட காணொளி இன்று வெளியாகியிருக்கிறது.
நடிகராக அறிமுகமாவது குறித்து இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத், அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், "தேவி தெய்வத்தின் (அவர் இசையமைப்பாளராக முதலில் அறிமுகமான படத்தின் பெயர் இது) ஆசீர்வாதத்துடன் எனது இசை அறிமுகம் தொடங்கியது.
அது எனக்கு அனைவரது இதயங்களிலும் ஒரு இடத்தைப் பெற்றுத் தந்தது. அது உங்கள் குடும்பத்தில் என்னை ஒருவராக ஆக்கியது.
நீங்கள் மழை போல அள்ளித் தரும் அன்புக்காக எப்போதும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
THEN..
— DEVI SRI PRASAD (@ThisIsDSP) January 15, 2026
with the Blessings of “DEVI” (Goddess), my Musical Debut started and earned me an Eternal place in all your Hearts & made me one among ur Families..❤️
Iam always Grateful to each and Everyone of you for all the Love You have been showering on me always
NOW..
AGAIN..…
இப்போது மீண்டும் எல்லம்மா தெய்வத்தின் (அவர் நடிகராக அறிமுகமாகும் படத்தின் பெயர்) ஆசீர்வாதத்துடன், ஒரு புதிய பயணம் தொடங்குகிறது.
உங்கள் இதயங்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்கும் ஒரு தெய்வீக வாய்ப்பு. எல்லோரும் எனக்கு இன்னும் அதிக அன்பும் ஆசீர்வாதமும் தருவீர்கள் என்று நம்புகிறேன்.
ஒவ்வொரு அடியிலும் என்னுடன் இருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது மிகவும் உற்சாகமானதாக இருக்கப் போகிறது." எனப் பதிவிட்டிருக்கிறார்.




















