செய்திகள் :

Exam web series: ``ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில்..." - வெளிப்படையாகப் பேசிய துஷாரா விஜயன்!

post image

'சார்பட்டா பரம்பரை' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க நாயகியாக உயர்ந்த துஷாரா விஜயன், தற்போது தனது அடுத்த மைல்கல்லாக எக்ஸாம் என்ற வெப் சீரீஸ் உலகிற்குள் தடம் பதிக்கிறார். புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில், இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எக்ஸாம்' (Exam) வெப் சீரீஸின் டிரைலர் வெளியீட்டு நிழச்சி சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகை துஷாரா விஜயன், ``நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

நடிகை துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன்

எனது திரைப்பயணத்தில் அமேசான் பிரைம் தளம் மிகவும் ராசியானது. எனது அறிமுகத் திரைப்படமான 'சார்பட்டா பரம்பரை' நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இப்போது எனது வெப் சீரீஸ் அறிமுகமும் அதே தளத்தில் அமைந்திருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

இந்தத் தொடரில் நான் ஏற்றுள்ள 'ஜான்சி' என்ற போலிஸ் கதாபாத்திரம் ஒரு கடினமான கதாபாத்திரம். வெளியே பார்க்க மிகவும் கண்டிப்பானவளாகவும், பலமானவளாகவும் தெரிந்தாலும், அவளுக்குள் ஒரு மென்மையான பக்கம் உண்டு.

ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்கும்போது அந்த அதிகாரத் தோரணை இயல்பாக வர வேண்டும். அதே சமயம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நடிக்க வேண்டும். இந்தச் சவாலான பாத்திரத்தை இயக்குனர் சற்குணம் மிக அழகாக வடிவமைத்திருந்தார்.

இந்தத் தொடருக்காக நிறைய ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளேன். படப்பிடிப்பின் போது நிறைய அடி வாங்கினேன், பல இடங்களில் காயங்களும் ஏற்பட்டன. ஆனால், அந்த வலிகளைத் தாண்டி ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதை நான் மிகவும் ரசித்தேன். தினேஷ் மாஸ்டர் ஆக்ஷன் காட்சிகளை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார்.

நடிகை துஷாரா விஜயன்
நடிகை துஷாரா விஜயன்

தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பமில்லை. நான் எப்போதும் வெரைட்டியான கதாபாத்திரங்களையே விரும்புகிறேன். ஜான்சி கதாபாத்திரம் ஆரம்பமே ஒரு 'கிரே ஷேட்' கொண்டதாகத் தான் இருக்கும். வாழ்க்கை என்பது கருப்பு வெள்ளை மட்டுமல்ல, சாம்பல் நிறமும் கலந்ததுதான். அந்த மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். துஷாரா என்றாலே சீரியஸான பாத்திரங்களைச் செய்பவர் என்ற பிம்பம் இருக்கிறது. ஆனால், ஒரு கலைஞராகப் நடிப்பிற்குத் தீனி போடும் எந்தப் பாத்திரத்தையும் செய்ய நான் தயார்.

எனது வளர்ச்சிக்குப் பின்னால் இருப்பது என் குடும்பம். நான் ஆறு மாதங்கள் வீட்டில் சும்மா இருந்தாலும், என் பெற்றோர் அடுத்த படம் எப்போது என்று கேட்டு நெருக்கடி கொடுத்ததில்லை. அவர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை பெரியது. பள்ளி நாட்களில் நான் ஒரு சுட்டிப் பெண்ணாக இருந்தேன், இன்று சினிமா எனக்குப் பிடித்தமான ஒரு இடமாக மாறியிருக்கிறது." என்றார்.

மலேசியா ஷூட்டிங்கில் திரண்ட ரசிகர்கள்; அஜித் செய்த மேஜிக் - பில்லா ரீரிலீஸ் விஷ்ணுவர்தன் Exclusive

அஜித்தின் பிறந்தநாள் ஸ்பெஷலாக நாளை 'பில்லா' ரீரிலீஸ் ஆகிறது. 'அமராவதி' அஜித்தை ஸ்டைலிஷ்ஷான அஜித் ஆக மாற்றிய படம் 'பில்லா' விஷ்ணுவர்தனின் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் 'பில்லா' இப்போது கலர்... மேலும் பார்க்க

Kara Review: 90களின் தொடக்கத்தில் ஒரு ஹெய்ஸ்ட் த்ரில்லர்; தடுமாறாமல் கரைசேர்கிறாரா இந்த கரசாமி?

திருவெறும்பூரில், ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடும் கரசாமி (தனுஷ்), போலீஸிடம் சிக்கிக்கொள்கிறார். பிறகு, போலீஸ் பிடியிலிருந்து தப்பி, தன் மனைவி செல்லியுடன் (மமிதா பைஜூ) ஆந்திராவுக்குச் சென்றுவிடுகிற... மேலும் பார்க்க

முடிவுக்கு வந்த நீண்ட நாள் காத்திருப்பு; 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட அனுமதித்த நீதிமன்றம்!

கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ், மாயா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `துருவ நட்சத்திரம்'. 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்தப் படம... மேலும் பார்க்க

29: "இந்தப் பக்கம் 'கர', அந்தப் பக்கம் 'கருப்பு'; அதனால எனக்கு கொஞ்சம்..." - இயக்குநர் ரத்னகுமார்

'மேயாத மான்', 'ஆடை', 'குலு குலு' படங்களை இயக்கிய ரத்னகுமார் '29' படத்தை இயக்கியிருக்கிறார். விது - ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் இப்படத்தை 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் 'ஜீஸ்குவாட்' நிறுவனங்கள் இணைந்... மேலும் பார்க்க

kara: 'ஒடிசாவின் ஜித்து முண்டாவின் முகத்தை தனுஷ் கொண்டு வந்திருக்கிறார்' - மாரி செல்வராஜ் பாராட்டு

விக்னேஷ் ராஜா தயாரிப்பில், தனுஷ், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கர'. ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தப் படம் இன்று (ஏப்ரல்.30) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.இந்நிலையில் 'கர' ... மேலும் பார்க்க

29: "சட்டமன்றத் தேர்தலில் ஏன் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்கவில்லை?" - தெளிவுப்படுத்திய ஆர்.ஜே.பாலாஜி

'மேயாத மான்' ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் '29' திரைப்படம் மே 8-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜின் 'ஜி ஸ்குவாட்' நிறுவனமும், கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பென்ச்' நிறுவ... மேலும் பார்க்க