செய்திகள் :

’சட்டமன்ற தேர்தலில் ஏன் வாக்களிக்கவில்லை?’ – செந்தில் பாலாஜி விளக்கம்

post image

கோவை பந்தய சாலை பகுதியில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தேர்தல் அன்று 3 அல்லது 3.30 மணிக்குள் புறப்பட்டு சென்று வாக்களிக்க வேண்டும் என நினைத்தேன். வாக்களிப்பதை என் கடமையாக தான் நினைத்தேன். இங்கு ஒவ்வொரு பூத்தாக நாங்கள் சென்றபோது, சில பூத்களுக்குள் அ.தி.மு.க-வினர் உள்ளே இருந்தார்கள். ஏஜெண்ட் இல்லாதவர்களும் பூத்திற்குள் இருந்தார்கள். அதை எங்கள் ஏஜெண்ட்கள் சுட்டிகாட்டியபோது, சில இடங்களில் வெளியேற்ற முயற்சித்த போது பிரச்னையை உருவாக்கி சட்டம் ஒழுங்கை கெடுக்க நினைத்தார்கள்.

தேர்தலுக்கு முன்பாக தேர்தலை நிறுத்த கூட முயற்சி எடுத்தார்கள். கடைசி 2 மணி நேரங்களில் ஒரு பரபரப்பான சூழல் இருந்த காரணத்தால் தான், என்னால் வாக்களிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

முழுமையாக இங்கே இருந்து பார்க்க வேண்டியிருந்தால் தான், நான் வாக்களிக்க முடியவில்லை. கடைசியில் பதட்டமாக சூழல் ஏற்பட்டு விடக்கூடாது என வாக்களிப்பதை கவனிக்க வேண்டும் என்பதால் தான், வாக்களிக்க செல்ல முடியவில்லை. முடிவு எடுக்க வேண்டியது எனது உரிமை. வாக்களிப்பது என் கடமை தான். நான் போட்டியிடும் தொகுதியில் தேர்தல் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதும் என் கடமைதான். வாக்களிக்க நான் புறப்பட்ட போது ஏற்பட்ட பதட்டமான சூழல் காரணமாக தான், செல்ல முடியவில்லை.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

வெளியூர்காரர் தான் கோவையில் 4 வருடங்களாக வேலை பார்த்தோம். எல்லா திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினேன்.  என்னை எதிர்த்து நின்ற அ.தி.மு.க. வேட்பாளர் எந்த ஊர்? மதுரை தானே. அவர் 20 வருடம் முன்பு கோவைக்கு வந்தார். ஆனால் நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு லேட்டாக வந்தேன். அவ்வளவு தான். சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்த கரூர்காரர்கள், என்னை தோற்கடிக்க கூட தாக்கல் செய்திருக்கலாம். உறுதியாக தி.மு.க நிர்வாகிகள் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.‌ அப்படி செய்திருந்தால் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

உறுதியாக இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பிற்கு வருவார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. கோவையில் பத்து தொகுதியிலும், மேற்கு மண்டலத்தில் 35 தொகுதியிலும் வெற்றி பெற வேண்டும் என தேர்தல் பணிகளை செய்துள்ளோம். கரூரில் 41 பேர் உயிரிழந்த போது, விட்டு விட்டு ஓடியவர்களை பற்றி பேசி நான் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை” என்றார்.

`ஒன்று ஆளுங்கட்சியாக... இல்லை எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இருக்க வேண்டும்!' - கிரிஷ் சோடங்கர்

தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த மார்ச் 30ஆம் தேதி த... மேலும் பார்க்க

EXIT POLL : `இது வெறும் யூகமல்ல.!' - `எக்சிட் போல்' எப்படி எடுக்கப்படுகிறது தெரியுமா?

தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு சில நாள்களுக்கு முன்பே, நாடு முழுவதும் "யாருக்கு வெற்றி வாய்ப்பு?" போன்ற அனல் பறக்கும் விவாதங்கள் தொடங்கிவிடும். இந்த விவாதங்களுக்கு முதன்மையானது... மேலும் பார்க்க

OPEC-ல் இருந்து வெளியேறும் UAE; கச்சா எண்ணெய் விலை என்னவாக மாறும்? இதில் ட்ரம்பிற்கு 'ஒரு' வெற்றி!

ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக மூடி வைத்திருக்கிறது ஈரான். இதனால், டன் கணக்கான எண்ணெய் பேரல்களை ஏற்றி வந்த கப்பல்கள் வெளியே செல்ல முடியாமல், ஹார்முஸ் ஜலசந்தியின் எல்லையில் தவித்து கொண்டிருக்கின்றன. இப்... மேலும் பார்க்க

5 States Exit Poll 2026 Live: ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? - இன்று மாலை வெளியாகும் எக்சிட் போல் முடிவுகள்!

5 மாநிலங்களுக்கான எக்ஸிட் போல் முடிவுகள்!புதுச்சேரி, கேரளா, மற்றும் அஸ்ஸாம் ஆகிய மூன்று மாநில சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த 9ஆம் தேதி ஒரே கட்டமாகவும், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ஆம் தேதி ஒரே க... மேலும் பார்க்க

TN Exit Poll 2026 LIVE : `அரியனணயில் அமரபோவது யார்?' - இன்று மாலை வெளியாகிறது எக்ஸிட் போல் முடிவுகள்!

தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க போவது யார்?தமிழ்நாடு, புதுச்சேரி, அஸ்ஸாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாக நடத்துவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. கடந்த ... மேலும் பார்க்க