செய்திகள் :

'படையப்பா' ரீ-ரிலீஸ் வெற்றி: தயாரிப்பாளர் தேனப்பனுக்கு 5 சவரன் தங்கச் சங்கிலியை வழங்கிய ரஜினிகாந்த்

post image

தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த் நடிப்பில், கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், 1999-ஆம் ஆண்டு வெளியான படம் 'படையப்பா'.

ரஜினிகாந்துடன் சிவாஜி கணேஷன், ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

படையப்பா
படையப்பா

இப்படத்தை ரஜினிகாந்தும், தேனப்பனும் இணைந்து தயாரித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.

ரஜினிகாந்தின் 150-வது படமாக வெளியான 'படையப்பா' மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று கமர்ஷியல் படங்களுக்குப் பென்ச்மார்க்காக இருக்கிறது.

சமீபத்தில் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு இப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியான இப்படத்துக்கு, ரசிகர்கள் மத்தியில் மீண்டும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ரஜினிகாந்த் - தேனப்பன்
ரஜினிகாந்த் - தேனப்பன்

இந்நிலையில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட 'படையப்பா' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து தயாரிப்பாளர் தேனப்பனை நேரில் அழைத்து 5 சவரன் தங்கச் சங்கிலியை அன்பளிப்பாக ரஜினிகாந்த் கொடுத்திருக்கிறார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

'தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவது நியாயமா?' - வலுக்கும் 8 வார ஓடிடி ரிலீஸ் கோரிக்கை - தீர்வு என்ன?

திரையரங்க வெளியீட்டிற்குப் பிந்தைய ஓடிடி ரிலீஸ் பற்றிய பேச்சுதான் கோலிவுட்டில் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள், நான்கு வாரங்களுக்குப் பிறகு ஓ... மேலும் பார்க்க

Kara: மகன் யாத்ரா சினிமாவில் அறிமுகமாகப் போகிறாரா?- தனுஷ் அளித்த பதில் என்ன?

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கர'. ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் 'கர' படத்தின் தெலுங்க... மேலும் பார்க்க

'60 வயதோ, 16 வயதோ' - போதைப் பொருள் விழிப்புணர்வுக்கு விக்ரமின் காணொளியை பயன்படுத்திய கேரளா போலீஸ் !

நடிகர் விக்ரம், அவருடைய 60-வது பிறந்தநாள் அன்று, சமூக வலைதளப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்தக் காணொளியைப் துருவ் விக்ரம்தான் படம்பிடித்திருந்தார்.பிறகு, அந்தக் காணொளியும் சமூக வலைதளப்... மேலும் பார்க்க

GV Prakash: "கோடிக்கணக்கில் பணம் தந்தாலும் மதுபான விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்" - ஜி.வி. பிரகாஷ்

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கும் 'கர' திரைப்படம் வருகிற ஏப்ரல் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதுமட்டுமல்ல, ஜி.வி. நடித்திருக்கும் திரைப்படம், இசையமைக்கும் படங்கள் என அடுத்தடுத்து அதிரடி லைன... மேலும் பார்க்க

Youth: "உன்னால் முடியும், தொடர்ந்து முயற்சி செய்" - ரிஷப் ஷெட்டியைச் சந்தித்த கென் கருணாஸ்

கென் கருணாஸ் இயக்கி, நடித்திருந்த 'யூத்' திரைப்படம் மக்களிடையே வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், சின்னத் தமிழா என இளம் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தனர்... மேலும் பார்க்க