செய்திகள் :

Doctor Vikatan: நுரைத்து வெளியேறும் சிறுநீர்... கிட்னி பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா?

post image

Doctor Vikatan: என் வயது 54. சிறுநீர் கழிக்கும்போது எனக்கு அவ்வப்போது அது நுரைத்து வெளியேறுகிறது. இப்படி சிறுநீரில் நுரைத் தள்ளினால், அது சிறுநீரகப் பாதிப்பாக இருக்கலாம் என்கிறார்கள் சிலர். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... நான் என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் என். ராகவன்

மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் என். ராகவன்
மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் என். ராகவன்

பொதுவாக சிறுநீர் கழிக்கும்போது நுரை வந்தால், பலரும் பயப்படுவார்கள். ஆனால், அப்படி நுரை வரும்போதெல்லாம் அது சிறுநீரகப் பாதிப்புதான் என்று நினைத்து பயப்படத் தேவையில்லை.

சிறுநீரில் நுரைத் தள்ள, சிறுநீரகப் பாதிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுமட்டுமே காரணமாகாது. உடலில் தொற்று (infection) ஏற்பட்டிருக்கலாம் அல்லது உடலில் நீர்ச்சத்து குறைந்து, தண்ணீர் குறைவாகக் குடித்திருந்தாலும்கூட சிறுநீர் நுரைத்து வெளியேறலாம்.

சிறுநீர் கழிக்கும்போது இதுபோன்று அடிக்கடி நுரை வருகிறது என்றால், நீங்கள்  மருத்துவரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது. மருத்துவர் தொடர்ச்சியான பரிசோதனைகளை (series of tests) செய்யப் பரிந்துரைப்பார். மிக முக்கியமாக நீரிழிவு நோய் (diabetes) இருக்கிறதா என்று பார்ப்பார்.
சர்க்கரை நோய் பாதிப்பினால் சிறுநீரில் புரதக்கசிவு (protein leak) ஏற்படுகிறதா என்பதையும் மருத்துவர் கவனிப்பார்.

கிட்னி

முன்பெல்லாம் சிறுநீரில் புரதக்கசிவு இருந்தால், அது மிகவும் மோசமான ஒரு நிலைமை என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது அப்படி இல்லை. தற்போது நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது (diabetic control) மிகவும் எளிது. 

அதோடு இதற்கான சிகிச்சை முறைகளிலும் (treatment options)  நிறைய முன்னேற்றங்கள் வந்துள்ளன. எனவே, சிறுநீரில் நுரை வருவதைக் கண்டு அதை மோசமான விஷயமாக நினைத்து பயப்பட வேண்டாம். அதே சமயம், அதை ஓர் எச்சரிக்கை சிக்னலாக (warning sign) மட்டும் எடுத்துக்கொண்டு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவெல்லாம் எடுக்க வேண்டுமோ, அவற்றைச் செய்தாலே போதுமானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும் குணமாகாத மலச்சிக்கல்... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக மலச்சிக்கல் பிரச்னை இருக்கிறது.காலையில் எழுந்தவுடன் மலம் கழிக்காவிட்டால் அன்று முழுவதும் வயிறு உப்புசமாக இருக்கிறது. நார்ச்சத்துள்ள உணவுகள் அதிகம் சாப்பிடுகிறேன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: பைக்கிலிருந்து விழுந்ததால் கால் மூட்டு கிழிசல்; பிசியோதெரபி மட்டும் போதுமா?

Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்று வாரங்களுக்கு முன்பு பைக்கிலிருந்து இறங்கும்போது என் பேன்ட் கியரில் மாட்டிக்கொண்டது. இதனால் நான் கீழே விழுந்து, முட்டியில் கடுமையா... மேலும் பார்க்க

Doctor Vikatan: 35 வயதில் மறதி... டிமென்ஷியா பாதிப்பின் ஆரம்ப அறிகுறியாக இருக்குமா?

Doctor Vikatan:என் வயது 35. சமீபகாலமாக மிகச் சிறிய விஷயங்களைக்கூட மறந்துவிடுகிறேன். இது டிமென்ஷியா எனப்படும் ஆரம்பகால ஞாபகமறதி நோயின் அறிகுறியா... இதற்கு சிகிச்சை எடுக்க வேண்டுமா?பதில் சொல்கிறார், சென... மேலும் பார்க்க

Doctor Vikatan: அடிக்கடி படுத்தும் கால் ஆணி பாதிப்பு... நிரந்தர தீர்வே கிடையாதா?

Doctor Vikatan: எனக்கு பாதங்களில் அடிக்கடி கால் ஆணி பிரச்னை வருகிறது. கால் ஆணிக்கான பிளாஸ்டர் ஒட்டினாலும் மீண்டும் மீண்டும் வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வே கிடையாதா?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்... மேலும் பார்க்க

Covid-19 : `தமிழ்நாட்டில் கொரோனா பரவல்... பாதிப்பா?' - சுகாதாரத்துறை விளக்கம்!

கொரோனாவால் சமீபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை கூறுவதாவது..."சமீபத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக ஆந்திர மாநில... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிபி (BP) நார்மல்... ஆனாலும், அடிக்கடி தலைச்சுற்றல்... காரணம் என்ன?

Doctor Vikatan:எனக்கு அடிக்கடி தலைச்சுற்றல் (Giddiness) ஏற்படுகிறது, ஆனால், ரத்த அழுத்தம் (BP) சரியாகத்தான் இருக்கிறது. இதற்கு வேறு என்ன காரணமாக இருக்கும்?பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நரம்பியல... மேலும் பார்க்க