செய்திகள் :

Doctor Vikatan: அளவுக்கதிக வெயில்... சூரிய வெளிச்சம் கண்களில் பட்டால் பார்வை பாதிக்கப்படுமா?

post image

Doctor Vikatan: வெயில் காலத்தில் கண்களுக்கு கட்டாயம் கூலிங் கிளாஸ் அணிய வேண்டுமா... சூரிய ஒளி கண்களில் நேரடியாகப் பட்டால் விழித்திரைக்கு பாதிப்பு ஏற்படுமா? சாதாரண கண்ணாடி போதுமா, கூலிங் கிளாஸ்தான் அணிய வேண்டுமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய்ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

அதிகப்படியான வெயில் கண்களைப் பல வழிகளில் பாதிக்கும். சூரியனிலிருந்து வரும் புறஊதா கதிர்கள் (UV rays) கண்களை பாதித்து பல பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவற்றில் முக்கியமான பாதிப்பு கேட்டராக்ட் எனப்படும் கண்புரை (Cataracts). புறஊதா கதிர்கள் கண்களில் கண்புரை ஏற்படுவதற்குக் காரணமாகின்றன.

அடுத்து, புறஊதாக் கதிர்கள்,  விழித்திரையின் (Retina) மையப்பகுதியான மேகுலாவை  சேதப்படுத்தலாம். அதனால் வரும் பாதிப்பை  மேகுலர் டீஜெனரேஷன் (Macular Degeneration) என்கிறோம்.  விழித்திரையில் உள்ள நரம்புத் திசுக்களை பாதிப்பதால் சோலார் ரெட்டினோபதி (Solar Retinopathy) என்ற பிரச்னை வரலாம். 
சூரியனின் புறஊதாக் கதிர்கள், கண்களின் வெளிப்புறப் பகுதியையும் பாதிக்கலாம். அந்த வகையில்,  கண்ணின் வெளிப்பகுதியில் சதை வளர்ச்சி போன்ற பாதிப்பை இது ஏற்படுத்தும். இந்த பாதிப்பை டெரிஜியம் (Pterygium) என்று சொல்கிறோம். 

வெளியே செல்லும்போது யுவி பாதுகாப்பு (UV Protection) உள்ள கூலிங் கிளாஸ் அணிய வேண்டும்.

வெயிலின் தாக்கத்தால் கண்கள் பாதிக்கப்படுவதை நிச்சயம் தடுக்க முடியும். அதற்கு கூலிங் கிளாஸ் (Sunglasses) அணிய வேண்டியது மிக முக்கியம். வெளியே செல்லும்போது யுவி பாதுகாப்பு  (UV Protection) உள்ள கூலிங் கிளாஸ் அணிய வேண்டும். இது மேற்குறிப்பிட்ட சிக்கல்களை  100 சதவிகிதம் தவிர்க்க உதவும். சூரியனை அதிக நேரம் நேரடியாகப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இவற்றைப் பின்பற்றுவதன் மூலம் சூரியக் கதிர்களின் மோசமான பாதிப்புகளிலிருந்து கண்களைப் பாதுகாக்க முடியும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Doctor Vikatan: சம்மரில் கூந்தலைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? தினமும் தலைக்குக் குளிக்கலாமா?

Doctor Vikatan: சம்மர் நாள்களில் சருமப் பராமரிப்பைப் போலவே, கூந்தல் பராமரிப்பும் பெரிய பிரச்னையாகவே இருக்கிறது. வியர்வை, அதனால் உண்டாகும் வாடை, முடி உதிர்வது என இந்த நாள்களில் நிறைய பிரச்னைகள் வருகின்... மேலும் பார்க்க

வெயிலை வெல்லும் வித்தை: தீர்வாகுமா ORS கரைசல்?

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே உடல் சூடு, சோர்வு மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை நம்மை வாட்டத் தொடங்கும். இதற்காக அவசர கதியில் மருந்தகங்களில் கிடைக்கும் ORSகரைசலையோ அல்லது கடைகளில் விற்கப்படும் செயற... மேலும் பார்க்க

Doctor Vikatan: கொளுத்தும் வெயில்; ஜூஸ், ஐஸ் வாட்டரால் தணியாத தாகம்... எப்படித்தான் சமாளிப்பது?

Doctor Vikatan: வழக்கத்தைவிட இந்த வருட வெயில் கொடுமையாக வாட்டி வதைக்கிறது. திட உணவுகளைத் தவிர்த்து நாள் முழுவதும் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம் போலிருக்கிறது. ஆனால், ஐஸ் வாட்டர், ஐஸ் க்ரீம்,... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைத் தவிர்க்கச் சொல்வதற்கு என்ன காரணம்?

Doctor Vikatan: கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்ற அறிவுரையைப் பரவலாகக் கேட்க முடிகிறது. இதற்கு ஏதேனும் மருத்துவக் காரணங்கள் உண்டா... கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய, தவிர்... மேலும் பார்க்க

Doctor Vikatan: Weight Loss முயற்சி... சம்மரில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன?

Doctor Vikatan: மற்ற நாள்களைவிடவும், சம்மரில் வெயிட்லாஸ் செய்வது சுலபம் என்று எங்கேயோ படித்தேன். எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போர், கோடைக்காலத்தில் சேர்த்துக்கொள்ளக்கூடிய உணவுகள் குறித்துச் சொல்லுங்... மேலும் பார்க்க

Doctor Vikatan: கோடைக்காலம்: கருவிலுள்ள குழந்தையை பாதிக்குமா அதீத வெயில்?

Doctor Vikatan: என் தோழி கர்ப்பமாக இருக்கிறாள். கர்ப்பம் உறுதியான நாள் முதல் வீட்டைவிட்டே வெளியே வர மறுக்கிறாள். வெயிலின் தாக்கம் கருவிலுள்ள குழந்தையை பாதிக்கும் என உறுதியாக நம்புகிறாள். அவளது பயம் அன... மேலும் பார்க்க