செய்திகள் :

மபி: 90 டிகிரி வளைவுடன் கட்டப்பட்ட மேம்பாலம்; விமர்சனங்களால் டிசைனை மாற்ற முடிவு; என்ன திட்டம்?

post image

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் ரயில் நிலையம் அருகில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டது.

கடந்த ஆண்டு கட்டப்பட்ட இந்த மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டபோதுதான் அது போக்குவரத்திற்குப் பயன்படுத்த முடியாதது என்று தெரியவந்தது. பாலம் 90 டிகிரி வளைவில் கட்டப்பட்டது.

விரைவாக வரும் வாகனங்கள் திடீரென திரும்பும் வகையில் கட்டப்பட்டு இருந்தது. போக்குவரத்திற்கு இந்த மேம்பாலம் திறக்கப்படும் முன்பே இப்பிரச்னை எழுந்தது. பாலத்தைப் பயன்படுத்தினால் அதிக அளவில் விபத்து ஏற்படும் என்று கருதி பாலத்தை போக்குவரத்திற்குத் திறக்கவேயில்லை.

பாலத்தைக் கட்டிய ஒப்பந்ததாரரிடம் கேட்டதற்கு, பாலத்தை மேற்கொண்டு அகலமாகக் கட்டுவதகற்கு இடமில்லை என்று தெரிவித்துவிட்டார். இது தொடர்பாக 7 பொதுப்பணித்துறை அதிகாரிகள் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சர்ச்சையான பாலம்
சர்ச்சையான பாலம்

சர்ச்சைக்குறிய மேம்பாலம் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியாகி கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் கடந்த 10 மாதங்களாக பாலத்தை என்ன செய்வது என்று அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.

தற்போது அதற்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. ரூ.18 கோடியில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் வடிவத்தை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட வடிவமைப்பின்படி, பாலத்தின் வளைவின் ஆரம் 2 மீட்டரிலிருந்து 2.5 மீட்டராகவும், பாலத்தின் அகலம் 8.5 மீட்டரிலிருந்து 10.5 முதல் 11 மீட்டராகவும் விரிவுபடுத்தப்படும்.

இதன் மூலம், கார்கள் மற்றும் நடுத்தர மற்றும் கனரக வாகனங்கள் பாதுகாப்பாகச் செல்ல முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கான பணிகள் வரும் வாரத்தில் தொடங்கப்படும் என்றும், ஏற்கனவே இப்பாலத்தைக் கட்டிய அதே ஒப்பந்ததாரர்தான் புதிய திருத்தப்பட்ட பாலத்தையும் கட்டுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

`10 வயதில் தொடங்கிய பயணம்' - 92 வயதில் பாடகி ஆஷா போஸ்லே மரணம்; விடைபெற்ற 80 ஆண்டுகால இசை சரித்திரம்

பாலிவுட் உட்பட 20 மொழிப்படங்களில் பாடியுள்ள பாடகி ஆஷா போஸ்லே நேற்று உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்... மேலும் பார்க்க

திருமணத்தை நிறுத்திய பெண் உடலில் HIV ரத்தத்தை செலுத்திய வாலிபர்; விரக்தியில் பெண் எடுத்த முடிவு

ஐதராபாத்தை சேர்ந்த சேர்ந்தவர் மனோகர். இவருக்கும் அவரது உறவுக்கான 24 வயது பெண்ணிற்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மனோகர் பெற்றோருக்கு எச்.ஐ.வி தொற்று இர... மேலும் பார்க்க

கும்பமேளா புகழ் மோனலிசா மைனர்; காதல் கணவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு!

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடந்த கும்பமேளாவில் பாசி மாலை விற்று சோசியல் மீடியாவில் புகழ் பெற்றவர் மோனலிசா. இவர் திடீரேன கடந்த சில மாதங்களுக்கு கேரளாவில் திருவனந்தபுரம் அருகே திடீரென கோயில் ஒன்... மேலும் பார்க்க

வீட்டில் மூட்டைகளில் பணம் சிக்கிய விவகாரம்: நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா!

அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் யஷ்வந்த் வர்மாவின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீப்பிடித்தது. இதனால் தீயை அணைத்தபோது வீட்டில் சாக்குமூட்டையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தத... மேலும் பார்க்க

ஸ்பைடர் மேனுக்கே சவால் விடும் 89 வயது பாட்டி! - 27-வது மாடியிலிருந்து அசால்ட்டாக இறங்கி சாகசம்!

சீனாவின் பெய்ஜிங் நகரில் வசிக்கும் 89 வயது மூதாட்டி ஒருவர், தனது அடுக்குமாடி குடியிருப்பின் 27-வது மாடியில் எதிர்பாராத விதமாகப் படுக்கையறைக்குள் சிக்கிக்கொண்டார். கதவு தானாகப் பூட்டிக்கொண்ட நிலையில், ... மேலும் பார்க்க

ஆந்திரா: நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுக்க முயன்றபோது விபரீதம்; நீரில் மூழ்கி உயிரிழந்த 3 மாணவிகள்!

ஆந்திராவில் செல்ஃபி எடுக்க முயன்ற 3 மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திராவின் அனந்தகிரி மண்டலத்தில் உள்ள முலாகும்மி நீர்வீழ்ச்சிக்கு ஜம்புவலசா கிராமத்தைச... மேலும் பார்க்க