செய்திகள் :

Doctor Vikatan: தொடர் கருச்சிதைவு... Blood Thinner மருந்துகள் உதவுமா?

post image

Doctor Vikatan: மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுபவர்களுக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் பிளட் தின்னர் மருந்துகள் பரிந்துரைக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... இது இதயநோயாளிகளுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துதானே... கர்ப்பத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?

பதில் சொல்கிறார்,  சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்
மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

தொடர்ச்சியான கருச்சிதைவு (Recurrent Pregnancy Loss) என்பது ஒரு பெண்ணுக்கு மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை கருச்சிதைவு அதாவது அபார்ஷன் ஏற்படுவதைக் குறிக்கிறது.

இதற்கான காரணத்தைக் கண்டறிந்த பிறகு, மருத்துவர் தேவைப்பட்டால்  ஹெப்பாரின் (Heparin) எனப்படும் பிளட் தின்னர்  ஊசிகளைப் பரிந்துரைக்கலாம்.

கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துகள் நஞ்சுக்கொடி (Placenta) வழியாகவே செல்லும். இந்த ரத்த ஓட்டத்தில் ஏதேனும் தடங்கல் ஏற்பட்டால் கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

த்ரோம்போஃபிலியா (Thrombophilia) எனப்படும் பிரச்னை, அதாவது ரத்தம் எளிதில் உறையக்கூடிய ஒரு நிலை உருவாகலாம். இதனால் நஞ்சுக்கொடிக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, குழந்தைக்கு வளர்ச்சித் தடை (IUGR) அல்லது கருவிலேயே குழந்தை இறந்துபோவது (IUD) போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.

ஆன்டி-பாஸ்போலிபிட் ஆன்டிபாடி சிண்ட்ரோம் (APS) எனப்படும் தற்காப்பு மண்டலக் குறைபாடு (Autoimmune issue) ஏற்படலாம். ரத்தப் பரிசோதனை மூலம் இது உறுதி செய்யப்பட்டால், கர்ப்ப காலம் முழுவதும் ஆஸ்பிரின் (Aspirin) மற்றும் லோ மாலிகுலர் வெயிட் ஹெப்பாரின் (LMWH) சிகிச்சை அளிக்கப்பட வேண்டியிருக்கும். இது ஆரோக்கியமான குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

கர்ப்ப காலத்தில் தாயிடமிருந்து குழந்தைக்குத் தேவையான ரத்த ஓட்டம் மற்றும் ஊட்டச்சத்துகள் நஞ்சுக்கொடி (Placenta) வழியாகவே செல்லும்.

சில குழந்தைகளுக்குப் பிறவியிலேயே பெற்றோரிடமிருந்து த்ரோம்போஃபிலியா பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். புரதம் C (Protein C) அல்லது புரதம் S (Protein S) குறைபாடு போன்ற மரபணு ரீதியான காரணங்களாலும் ரத்தம் உறைய வாய்ப்புள்ளது.

கர்ப்ப காலத்தில் ஹெப்பாரின் பாதுகாப்பானதா என்ற கேள்வியும் பலருக்கு இருக்கலாம். அந்தப் பயமே தேவையில்லை.  கர்ப்ப காலத்தில் ஹெப்பாரின் பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பானது. இது நஞ்சுக்கொடியைத் தாண்டி குழந்தைக்குச் செல்லாது. எனவே, குழந்தைக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இது தாயின் ஆரோக்கியத்திற்கு மட்டுமே உதவும்.

அதே சமயம், அனைத்து கருச்சிதைவுகளுக்கும் ஹெப்பாரின் மருந்து வழங்கப்படுவதில்லை. குரோமோசோம் பிரச்னைகள், கருப்பை பிரச்னைகள் அல்லது ஹார்மோன் குறைபாடுகள் உள்ளனவா என்று முதலில் பரிசோதிக்கப்படும்.

ஏபிஎஸ் டெஸ்ட் எனப்படும் ரத்தப் பரிசோதனையில் ரத்தம் உறையும் பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே இந்தச் சிகிச்சை அளிக்கப்படும். இத்தகைய சூழலில் ஹெப்பாரின் உயிர் காக்கும் மருந்தாகச் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:என் நண்பருக்கு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேச்சு வராமல் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் இது 'பெயின் ஸ்ட்ரோக்' என்றும், அரிதினும... மேலும் பார்க்க

'ஒல்லி'யாக இருந்தாலும் 'பெல்லி' இருந்தால்..!' - இந்திய மரபணு உருவாக்கும் மாரடைப்பு ஆபத்து!

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதய ரத்தநாள நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைக... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹேர் டை உபயோகித்தால் கண்களில் அரிப்பு, நீர் வடிதல்... என்ன காரணம்?

Doctor Vikatan: நான் பல வருடங்களாக தலைக்கு டை அடித்து வருகிறேன். ஆனால், கடந்த சில வருடங்களாக டை அடிக்கும் நாள்களில் கண்களில் அரிப்பும் நீர் வடிதலும் இருக்கிறது. டை அலர்ஜிதான் காரணம் என்கிறார்கள் சிலர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்துமா Salt therapy?

Doctor Vikatan: சால்ட் தெரபி (Salt therapy) என்ற ஒன்று ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்தும் என்று சமீபத்தில் ஒரு செய்தியில்படித்தேன். அது என்ன சால்ட் தெரபி... அது உண்மையிலேயே ஆஸ்துமா பாதிப்... மேலும் பார்க்க

கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

'கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந... மேலும் பார்க்க

Doctor Vikatan: மெனோபாஸுக்கு பிறகு திடீர் ப்ளீடிங்... புற்றுநோய் பரிசோதனை தேவையா?

Doctor Vikatan: என் வயது 55. மாதவிடாய் நின்று 4 வருடங்கள் ஆகின்றன. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு எனக்கு திடீரென ப்ளீடிங் ஆனது. மாதவிடாய் நின்றுபோன பிறகு இப்படி ப்ளீடிங் ஆனால், அது புற்றுநோயா... மேலும் பார்க்க