செய்திகள் :

Epstein File-ல் மோடியின் பெயர்; பூகம்பம் கிளப்பும் அமெரிக்கா; மத்திய அரசின் பதில் என்ன?

post image

எப்ஸ்டீன் ஃபைல் - இது ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்கிற பாலியல் குற்றவாளியின் ஆவணம் ஆகும். இவர் பாலியல் குற்றவாளி மட்டுமல்ல... உலகில் உள்ள பல அரசியல்வாதிகள், பிசினஸ்மேன்களுக்கு சிறுமிகளை பாலியல் உறவிற்காக சப்ளை செய்யும் நெட்வொர்க்கையும் வைத்திருந்திருக்கிறார்.

மேலும், அரசியல், பிசினஸ் என இவர் பல லாபிகளையும் செய்துள்ளார்.

அவர் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் பிசினஸ்மேன்களின் ஆவணமே எப்ஸ்டீன் ஃபைல்.

ஜெஃப்ரி எப்ஸ்டீன்
ஜெஃப்ரி எப்ஸ்டீன்

ட்ரம்ப்

இந்த ஆவணத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெயர் உள்ளது என்று உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க் கடந்த ஆண்டு கூறினார். அதன் பின், மீண்டும் இந்த ஆவணம் பரபரப்பாகப் பேசத் தொடங்கப்பட்டது.

2025-ம் ஆண்டு நவம்பர் மாதம், இந்த ஆவணத்தை வெளியிட அமெரிக்க நாடாளுமன்றம் மசோதா ஒன்றை நிறைவேற்றியது. அதில் ட்ரம்பும் கையெழுத்திட்டார்.

இதையடுத்து இந்த ஆவணத்தில் இடம்பெற்றவர்களின் பெயர்கள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

மோடியின் பெயர்?

சமீபத்தில் வெளியாகிய இந்த ஆவணத்தில் இந்தியப் பிரதமர் மோடியின் பெயரும் இடம்பெற்றிருந்தது. இது இந்தியாவில் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அந்த ஆவணத்தில் 2017-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு மோடி சென்றது எப்ஸ்டீனின் ஆலோசனை என்றும், அது அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்குச் சாதகமாக அமைந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்
ரந்தீர் ஜெய்ஸ்வால்

வெளியுறவுத் துறை விளக்கம்

இதற்கு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் பதில் அளித்துள்ளார்...

"எப்ஸ்டீன் ஃபைல் என்று அழைக்கப்படும் ஆவணங்களில் உள்ள இ-மெயில் அறிக்கையில், பிரதமரின் பெயரும், அவருடைய இஸ்ரேல் பயணமும் இடம்பெற்றிருப்பதைப் பார்த்தோம்.

2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் இஸ்ரேலுக்கு அலுவல் ரீதியாகப் பயணம் மேற்கொண்டார் என்பதைத் தவிர, அதில் இருக்கும் அனைத்துமே குற்றவாளியின் குப்பை வதந்தி.

இவை கடும் கண்டனத்துடன் நிராகரிக்கப்பட வேண்டும்".

நாடாளுமன்றம்: `இடைநீக்கங்கள், பதில் இல்லா கேள்விகள்' - முடங்குகிறதா ஜனநாயகத்தின் இதயம்?

நாடாளுமன்றம்இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, உலகிலேயே மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது. நமது ஜனநாயகத்தின் இதயமாகத் திகழும் நாடாளுமன்றம், மக்களவை மற்றும் ... மேலும் பார்க்க

"2 அரசுகளும் அலைக்கழித்தால் எங்கே போவது?" - நயினார் நாகேந்திரனிடம் குமுறிய அங்கன்வாடி ஊழியர்கள்

காலமுறை ஊதியம், பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10வது நாளாக தொடர் காத்திருப்பு... மேலும் பார்க்க

பாஜக வானதி சீனிவாசன் vs அதிமுக சந்திரசேகர்; கோவை வடக்கு தொகுதி யாருக்கு? தகிக்கும் தேர்தல் களம்!

சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே கோவை வடக்கு தொகுதியில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. பாஜக-வின் சிட்டிங் எம்எல்ஏவான வானதி சீனிவாசன், அதிமுகவில் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் நிழலான சந்திர... மேலும் பார்க்க

"மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?"- மீண்டும் எதிர்வினை ஆற்றிய மாணிக்கம் தாகூர்

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக- காங்கிரஸ் இடையே தொடர்ந்து புகைச்சலாக இருக்கிறது.அதிக சீட்டுகள், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.இந்தச் ச... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் விவசாய மற்றும் தொழிலாளர் சங்கம் போராடுவது ஏன்? 6 புள்ளிகள்|Quick Points

இன்று இந்தியா முழுவதும் தொழிலாளர் சங்கங்களும், விவசாய சங்கங்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. இது நாடு முழுவதுமே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்தப் போராட்டத்திற்கான காரணத்தை 6 புள்ளிகளில் தெரிந்துகொ... மேலும் பார்க்க