செய்திகள் :

Doctor Vikatan: மாதந்தோறும் பீரியட்ஸ் நாள்களில் கடுமையான தலைவலி; சாதாரணமானதா, சிகிச்சை தேவையா?

post image

Doctor Vikatan: என் வயது 45. மாதந்தோறும் பீரியட்ஸின்போது கடுமையான தலைவலி வருகிறது. மற்ற நாள்களில் நார்மலாகி விடுகிறேன். தலைவலிக்கு மாத்திரை போடாமல் என்னால் சமாளிக்கவே முடிவதில்லை.

பீரியட்ஸ் நாள்களில் மட்டும் வரும் இந்தத் தலைவலிக்கு என்ன காரணம்... என்ன செய்ய வேண்டும்?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.  

மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்
மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்

பீரியட்ஸ் நாள்களில் மட்டும் வரும் இந்த வகைத் தலைவலியை 'மென்ஸ்ட்ருவல் மைக்ரேன்'  (Menstrual migraine) என்று சொல்வோம். மாதவிடாய்க்கு முன்பு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் 'ப்ரீமென்ஸ்ட்ருவல் சிண்ட்ரோம்' அறிகுறிகள் மாதிரியான ஒன்றுதான் இதுவும். பீரியட்ஸ் முடிந்ததும் தலைவலி தானாகச் சரியாகிவிடும்.  

மற்ற நாள்களைவிட மாதவிடாய் நாள்களில் புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் தன்மைகளில் தலைவலியைத் தருவதும் ஒன்று.  இந்த நாள்களில் காரமான, மசாலா அதிகம் சேர்த்த, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். உப்பின் அளவைக் குறைத்து, ஜங்க் உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். 

புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் தன்மைகளில் தலைவலியைத் தருவதும் ஒன்று.
புரொஜெஸ்ட்ரான் ஹார்மோனின் தன்மைகளில் தலைவலியைத் தருவதும் ஒன்று.

பழங்கள் நிறைய சாப்பிடுவதும் தண்ணீர் அதிகம் குடிப்பதும் அவசியம். பிகாம்ப்ளெக்ஸ் உள்ள மல்ட்டி வைட்டமின் மாத்திரை தினமும் ஒன்று எனத் தொடர்ந்து 3 மாதங்களுக்கு எடுத்துக்கொள்ளவும். அளவுக்கதிகமாக பெயின் கில்லர் எடுக்கத் தேவையில்லை. தாங்க முடியாத வலி என்றால் பாராசிட்டமால் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

சின்னச்சின்ன உடற்பயிற்சிகள், யோகா பயிற்சிகள் செய்வது, ஸ்ட்ரெஸ் இல்லாமல் வாழப் பழகுவது போன்றவற்றைப் பின்பற்றலாம். இவற்றையெல்லாம் செய்த பிறகும் தலைவலி குறையவில்லை என்றால் மருத்துவரை அணுகி, ஆலோசனை பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.   

Doctor Vikatan: ஒரு வாரமாக மலம் கழிக்காத 4 வயதுக் குழந்தை; சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் பேத்திக்கு நான்கு வயதாகிறது. அவள் மலம் கழித்து ஒரு வாரமாகிறது. இதற்கு என்ன காரணம்... சிகிச்சை தேவையா?பதில் சொல்கிறார், கோவை, கிணத்துக்கடவைச்சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் எஸ்.ஸ்ர... மேலும் பார்க்க

''பீரியட்ஸ் 'excuse' அல்ல'' விவாதத்தைக் கிளப்பிய நடிகை ஸ்ரீலீலாவின் வைரல் பேச்சு: மருத்துவ விளக்கம்!

சமீபத்தில் நடிகை ஸ்ரீலீலா மாதவிடாய் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறித்துப் பேசிய கருத்துகள் இணையதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன."மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்ல, அது இயற்கையான உடலியல் நி... மேலும் பார்க்க

Doctor Vikatan: அரிப்புக்காக காது குடைந்தபோது செவிப்பறையில் ஓட்டை... கேட்கும் திறன் பாதிக்குமா?

Doctor Vikatan: எனக்கு எப்போதும் காதுக்குள் ஒருவித அரிப்பு இருந்துகொண்டே இருக்கும். அதுபோன்ற நேரங்களில், நான் என் காதுகளைச் சுத்தம் செய்வேன் அல்லது குடைவேன், சிறிது நேரத்திற்குப் பிறகு அரிப்பு நின்றுவ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காய்ச்சல் வந்தாலே ஆன்டிபயாடிக் (Antibiotics) மாத்திரைகள் உட்கொள்ள வேண்டுமா?

Doctor Vikatan: சாதாரண சளி, காய்ச்சல் ஏற்படும்போது மருந்துக் கடைகளில் கேட்டால் காய்ச்சல் மாத்திரையோடு, ஆன்டிபயாடிக் மாத்திரைகளும் கொடுக்கிறார்கள். எப்போது காய்ச்சல் ஏற்பட்டாலும் ஆன்டிபயாடிக் மாத்திரைக... மேலும் பார்க்க

Doctor Vikatan: இருமுறை பல் துலக்கியும் வாய் துர்நாற்றம்... குடல் நோயின் அறிகுறியா?

Doctor Vikatan: நான் தினமும் இருமுறை பல் துலக்கும் வழக்கம் கொண்டவன். சாப்பிட்ட உடன் வாய் கொப்பளிக்கும் வழக்கமும் உண்டு. ஆனாலும், எனக்கு கடந்த சில மாதங்களாக வாய் துர்நாற்றப் பிரச்னை இருப்பதை உணர்கிறேன்... மேலும் பார்க்க

Doctor Vikatan: சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் தேங்காய்ப்பால் விற்பனை! - தினமும் குடிக்கலாமா?

Doctor Vikatan: சமீப காலமாக நடைபாதைகளில் தேங்காய்ப்பால் விற்பனை செய்வது சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகிறது. இனிப்பு சேர்த்தது, சேர்க்காதது என விதவிதமாக தேங்காய்ப்பால் விற்கிறார்கள். தேங்காய்ப்பால் எல... மேலும் பார்க்க