செய்திகள் :

'செண்பகமே செண்பகமே' டு 'செப்டம்பர் மாதம்': PAN இந்தியா பாடகி ஆஷா போஸ்லேவின் தமிழ் ஹிட்ஸ்

post image

1970, 80-களில் இந்திய இசை உலகில் உச்சத்தில் இருந்தவர் பாடகி ஆஷா போஸ்லே. இன்று இயற்கை எய்தியிருக்கிறார்.

இதுவரை 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ள ஆஷா போஸ்லேயின் கடைசி பாடல் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது.

பான் இந்திய பாடகியான இவர் தமிழ் திரைப்படங்களில் பாடாமலா இருந்திருப்பார். தமிழ் திரைப்படங்களில் இவர் பாடி ஹிட்டான பாடல்களில் லிஸ்ட்டைப் பார்க்கலாம்.
 ஆஷா போஸ்லே
ஆஷா போஸ்லே

1987-ம் ஆண்டு நடிகர்கள் ராமராஜன் மற்றும் ரேகா நடிப்பில் வெளியான 'எங்க ஊரு பாட்டுக்காரன்' திரைப்படத்தில் வரும் பெண் வெர்ஷன் 'செண்பகமே செண்பகமே' பாடல் இவரது குரல் தான்.

இரவு நேரங்களில் பலரின் பிளே லிஸ்ட்டில் ஒலிக்கும் 'ஹே ராம்' திரைப்படத்தின் 'நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி' பாடல் ஆஷா போஸ்லே பாடியது ஆகும்.

'இருவர்' திரைப்படத்தில் வரும் மோகன்லால் - ஐஸ்வர்யா ராய் காம்போவின் 'வெண்ணிலா வெண்ணிலா' பாடல் ஆஷா போஸ்லேவின் இனிய குரல் தான்.

இன்று வரை பேச்சிலர் பார்ட்டிகளில் இசைக்கப்படும் 'அலைபாயுதே' திரைப்படத்தில் வரும் 'செப்டம்பர் மாதம்' பாடல் ஆஷா போஸ்லே உடையது தான்.

'சந்திரமுகி' பேய் படத்தில் வரும் மெலடி பாடலான 'கொஞ்ச நேரம் கொஞ்ச நேர'த்தின் பெண் குரல் ஆஷா போஸ்லேயின் மெல்லிசை குரல் ஆகும்.

சில மாதங்களுக்கு முன், தமிழ்நாடு முழுவதும் டிரெண்ட் ஆன, 'நேருக்கு நேர்' திரைப்பட பாடல், 'எங்கெங்கே' ஆஷா போஸ்லே பாடியதாகும்.

நடிகர் விக்ரமின் 'ஒன் ஆஃப் தி' மறக்கமுடியாத ஹிட் பாடலான 'ஓ பட்டர்பிளை' பாடல் ஆஷா போஸ்லேவின் குரல் ஆகும்.

ஆஷா போஸ்லே பாடிய பாடல்களில் உங்களுக்கு பேவரைட்டாக பாடலை கமென்ட்டில் பதிவிடுங்கள்!

'நானும், அவரும் இரவு முழுவதும் பேசிக்கொண்டிருப்போம்' சிவாஜி - ஆஷா போஸ்லேவின் 'ராக்கி'மலர்

இன்று பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமாகியுள்ளார். மகாராஷ்டிராவில் பிறந்த ஆஷா போஸ்லே தமிழ் திரைப்படங்களில் பாடி மட்டும் தமிழ்நாடு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. 'நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தங்கை'... மேலும் பார்க்க

Asha Bhosle: `இந்திய திரையிசையின் முடிசூடா அரசி!' - ஆஷா போஸ்லே காலமானார்

இந்தியத் திரையிசையின் முடிசூடா அரசியாகத் திகழ்ந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். ஏப்ரல் 11-ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக, ஆஷா போஸ்லே மும்பை... மேலும் பார்க்க

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: உதயநிதி மீது குற்றச்சாட்டு; ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

தமிழகத்தில் தேர்தல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. இன்று காலை இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது மக்களைச் சந்தித்து வாக்கு சேகரித்தார். இதற்கிடையில... மேலும் பார்க்க

ஜனநாயகன்: 'விஜய் சாரை கடைசி முறையாக திருவிழா போல் கொண்டாட வேண்டாமா?'- பூஜா ஹெக்டே ஆதங்கம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால், மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. ஆனால், சென்சா... மேலும் பார்க்க

Jana Nayagan: "இது மன்னிக்க முடியாதது" - 'ஜனநாயகன்' படக்காட்சிகள் கசிந்ததற்கு சூர்யா கண்டனம்

விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வெளியாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சென்சார் சான்றிதழ் கிடைக்காததனால் படத்தின் ரிலீஸ் தடைப்பட்டது. ஜனநாயகன் திரைப்படம்நேற்று இரவு, 'ஜனநாய... மேலும் பார்க்க

சல்மான் கான், யாஷ், மோகன்லால், மம்மூட்டி, நிவின்பாலி.! மாஸ் ஹீரோக்களுடன் அசத்தும் நயன்தாரா லைன்அப்

இந்திய சினிமாவில் 23வது ஆண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறார் நயன்தாரா. கடந்த 2003ல் மலையாளத்தில் சத்யன் அந்திக்காடின் 'மனசினக்கரே' மூலம் அறிமுகமானவர் 23 ஆண்டுகளுக்கு பிறகும் ஹீரோயினாக பட்டொளிவீசி பறக்கிற... மேலும் பார்க்க