செய்திகள் :

Doctor Vikatan: நகங்களைப் பாதிக்குமா நெயில் ஆர்ட்?

post image

Doctor Vikatan: சமீபகாலமாக இளம் பெண்கள் மத்தியில் நெயில் ஆர்ட் என்ற விஷயம் பிரபலமாகி வருகிறது. அவர்களைப் பார்க்கும்போது எனக்கும் நெயில் ஆர்ட் செய்துகொள்ளும் ஆசை வருகிறது. நெயில் ஆர்ட் செய்துகொள்வது எந்த அளவுக்குப் பாதுகாப்பானது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா

சருமநல மருத்துவர் பூர்ணிமா
சருமநல மருத்துவர் பூர்ணிமா

நெயில் ஆர்ட், ஜெல் நெயில் பாலிஷ் போல இன்று பலவிதமான நக அலங்காரங்கள் டிரெண்டாக உள்ளன. சராசரியாக 10 பேரில் 8 பேருக்கு இதுபோன்று நகங்களை அலங்காரம் செய்துகொள்கிற பழக்கம் உள்ளதையும் பார்க்கிறோம்.

அதிலும் பலர் ஜெல் நெயில் பாலிஷை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில், சாதாரணமான நெயில் பாலிஷ் விரைவில் உரிந்து வந்துவிடும். மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், ஜெல் நெயில் பாலிஷ், மாதக்கணக்கில் அப்படியே இருக்கும். இதனால்தான் பலருக்கும் ஜெல் நெயில் பாலிஷ் பிடித்தமானதாக உள்ளது.

இன்று அதிகமானோர் நெயில் ஆர்ட்டை விரும்பி செய்துகொள்வதால், அதை முற்றிலும் வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால், முடிந்தவரை இதில் பாதுகாப்பு நடவடிக்கையாக சில விஷயங்களைச் செய்ய வேண்டும்.

நகங்களின் மீது பல அடுக்குகளாக இந்த அலங்காரங்கள் செய்யப்படும். பிறகு மின் விளக்கின் கீழ் காயவைத்து, அந்த டிசைனை திடமானதாக மாற்ற வேண்டும். இதற்காக புற ஊதாக்கதிர் விளக்குகளை பார்லர்களில் பயன்படுத்துவார்கள்.

அப்போதுதான் அந்த ஆர்ட்டானது நீண்ட நாள்களுக்கு நகங்களில் அப்படியே இருக்கும். இந்த முறை நகங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல. புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்சத்தால் புற்றுநோய் வரை வரும் ஆபத்து இருக்கிறது.

இந்தப் பிரச்னையைத் தவிர்க்க, அடிக்கடி நெயில் ஆர்ட் செய்வதைத் தவிர்க்க வேண்டும். புற ஊதாக்கதிர் விளக்கு வெளிச்சத்துக்குப் பதிலாக, எல்.இ.டி விளக்குகள் பயன்படுத்துகிற பார்லர்களில் நக அலங்காரம் செய்துகொள்ளலாம். அலங்காரத்துக்கான பாலிஷ் தரமானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். 

நெயில் ஆர்ட்
நெயில் ஆர்ட்

தினசரி வாழ்க்கை முறையாக மாற்றிக் கொள்ளாமல் ஏதாவது பண்டிகைகள், சுப நிகழ்வுகள், மேடை நிகழ்ச்சிகள் போன்றவற்றின்போது நெயில் ஆர்ட் செய்துகொள்ளலாம். நெயில் ஆர்ட் செய்துகொள்வதைப் போலவே, அதை முறையாக அகற்றுவதும் முக்கியம்.

நகமானது சேதமடைவது, காகிதம் போல கிழிவது போன்ற சிக்கல்களும் இருக்கும். அதனால் நெயில் ஆர்ட் செய்துகொண்டவர்கள், ஊட்டச்சத்துள்ள உணவுகளை, குறிப்பாக... புரதச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது முக்கியம்.

பயோட்டின் ஊட்டச்சத்து கூந்தலுக்கு உதவாது. ஆனால், நகங்களுக்குப் பெரிய ஆதாரமாக அமையும்.
அதேபோல நெயில் ஆர்ட் செய்யும்போது நகக்கண்ணான கியூட்டிக்கிளைக் குத்தி, குடைந்து சேதப்படுத்திவிடக் கூடாது.

நகத்தின் பாதுகாப்புக்காகவே நகக்கண்கள் இருக்கின்றன. அதை வடிவமைக்கிறேன் என்று பிரச்னையை உருவாக்கிவிடக் கூடாது. இந்த கியூட்டிக்கிளை சேதப்படுத்துவதால்தான் பூஞ்சைத்தொற்று உருவாகிறது.

இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், கவனமாக நெயில் ஆர்ட் செய்துகொண்டால் நகங்கள் அழகாக இருப்பதுடன், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: தொடர் கருச்சிதைவு... Blood Thinner மருந்துகள் உதவுமா?

Doctor Vikatan: மீண்டும் மீண்டும் கருச்சிதைவு ஏற்படுபவர்களுக்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் பிளட் தின்னர் மருந்துகள் பரிந்துரைக்கப்படும் என்கிறார்களே, அது உண்மையா... இது இதயநோயாளிகளுக்குப் பரிந்துரைக்... மேலும் பார்க்க

Doctor Vikatan: அறுவை சிகிச்சைக்குப் பிறகான வலி... பக்கவாதத்தை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:என் நண்பருக்கு அறுவை சிகிச்சை முடிந்து குணமடைந்து வரும் நிலையில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, பேச்சு வராமல் மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் இது 'பெயின் ஸ்ட்ரோக்' என்றும், அரிதினும... மேலும் பார்க்க

'ஒல்லி'யாக இருந்தாலும் 'பெல்லி' இருந்தால்..!' - இந்திய மரபணு உருவாக்கும் மாரடைப்பு ஆபத்து!

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு மட்டும் உடலில் கொழுப்பு அதிகமாக சேர்வதால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற இதய ரத்தநாள நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் ஒல்லியாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற பிரச்னைக... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஹேர் டை உபயோகித்தால் கண்களில் அரிப்பு, நீர் வடிதல்... என்ன காரணம்?

Doctor Vikatan: நான் பல வருடங்களாக தலைக்கு டை அடித்து வருகிறேன். ஆனால், கடந்த சில வருடங்களாக டை அடிக்கும் நாள்களில் கண்களில் அரிப்பும் நீர் வடிதலும் இருக்கிறது. டை அலர்ஜிதான் காரணம் என்கிறார்கள் சிலர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்துமா Salt therapy?

Doctor Vikatan: சால்ட் தெரபி (Salt therapy) என்ற ஒன்று ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்னைகளை குணப்படுத்தும் என்று சமீபத்தில் ஒரு செய்தியில்படித்தேன். அது என்ன சால்ட் தெரபி... அது உண்மையிலேயே ஆஸ்துமா பாதிப்... மேலும் பார்க்க

கர்ப்பிணிகள் Paracetamol சாப்பிட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்குமா? - ஆய்வு முடிவுகள் சொல்வதென்ன?

'கர்ப்பமான பெண்கள் பாராசிட்டமால் சாப்பிடுவது நல்லதல்ல. அவர்கள் அந்த மாத்திரையை எடுத்துக்கொண்டால் குழந்தைகளுக்கு ADHD, ஆட்டிசம் போன்ற நோய்கள் ஏற்படுகிறது' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்பு கூறியிருந... மேலும் பார்க்க