செய்திகள் :

Doctor Vikatan: 10 வருடங்களாக குழந்தையில்லை... ஐவிஎஃப் சிகிச்சை உடனே பலன் தருமா?!

post image

Doctor Vikatan: என் வயது 35. பத்து வருடங்களுக்கு முன் திருமணமானது. இதுவரை கர்ப்பம் தரிக்கவில்லை. நிறைய மருத்துவர்களைப் பார்த்து மாத்திரைகள் எடுத்தும் பலனில்லை. இனி மருந்து, மாத்திரைகள் பலனளிக்காது, ஐவிஎஃப் சிகிச்சைதான் ஒரே தீர்வு என்கிறார்கள் உறவினர்கள். ஐவிஎஃப் சிகிச்சையில் உடனே பலன் கிடைக்குமா... நம்பி செய்து கொள்ளலாமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.  

மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்

பத்து வருடங்களாக குழந்தையில்லை என குறிப்பிட்டுள்ள நீங்கள், உங்களுக்கோ, உங்கள் இணையருக்கோ உள்ள உடல்நலக் கோளாறுகள், நோய் வரலாறு, வேறு பிரச்னைகள் குறித்து எதையும் குறிப்பிடவில்லை. குழந்தையின்மைக்காக நீங்கள் என்னென்ன சிகிச்சைகள் மேற்கொண்டீர்கள், அவை ஏன் பலனளிக்கவில்லை என்ற விவரங்களும் தெரியவில்லை. 

ஐவிஎஃப் சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்,  சம்பந்தப்பட்ட தம்பதியர்  அந்தச்  சிகிச்சைக்குத் தகுதியானவர்களா என்பதை முதலில் பார்க்க வேண்டும்.  கர்ப்பப்பையில் பிரச்னைகள் இருக்கும்நிலையில் ஐவிஎஃப் சிகிச்சை தொடங்கப்பட்டால் அந்தச் சிகிச்சை வெற்றிபெறாது. இன்னும் சொல்லப்போனால் கர்ப்பப்பை தொடர்பான அடிப்டையான சில பிரச்னைகள் சரிசெய்யப்பட்டாலே, அந்தப் பெண்ணுக்கு ஐவிஎஃப் சிகிச்சையே தேவைப்படாமல், கருத்தரிக்கும் நிலை கூட ஏற்படலாம்.

கர்ப்பப்பையில் ஃபைப்ராய்டு, நீர்க்கட்டிகள், சாக்லேட் கட்டிகள், தொற்று  உள்ளிட்ட பிரச்னைகள் இருந்தால் அவை முதலில் சரிசெய்யப்பட வேண்டும். எளிமையான லேப்ராஸ்கோப்பி மற்றும் ஹிஸ்ட்ரோஸ்கோப்பி முறையிலேயே இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்து விட முடியும்.  இதன் பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு 2  முதல் 3 மாத ஓய்வு கொடுத்து, புண்ணெல்லாம் முழுமையாக ஆறிய பிறகு ஐவிஎஃப் சிகிச்சை தேவையாக இருந்தால் அது பரிந்துரைக்கப்படும்.

குழந்தையின்மை

கர்ப்பப்பையில் மட்டுமல்ல சில நேரங்களில் கருக்குழாய்களில் அடைப்பு இருக்கலாம். கருமுட்டைகள் உருவாவதில் பிரச்னைகள் இருக்கலாம். கணவருக்கு உயிரணுக்கள் குறைவாக இருக்கலாம். இதுபோன்ற காரணங்களுக்காகவும்  ஐவிஎஃப் சிகிச்சை தேவைப்படலாம். உங்கள் இருவரையும் முழுமையாகப் பரிசோதித்த பிறகே ஐவிஎஃப் தேவையா என்பது குறித்த முடிவுக்கு வர முடியும். இப்போதே 35 வயது என்கிறீர்கள்... இனியும் தாமதிப்பது சரியல்லை. நம்பகமான மருத்துவரை அணுகி, அவசியமான பரிசோதனைகள், தேவையான சிகிச்சைகளை உடனடியாகத் தொடங்குங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். 

Doctor Vikatan: கர்ப்பப்பையின் வாய்ப்பகுதி பலவீனமாகி கருச்சிதைவு ஏற்பட வாய்ப்பு உண்டா?

Doctor Vikatan:கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பையின் வாய்ப் பகுதி பலவீனமாக வாய்ப்பு உண்டா? அப்படி கர்ப்பப்பை வாய் பலவீனமாக இருந்தால், தையல் (Cervical Stitch) போடுவது எப்போது அவசியம்...இது குழந்தையை பாதிக்கு... மேலும் பார்க்க

Doctor Vikatan: மரவள்ளிக் கிழங்கு சாப்பிட்டால், கை,கால் குடைச்சல் வருமா?

Doctor Vikatan:மரவள்ளிக்கிழங்கை எல்லோரும் சாப்பிடலாமா... சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிடலாமா? கை, கால் குடைச்சல் வருமா?பதில் சொல்கிறார் கள்ளக்குறிச்சியைச்சேர்ந்த அரசு சித்த மருத்துவர்ராஜம்சித்த மருத்த... மேலும் பார்க்க

`விரதம் இருந்தா கேன்சர் செல் செத்துப் போயிடும்'- அண்ணாமலையின் கருத்துகள் உண்மையா?

"கேன்சர் செல்களுக்கு சாதாரண செல்களைவிட 7 மடங்கு அதிக எனர்ஜி வேண்டும். அந்த எனர்ஜியை குறைச்சுட்டா கேன்சர் செல் செத்துப்போயிடும். வாரத்துல ஒருநாள் சாப்பிடாதீங்க. ஆட்டோமெட்டிக்கா உடம்புல இருக்கிற கேன்சர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகை ப்ரியங்கா சோப்ராவின் ‘ice dunk’ சீக்ரெட்; சருமத்தைப் பளபளப்பாக்குமா?

Doctor Vikatan: நடிகை ப்ரியங்கா சோப்ரா தன் முகத்தின்வீக்கத்தைக் குறைக்கவும், சருமத்தைப் பளபளப்பாக்கவும் ஐஸ் கட்டிகள் நிறைந்த குளிர்ந்த நீரில் முகத்தை நனைக்கும் 'ஐஸ் டங்க்' (ice dunk’) முறையைப் பின்பற்... மேலும் பார்க்க

Doctor Vikatan: முதுகில் ஏற்பட்ட திடீர் வீக்கம்... புற்றுநோய் அறிகுறியாக இருக்குமா?!

Doctor Vikatan: என்நண்பனுக்கு 42 வயதாகிறது. அவனுக்கு கடந்த சில மாதங்களாக முதுகுப் பகுதியில் ஒருவித வீக்கம் தென்படுகிறது. அதில் அரிப்போ, எரிச்சலோ இல்லை என்கிறான். கூகுள் செய்து பார்த்தபோது, வீக்கம் என்... மேலும் பார்க்க

Doctor Vikatan: வெளியே தொங்கும் காப்பர் டி நூல்... ஆபத்தா, அகற்ற வேண்டுமா?

Doctor Vikatan:நான் 2 வருடங்களுக்கு முன்பு காப்பர் டி பொருத்திக்கொண்டேன். கடந்த சில மாதங்களாக அதன் நூல் வெளியே வந்தது போல உணர்கிறேன். இதற்கு வாய்ப்பு உண்டா... இதை எப்படி சரிசெய்ய வேண்டும்? அகற்றிவிட்ட... மேலும் பார்க்க