"வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்"- விஜய்யை நேரில் சந்தித்தது குறி...
29: 'இந்த விஷயத்தில கமல் சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!'- லோகேஷ் கனகராஜ்
'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' எனும் படத்தை இயக்கியிருக்கிறார்.
விது - ப்ரீத்தி அஸ்ராணி நடிக்கும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
மே 8 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (ஏப்ரல்.29) நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ், " ரத்னகுமார் (இயக்குநர்) ரொம்ப நாட்களாக சக போட்டியாளனாகவே இருந்திருக்கிறான்.
நானும், ரத்னாவும் முதல் படம் பண்ணுவதற்காகத் தெரு தெருவாக சுத்தியிருக்கிறோம். அந்த சமயத்தில் தான் 'பீட்சா' படம் வெளியானது.
அந்தப் படம் தான் எங்களை போன்றவர்களுக்கு கதவைத் திறந்து வைத்தது. இன்றைக்கு இருக்கும் நிறைய இயக்குநர்களுக்கும் அந்தப் படம் கதவைத் திறந்து வைத்தது.
அந்தப் படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ் சார் திறந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் நிறைய ஷார்ட் ஃபிலிம்களை ரிலீஸ் செய்தார்.
அப்படித்தான் ரத்னாவின் முதல் ஷார்ட் ஃபிலிம்மான 'மது' ரிலீஸ் ஆனது. என்னுடைய 'அவியல்' ஷார்ட் ஃபிலிம்மும் அப்படித்தான் ரிலீஸ் ஆனது.
அப்படிப் பார்த்தால் கார்த்திக் சுப்புராஜ் சார் ரத்னாவை மட்டும் அறிமுகம் செய்யவில்லை. என்னையும் அவர் தான் அறிமுகம் செய்திருக்கிறார்.
அன்றைக்கு அடைக்கலம், அதரவு கொடுத்தது எல்லாம் கார்த்திக் சுப்புராஜ் சாரின் 'ஸ்டோன் பெஞ்ச்' தயாரிப்பு நிறுவனம் தான்.
இன்றைக்கு அதே 'ஸ்டோன் பெஞ்ச்' நிறுவனத்துடன் இணைந்து, ரத்னகுமாரின் படத்தைத் தயாரிக்கும் அளவிற்கு எனக்கான ஒரு இடத்தைக் கொடுத்ததற்கு மக்களுக்கு நன்றி.

நாம் வளரும்போது நம்முடன் இருப்பவர்களையும் வளர்த்துவிட வேண்டும். வாய்ப்பு இருக்கும்போதே அதைச் செய்துவிட வேண்டும்.
இதற்கு இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். அவரிடம் இருந்துதான் இதைக் கற்றுக்கொண்டேன்.
சினிமாவில் சம்பாரித்ததை சினிமாவிற்கே கொடுக்க வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.
என்னுடைய படங்களுக்கு ஆதரவு கொடுத்த மாதிரி. என்னுடைய தயாரிப்பில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கும் ஆதரவு கொடுங்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.


















