29: "சட்டமன்றத் தேர்தலில் ஏன் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை?" - தெளிவுப்படுத்த...
"அதை பார்த்ததும் கண்களில் கசிந்த நெருப்புதான் இந்தப் பாடல்!" - 'கருப்பா கூட வா' பற்றி பா.விஜய்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் 'கருப்பு' திரைப்படம் மே 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. த்ரிஷா, ஸ்வாசிகா, நட்டி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்திலிருந்து நேற்று 'கருப்பா கூட வா' பாடல், துள்ளலான பாடலாக உருவாகி வெளியாகியிருந்தது. இப்பாடலைப் பாடலாசிரியர் பா.விஜய் எழுதியிருக்கிறார். இந்தப் பாடல் பற்றி அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில், காணொளி வாயிலாகப் பேசியிருக்கிறார்.

பாடலாசிரியர் பா.விஜய், "கருப்பு திரைப்படத்தில் நம்முடைய ஆதி தமிழ் சமூகத்தின் போர்வழிப் புறக்கடவுளான பதினெட்டாம் படி கருப்பரைப் பற்றிய ஒரு பாடல் எழுதக்கூடிய வாய்ப்பினைக் கொடுத்த பதினெட்டாம் படி கருப்பருக்கு என்னுடைய ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கருப்பு திரைப்படத்தில் பதினெட்டாம் படி கருப்பரைப் பற்றிய பாடல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
அதற்கு முழு மூல காரணமான என்னுடைய ஆத்மார்த்த நண்பர் சகோதரர் ஆர்.ஜே. பாலாஜிக்கு நட்சத்திர எண்ணிக்கையில் நன்றி. அவரால்தான் இந்தப் படத்தில் எனக்குப் பாடல் எழுதுவதற்கான ஒரு மிகப்பெரிய பயணம் அமையப்பெற்றது.
ஆர்.ஜே. பாலாஜி எப்போதுமே தன்னுடைய படத்தில் எனக்கு மிக மிக முக்கியமான பாடலை எழுதக் கொடுப்பார். இப்போதும் என்னுடைய பாட்டுப் பயணத்தில் இந்தக் கருப்புப் பாடல் ஈடு இணையற்ற பாடலாக இன்று மாறியிருக்கிறது.
அதே போலவே இந்தப் பாடலுக்கு ஆக்ரோஷமாக இசையமைத்த சாய் அபயங்கருக்கும் தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கும் என்னுடைய நன்றி.
சூர்யா சாரைப் பற்றிய ஒரு பிரேமைத்தான் ஆர்.ஜே. பாலாஜி கேட்டிருந்தார். அந்தப் பிரேமைப் பார்த்ததும் அந்தக் கண்களில் கசிந்த நெருப்புதான் இந்தப் பாடல் எழுதுவதற்கான ஒரு தூண்டுகோல் எனச் சொல்லலாம்.
அப்படிக் கனலும் கண்கள் கொண்ட என்னுடைய நண்பர் நடிகர் சூர்யாவுக்கும் என்னுடைய தனிப்பட்ட நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பாட்டு வரிகளுக்கு ஏராளமான லட்சக்கணக்கான வாழ்த்துக்களை அள்ளித் தெளித்துக் கொண்டிருக்கின்ற அத்தனை சோஷியல் மீடியா ரசிகர்களுக்கும், சினிமா ரசிகர்கள், திரை இசை ரசிகர்கள் எல்லோருக்கும் என்னுடைய ஆத்மார்த்தமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியிருக்கிறார்.
















