செய்திகள் :

கடன்களால் கவலைக்கிடமாகும் இந்தியர்களின் நிதி நிலை... விழித்துக்கொள்ளாவிட்டால் ஆபத்து நிச்சயம்!

post image

இந்தியர்கள் பலரின் நிதிநிலை கவலைக்கிடமாகி வருவதாக ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. காரணம், வங்கிகளில் சேமிப்புகள் வெகுவாகக் குறைந்து கடன்கள் அதிகரித்துவருவதே.

2025 - 26 நிதியாண்டில் வங்கிகளின் டெபாசிட் வளர்ச்சி 9% -11% ஆக உள்ள நிலையில், கடன்களின் வளர்ச்சியோ 14% ஆக உயர்ந்துள்ளது. சேமிப்பு மற்றும் கடன் இடையே காணப்படும் 3% - 5% இடைவெளி, ஆபத்தான போக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவின் நிதிப் பழக்கவழக்கங்கள் மிக வேகமாக மாறி வருகின்றன. சேமிப்பு என்பது பிரதானமாக இருந்தது மாறி, இன்று பெரும்பாலான மக்கள் எல்லாவற்றுக்கும் கடன் வாங்கும் பழக்கத்துக்கு மாறியுள்ளனர். குறிப்பாக, தனிநபர் கடன்கள், கார் கடன்கள், தங்க நகைக் கடன்கள் மற்றும் பிற நுகர்வோர் கடன்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்ப வசதிகள் இன்று கடன் வழங்கலை மிக எளிதாக்கிவிட்டன. சில நிமிடங்களில் கடன் கிடைப்பது, வட்டி விகிதங்கள் குறைந்திருப்பது, ‘இப்போது வாங்கு, பிறகு பணம் கொடு’ போன்ற வசதிகள் மக்களைக் கடன் வாங்கிச் செலவு செய்யத் தூண்டுகின்றன.

இதில் மிகவும் கவலைக்குரிய விஷயம், அதிக அபாயமுள்ள கடன்கள் (Unsecured Loans) ஆண்டுக்கு 17%க்கும் மேல் வளர்ச்சியடைந்து வருவது. இவை எதிர்காலத்தில் வங்கிகளுக்கு வாராக்கடன் சுமையை உருவாக்குவதோடு, பல குடும்பங்களை நிதி நெருக்கடியில் தள்ளும் அபாயத்தையும் கொண்டுள்ளது.

இன்றைய வாழ்க்கைமுறை மக்களின் பண மேலாண்மையைத் தலைகீழாக மாற்றிவிட்டது. கடன் என்பது அவசரத் தேவைக்காக மட்டுமல்லாது, சகஜமான பழக்கமாக மாறிவருகிறது. இது தொடர்ந்தால் தனிநபர்களின் நிதிச் சமநிலை மட்டுமன்றி, நாட்டின் மொத்த பொருளாதாரமும் பாதிக்கப்படும்.

ஏஐ தொழில்நுட்பத்தின் ஆதிக்கம் எல்லா துறைகளிலும் வேலை இழப்புகளை அதிகரித்துள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கும் வருமான உயர்வு இல்லாத நிலையே உள்ளது. இச்சூழலில், அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு, மருத்துவ அவசரங்கள் ஆகியவை மக்களை மீள முடியாத நிதி நெருக்கடியில் தள்ளக்கூடியவை. இந்த அபாயத்தை உணர்ந்தே ரிசர்வ் வங்கியும், வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. டெபாசிட்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க நடவடிக்கைகள் எடுக்கவும், கடன்களை வழங்குவதில் பொறுப்புடன் செயல்படவும் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு தனிநபரும் இது சவாலான காலகட்டம் என்பதை உணர்ந்து தங்களது நிதிநிலையை மேம்படுத்திக்கொள்ள தயாராக வேண்டும். வீட்டுக் கடன், கல்விக் கடன் போன்ற அத்தியாவசிய கடன்களை மட்டுமே பெற்று, நுகர்வு சார்ந்த கடன்களைக் குறைக்க வேண்டும். ‘வருமானத்தில் முதல் செலவு சேமிப்பு’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொள்ள வேண்டும்.

நம் குடும்பத்தின் எதிர்காலமும் நாட்டின் நிதிநிலையும் சிறப்பாக இருக்க, இது காலத்தின் கட்டாயம்!

- ஆசிரியர்

NRI Corner 12 : இந்தியா திரும்பும் முன் மாதம் ₹100000 'பாஸிவ் இன்கம்' உருவாக்குவது எப்படி?

வெளிநாடுகளில், குடும்பத்தைப் பிரிந்து, பல வருடங்களாக உழைக்கும் 40+ வயதுள்ள ஒவ்வொரு NRI-க்கும் ஒரு ஆழமான கனவு உண்டு. "இன்னும் சில வருஷத்துல ஊருக்குப் போயிடணும். எந்த ஆபீஸ் டென்ஷனும் இல்லாம, நம்ம ஊர்ல, ... மேலும் பார்க்க

ஒரே க்ளிக்கில் கடன், அதே வேகத்தில் பறிபோகும் உயிர்… என்னதான் தீர்வு?

கேரளாவைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில், வெறும் ரூ.13,500 கடன்தான் அவர் உயிரைப் பறித்திருக்கிறது என்ற உண்மை வெளிவந்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய... மேலும் பார்க்க

டாக்ஸ் பயத்தில் டாலரைத் தூங்க விடுகிறீர்களா? - US NRI-களுக்கான ₹5 கோடி சீக்ரெட்!

“H1B விசா எக்ஸ்டென்ஷன் வந்திருச்சா?” என்ற பக்-பக் டென்ஷனும், “இன்னும் ஒரு மூணு வருஷத்துல பணத்தைச் சேர்த்துட்டு இந்தியாவுக்கே நிரந்தரமா திரும்பிடலாம்” என்ற அந்தப் பொய்யான வாக்குறுதியும்தான் அமெரிக்க வா... மேலும் பார்க்க

உங்களின் ஒரு ஓட்டு... உங்கள் பணத்தின் தலையெழுத்து | Election and Economy

மனித மூளை எப்போதுமே சிறிய எண்களை உதாசீனப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல கோடிப் பேர் வாக்களிக்கும் ஒரு தேசத்தில், "என் ஒற்றை வாக்கு என்ன மாயத்தைச் செய்துவிடப் போகிறது?" என்ற நினைப்பு நம்மி... மேலும் பார்க்க

பெண்களே, `ரெகுலர்' சேமிப்பை நிறுத்துங்கள்! - ₹1 கோடி சேர்க்கும் சீக்ரெட் இதோ!

தோழிகளே! எப்படி இருக்கீங்க? குடும்பத்துல எந்தச் செலவாக இருந்தாலும், கொடுத்த பணத்துல கச்சிதமா பட்ஜெட் போட்டு, மாசக் கடைசியில கொஞ்சப் பணத்தை மிச்சம் பிடிச்சு அஞ்சறைப் பெட்டியிலோ, பீரோவிலோ சேமித்து வைப்ப... மேலும் பார்க்க

பறிபோகும் வேலை, அச்சத்தில் இளைஞர்கள்... கேள்விக்குறியாகும் இந்தியாவின் எதிர்காலம்?!

சமீபத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்று ஆயிரக் கணக்கான இந்திய இளைஞர்களின் கனவைத் தகர்த்துள்ளது. இந்த நிறுவனம் உலகளவில் பணிநீக்கம் செய்துள்ள 30,000 ஊழியர்களில் 12,000 பேர் இந்தி... மேலும் பார்க்க