செய்திகள் :

Doctor Vikatan: கொளுத்தும் வெயில்... குளிர்ந்த நீரில் குளித்தால் Heart Attack வருமா?

post image

Doctor Vikatan: வாட்டி எடுக்கும் வெயிலுக்கு இதமாக குளிர்ந்த தண்ணீரில் தலைக்குக் குளிப்பதே பலரின் விருப்பமாகவும் இருக்கிறது. சமீபத்தில் படித்த செய்தி ஒன்று அதிர்ச்சியைத் தந்தது.

அதாவது, குளிர்ச்சியான அல்லது அதிக சூடான நீரில் குளிக்கும்போது, சிலருக்கு அது ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தலாம் என்றும், குளியலறையில் நிகழும் மாரடைப்புகள் குறித்தும் அந்தச் செய்தி குறிப்பிட்டிருந்தது.

தலையில் நேரடியாகத் தண்ணீரை ஊற்றுவது ஆபத்தை அதிகரிக்கும் என்றும், முதலில் கால்கள், பிறகு உடல், இறுதியில் தலை எனக் குறிப்பிட்ட வரிசையைப் பின்பற்றுவது இத்தகைய சம்பவங்களைத் தவிர்க்க உதவும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்கள்.

இதை எப்படிப் புரிந்துகொள்வது? குளிர்ந்த நீரில் குளித்தால் ஹார்ட் அட்டாக் வரும் என்பது உண்மையா? 

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்
இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

மிகவும் அதிகமான வெப்பநிலை மாற்றங்களுக்குத் திடீரென ஆட்படுவது இதயத்திற்கு அதிக அழுத்தத்தை (strain) ஏற்படுத்தும் என்பது உண்மைதான். குளிக்கும்போது எப்போதாவது ஒருமுறை இப்படிப்பட்ட இதய பாதிப்புகள் ஏற்படலாம் என்று ஆய்வுகள் சொல்கின்றன.

அதற்கு தண்ணீர் ஊற்றும் முறை காரணமாவதில்லை. மாறாக, திடீரென மாறும் நீரின் வெப்பநிலை (அதிக குளிர் அல்லது வெப்பம்), ஏற்கெனவே உள்ள இதயப் பிரச்னைகள் மற்றும் வயது முதிர்வு ஆகியவையே காரணங்களாக இருக்கும். 

அதிக சூடான நீர் அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது ரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பைப் பாதிக்கும் என்று ஆய்வுகள்  சொல்கின்றனவே தவிர, தலையில் முதலில் தண்ணீர் ஊற்றுவது மாரடைப்பை உண்டாக்கும் என்பதற்கோ, குறிப்பிட்ட வரிசையில் குளிப்பது அதைத் தடுக்கும் என்பதற்கோ எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.  

ஹார்ட் அட்டாக்
ஹார்ட் அட்டாக்

மிகவும் குளிர்ந்த அல்லது வெந்நீர் ரத்த அழுத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி இதயத்திற்கு அழுத்தத்தைக் கொடுக்கலாம். இது ஏற்கெனவே இதய நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே ஆபத்தானது.   

திடீர் வெப்பநிலை மாற்றம் (மிகவும் சூடான அல்லது மிகவும் குளிர்ந்த நீர்), முதுமை, ஏற்கெனவே உள்ள இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் அல்லது இதயச் செயலிழப்பு போன்ற காரணங்கள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி இது போன்ற தகவல்களை எல்லோருக்குமானதாக நினைத்து பயப்படத் தேவையில்லை.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

ஹீட் ஸ்ட்ரோக்: `இது வெறும் சூடு இல்ல' - உயிர் காக்கும் 'மேஜிக்' கரைசல் - மருத்துவரின் Pro Tips!

தமிழ்நாட்டில் 2026-ம் ஆண்டு கோடைகாலம் வழக்கத்திற்கு மாறாக முன்கூட்டியே தொடங்கி, தற்போது அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக சென்னை, வேலூர், மதுரை, திருச்சி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெப... மேலும் பார்க்க

Doctor Vikatan: சலூன்களில் பயன்படுத்தும் டிரிம்மர், இன்ஃபெக்ஷனை ஏற்படுத்துமா?

Doctor Vikatan:சலூன்களில் இப்போதெல்லாம் ஒரே டிரிம்மரை எல்லோருக்கும் பயன்படுத்துகிறார்கள். இதனால் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா... இந்த விஷயத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி வலியுறுத்துவது?-எஸ்.... மேலும் பார்க்க

சித்த மருந்துகளை எடுத்துகொள்ளும் போது ஏன் இறைச்சி சாப்பிடக் கூடாது? இதற்கும் விதிவிலக்கு உண்டு!

'சித்தா மருந்து எடுக்கும் போது, இறைச்சி சாப்பிடலாமா டாக்டர்?' - சித்த மருத்துவர்களிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் இதுவும் ஒன்று. சித்த மருத்துவத்தில் மருந்து மட்டும் முக்கியமல்ல... பத்தியமும் அ... மேலும் பார்க்க

Doctor Vikatan: தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியா?

Doctor Vikatan: என் உறவினரின் குழந்தைக்கு 10 வயதாகிறது. தினமும் தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கிறது. இது பிற்காலத்திலும் தொடருமா... தூக்கத்தில் பேசுவது என்பது மனநோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்குமா?... மேலும் பார்க்க

Doctor Vikatan: குழந்தைகளுக்கு தினமும் உருளைக்கிழங்கு கொடுக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு 10 மற்றும் 12 வயதில் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இருவருக்குமே தினமும் எந்த உணவாக இருந்தாலும் கூடவே உருளைக்கிழங்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சாப்பிட மாட்டார்கள். 'தினம... மேலும் பார்க்க

Doctor Vikatan: குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) இருந்தால்,உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: எனக்குப் பல வருடங்களாக குறைந்த ரத்த அழுத்த பாதிப்பு உள்ளது. சில சமயங்களில் அது ரொம்பவும் தீவிரமாகி, தலைச்சுற்றல் ஏற்படும். அப்போது சட்டென உப்பு அதிகமான உணவுகளைச் சாப்பிடுவேன். லோ பிபி ... மேலும் பார்க்க