செய்திகள் :

ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: "அந்தத் துறையின் அமைச்சர் யார்?"– எல்.முருகனைச் சாடும் செங்கோட்டையன்

post image

கோவை நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் த.வெ.க. உயர்மட்ட நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், அக்கட்சியின் வேட்பாளர்கள் கனிமொழி, சுனில் ஆனந்த் ஆகியோரைச் சந்தித்து தேர்தல் பணிகள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.

பின்னர் பேசிய அவர் கூறியதாவது, ‘’புதிய தலைமை தமிழ்நாட்டுக்கு வேண்டும் என்பது மக்களின் எண்ணமாக இருக்கிறது. தற்போது ஆட்சியில் தீய சக்தியாகவும், ஊழல் ஆட்சியாகவும் இருக்கக்கூடிய தி.மு.க.வை தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும் என்பதுதான் மக்களின் ஆசையாக உள்ளது. மக்களின் ஆசையை நிறைவேற்றும் ஒரே சக்தி த.வெ.க.தான்.

மக்கள் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளார்கள். அந்த வாக்குகளைச் சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டியது நம்முடைய கடமை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயல்படக்கூடிய ஒரே இயக்கம் த.வெ.க. தான்.

பத்து முறை தோல்வி அடைந்த எடப்பாடி பழனிச்சாமியால் தி.மு.க.வை வீழ்த்த முடியாது. அதற்கு மாற்றாக நோட்டாவிற்கு வாக்களிக்க வேண்டாம், அது வீணாகிவிடும். எனவே அனைத்து ஓட்டுகளையும் த.வெ.க.விற்கு அளிக்க வேண்டும்.

'ஜன நாயகன்'
'ஜன நாயகன்'

தி.மு.க. 8 ஆயிரம் ரூபாய் டோக்கன் கொடுத்துள்ளது. இருந்தாலும் அவர்களால் வெற்றிபெற முடியாது. ஆகவே நாம் யாரும் கவலைப்பட வேண்டாம். மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன் என்று விஜய் கூறியுள்ளார். இதனை வேறு எந்தக் கட்சிகளும் கூற முடியாது.

ஜனநாயகன் திரைப்படத்தை முழுமையாக ஆன்லைனில் வெளியிட்டு, ஜனநாயகத்தை முழுமையாக குழி தோண்டி புதைத்துள்ளார்கள். அதை யார் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும். அந்தத் துறைக்கான அமைச்சர் யார்?, எல்.முருகன். பழனி முருகனை வேண்டுகிறேன், எல்.முருகனைத் தோற்கடித்து டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சிபிஐ, ஜனநாயகன் கசிந்தது போன்ற அத்தனையையும் தாங்கி கொண்டு நமது தலைவர் நமக்காக வருகிறார்” இவ்வாறு அவர் கூறினார்.

சேலம்: பிரசாரத்தின்போது மேடையிலேயே மயங்கிய ராமதாஸ்; என்ன நடந்தது?

பாமக நிறுவனர் ராமதாஸ் சேலம் பள்ளப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழவே அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட்டிருக்கிறார்.ராமதாஸ், சசிகலாபாமகவி... மேலும் பார்க்க

திமுக தொண்டர்களை 'இதற்காக' எதிரிகளும் வியந்து பார்க்கிறார்கள் - ஸ்டாலின் பெருமிதம்

'தேர்தலுக்கு இன்னும் 10 நாள்கள் தான் உள்ளன' என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதி... மேலும் பார்க்க

'4 மணிக்கு முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணையுங்கள்...' - பிரஷர் போடும் திமுக; குழப்பத்தில் அஜிதா!

முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடிக்குச் செல்லவிருக்கிறார். அதற்குள் தவெக நிர்வாகி அஜிதாவை திமுக முகாமுக்கு இழுத்து முதல்வர் முன்னிலையில் கட்சியில் இணைத்து விட வேண்டுமென ஒரு டீம் தீவி... மேலும் பார்க்க

பேச்சுவார்த்தை தோல்வி: "ஈரானுக்கு கெட்ட செய்தி; ஆனாலும் ஒரு நல்ல செய்தி" - அமெரிக்கா சொல்வது என்ன?

அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேசியதாவது..."எங்களுடைய நிபந்தனைகளை ஈரான் ஒத்துக்கொள்ளவில்லை. ... மேலும் பார்க்க

அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை: 21 மணி நேரம் நடந்தும் கைக்கூடாதது ஏன்? Quick Points

கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கிய போர், நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் நல்ல முடிவை எட்டும் என்று உலகமே நினைத்திருந்தது.ஆனால், பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லமாபாத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வா... மேலும் பார்க்க